”
Arul.2009/FB/#68953
செய்தி வெளியீடு எண்: 744
நாள்: 01.05.2026
செய்தி வெளியீடு :
தமிழ் நாடு அரசின் சார்பில் சித்திரை முழு நிலவு நாளில் தமிழ் பண்பாட்டுச் சின்னமாகிய கண்ணகி மற்றும் ஒல்காப் புகழ் தொல்காப்பியர் திருவுருவச்சிலைக்கும் மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது
தமிழ்நாடு அரசின் சார்பில்
“ஒரு மாமணியாய் உலகிற்கு ஓங்கிய திருமாமணி” என இளங்கோவடிகள் போற்றிய சிலப்பதிகாரத் தலைவி தமிழ் பண்பாட்டுச் சின்னமாகிய கண்ணகியின் பெருமையை உணர்த்தும் வகையில் சித்திரை முழுநிலவு நாளான இன்று 01.05.2026 சென்னை கடற்கரை காமராசர் சாலையில் அமைந்துள்ள கண்ணகியின் திருவுருவச் சிலைக்கு மற்றும் ஒல்காப் புகழ் தொல்காப்பியர் திருவுருவச்சிலைக்கும் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அரசு செயலாளர் அவர்கள் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.
தமிழ் பண்பாட்டுச் சின்னமாகிய கண்ணகியின் புகழைப் பொதுமக்களும் போற்றும் வகையில் தமிழ்நாடு அரசின் சார்பில் ஆண்டுதோறும் சித்திரைத் திங்கள் முழுநிலவு நாளன்று சென்னை மெரினா கடற்கரை காமராசர் சாலையில் அமைந்துள்ள தமிழ் பண்பாட்டுச் சின்னமாகிய கண்ணகி சிலைக்கு மாலை அணிவித்து மலர்கள் தூவி மரியாதை செய்யப்படும்.
அதனைத் தொடர்ந்து ஒல்காப் புகழ் தொல்காப்பியத்தை இயற்றியவர் தொல்காப்பியர் சிலைக்கு மாலை அணிவித்து மலர்கள் தூவி மரியாதை செய்யப்பட்டது.
தொல்காப்பியம் ஒரு தலைசிறந்த இலக்கண நூலாகும்.
தொல்காப்பியம்,
எழுத்ததிகாரம் (483 நூற்பாக்கள்); சொல்லதிகாரம் (463 நூற்பாக்கள்); பொருளதிகாரம் (664 நூற்பாக்கள்)
ஆகிய மூன்று அதிகாரங்களைக் கொண்டது. ஒவ்வொரு அதிகாரத்திலும் ஒன்பது இயல்கள் என 27 இயல்களில் 1610 நூற்பாக்களைக் கொண்டதாகும்.
1963 இல் பேரறிஞர் அண்ணா, தொல்காப்பியத்தின் ஆங்கில மொழியாக்கத்தின் முன்னுரையில், தனக்கே உரிய எழிலார்ந்த நடையில் தொல்காப்பியத்தைப் பற்றி குறித்த வரிகள் என்றென்றும் நீடித்து நிலைத்திருக்கும்.
தொல்காப்பியம் வழங்கிய தொல்காப்பியரே தமிழுக்கு
ஆதி பகவன் என்று சொல்வது மிகையாகாது.
தொல்காப்பியரின் திருவுருவச் சிலைக்கு ஆண்டுதோறும் சித்திரை முழுமதி நாள் அன்று தமிழ்நாடு அரசின் சார்பில் மலர் வணக்கம் சென்னையிலும் கன்னியாகுமரியில் உள்ள காப்பியக்காட்டிலும் செய்யப்பட்டு வருகிறது.
இன்று 01.05.2026 தமிழ்நாடு அரசின் சார்பில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அரசு செயலாளர், செய்தித்துறையின் கூடுதல் இயக்குநர்கள், தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர், அரசு உயர் அலுவலர்கள். தமிழ்ச் சான்றோர்கள், பொது மக்கள் தமிழ்ப் பண்பாட்டுச் சின்னமாகிய கண்ணகி
ஒல்காப் புகழ் தொல்காப்பியர் திருவுருவச்சிலைக்கும் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செய்தார்கள்.
வெளியீடு: இயக்குநர், செய்தி மக்கள் தொடர்புத்துறை, சென்னை-9

Add a Comment