”
Arul.2009/FB/#68941
தினத்தந்தி – 25 3 2026
பக்கம் எண் : 8
ஔவையின் செந்தமிழ்ப் புதையல்
ஆக்கம்… ஔவை அருள்
வெளியீடு
ஸ்ரீராம் பாரதி கலை இலக்கியக் கழகம்
மகாகவி பாரதியாரின் 144 ஆம் பிறந்தநாள் விழாவில் 21 2 2026 அன்று வெளியிடப்பட்டது
அச்சிடோர்
நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பிரைவேட் லிமிடெட்
விலை ரூபாய் 500
424 பக்கங்கள்
தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தரான
அவ்வை நடராசனின் தமிழ்ப் புலமையை, அவரது மகன் அவ்வை அருள் தொகுத்துள்ள இந்நூல் வெளிப்படுத்தி இருக்கிறது.
அவ்வை நடராசன் பல நூல்களுக்கு எழுதிய அணிந்துரைகள், வாழ்த்துரைகள், கட்டுரைகள், நேர்காணல்கள் ஆகியவை தரப்பட்டுள்ளன.
இவற்றின் மூலம் அவ்வை நடராசனின் தமிழ் மொழிப் புலமை எவ்வாறு சிறந்து விளங்குகிறது என்பதைத் தெரிந்து கொள்ளலாம்.
தஞ்சைப் பெரிய கோவிலைக் கட்டிய சோழ மன்னர் ராஜராஜனின் சிறப்புகள், மற்றும் ராஜ ராஜனுக்கு உடந்தையாக இருந்த ஆளுமைகள் ஆகியோர் பற்றிய வியப்பான தகவல்களையும் அவ்வை நடராசன் வெளியிட்டு இருக்கிறார்.
அவ்வை என்ற பெயருக்கான காரணம், கருணாநிதி, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகிய மூன்று முதல் அமைச்சர்களுடன் பணியாற்றிய அனுபவம் போன்ற தகவல்களையும் தந்து இருக்கிறார்.

Add a Comment