”
Arul.2009/FB/#68937
கோலங்கள் அழிவதில்லை
என் அம்மாவுக்கு (மருத்துவமாமணி தாரா நடராசன்) நாள்தோறும் வீட்டு வாயிலில் கோலமிடுவது மட்டற்ற மகிழ்ச்சியைத் தரும்.
அவரின் அந்த விருப்பத்தைப் போற்றும் வகையில், தாரகை இல்லத்தின் முகப்பில் திருமதி ஜெயந்தி அவர்களின் கைவண்ணத்தில் ஒரு பெரிய வண்ணக் கோலத்தை வடிவமைத்தேன்.
அதைக் கண்ட போது அம்மாவின் முகத்தில் அரும்பிய புன்னகையும் நெகிழ்ச்சியும் இன்றும் என் நினைவில் பசுமையாக நிலைத்திருக்கின்றன.
கால ஓட்டத்தில், சில ஆண்டுகளுக்குப் பிறகு தேர்ந்த வண்ணம் பூசுவோர்களைக் கொண்டு அந்த வண்ணக் கோலத்தைப் புதுப்பித்தேன்.
என் அப்பா
(பத்மஸ்ரீ ஔவை நடராசன் ) அடிக்கடி சொல்வார்:
”ஒரே கோலத்தோடு தேங்கிவிடாதீர்கள்; காலமாற்றத்திற்கு ஏற்பக் கோலங்களை மாற்றிக்கொண்டே இருங்கள்.
அப்போதுதான் இந்த உலகுக்கு உங்கள் தனித்தன்மையும், உங்கள் வாழ்வின் பரிணாம வளர்ச்சியும் புரியும்.”
’தந்தை சொல் மிக்க மந்திரமில்லை’ என்னும் முதுமொழியைக் கருத்திற் கொண்டு சென்ற மார்ச் திங்கள் பன்னிரெண்டாம் நாளன்று ‘தாரகை’ இல்லத்தின் முகப்பில் புதிய பொலிவுடன்,திரு தமிழ்வாணன் வாயிலாக வண்ணக்கோலம் தீட்டப்பட்டுள்ளது.
பழைய நினைவுகளின் அடித்தளத்தில், புதிய மாற்றத்தோடு மிளிர்கிறது.

Add a Comment