”
Arul.2009/FB/#68939
நித்திலக்குவியல்
தமிழ் மாத இதழ்
மார்ச் 2026
NITHILA KOVIYAL Tamil Monthly
பக்கம் எண்: 29, 30
தாமரைத்திரு’ விருது பெற்ற ஔவை நடராசன் அவர்களின் புகழ் வாழ்க!
ஆலந்தூர் மோகனரங்கன்
நடந்துவரும் நடராசர் நடனமெல்லாம் தமிழ்நடனம்! நாடே சொல்லும்!
அடர்ந்தவழிக் காடுகளில் அலையாமல் அருந்தமிழை ஆய்ந்து வென்றார்! தொடர்ந்தவழி தமிழ்வழியாய் துலங்கியதால் ‘தாமரைத்திரு’ தோன்றிற் றாமே!
கடந்துவந்த வழியெல்லாம் காரிருளை மாய்த்துவந்த கதிரோன் ஆனார்!
யாருக்கும் தெரியாமல் யார்யாரோ வாழ்கின்றார்! யாழ்முன் நிற்கும்! நீருக்குள் நிலமிருக்கும் நிலத்தின்மேல் நீரிருக்கும்!
நிலமும் நீரும்
ஊருக்குள் சேர்ந்ததுபோல் உலவிவரும் ஆண் ஔவை ஒருவர் கண்டோம்!
பாருக்குள் இவர்பணியால் பைந்தமிழ்த்தாய் மகிழ்கின்றாள்! பாடு கின்றாள்!
ஔவையார் வாழ்ந்திருந்த அக்காலம் நம்நெஞ்சில் அழியாக் காலம்!
ஔவையார் குப்பத்தை அறியவைத்தார் துரைசாமி! அவர்பின் வந்த ஔவையார் நடராசர் ஆற்றலினால் செயல்திறத்தால் அரிய அண்ணல்!
இவ்வையம் என்றென்றும் இம்மூவர் புகழ்வாழ்த்தி இன்பம் காணும்!

Add a Comment