”
Arul.2009/FB/#68934
மின்னல் வேக ஓவியமும்,
மாறாத நினைவுகளும்!
கடந்த 26.03.2026 அன்று சென்னையில் நடைபெற்ற ஓவியக் கண்காட்சியொன்றில் பங்கேற்று, மேடையில் ஓவியர்களைப் பாராட்டி உரையாற்றிக் கொண்டிருந்தேன்.
அப்போது வருகை புரிந்திருந்த விருந்தினர்களைக் கவனித்தபடி பேசியபோது, ஓர் அதிசயம் நிகழ்ந்தது!
நான்காம் வரிசையில் அமைதியாக அமர்ந்திருந்தார், ‘பத்மஸ்ரீ’, ‘செவாலியர்’ உயர்திரு.
தோட்டா தரணி அவர்கள்.
அவரை அடையாளம் கண்டுகொண்ட கணமே, மேடைக்கு வருமாறு அன்புடன் அழைத்தேன்.
அவர் மேடைக்கு வந்தபோது, ஒரு சுவையான நினைவோடையைப் பகிர்ந்துகொண்டேன்.
அதனை அவர் சற்றும் எதிர்பார்க்கவில்லை.
நான் பேசி முடித்ததும்,
வியக்கத்தக்க நினைவாற்றல்!
அந்தத் தருணத்தை இன்றும் இவ்வளவு துல்லியமாகப் பகிர்கிறீர்களே!”
என்று வியப்புடன் கேட்டார்.
ஆம், சரியாக 33 ஆண்டுகளுக்கு முன்பு…
பெரும்நிறுவனத்திற்கு விளம்பரப் பணி ஆற்றிக்கொண்டிருந்த காலமது.
அந்நிறுவனத்தின் தொடக்க விழாவிற்கு வருகை தரும் தலைமை விருந்தினருக்கு, ஒரு சிறப்பான பரிசுப் பொருளை வழங்க நிறுவனம் விரும்பியது.
அந்நிறுவனத்தின் ஆலை வரைபடத்தை ஒரு கலைப்படைப்பாக மாற்ற எண்ணினேன்.
அப்போது இளமைத் துடிப்புடன், யாரிடமும் எவ்வித அறிமுகமுமின்றி, நேராக ஏ.வி.எம். திரைப்படக் கூடத்திற்குச் சென்று ஓவியத் திலகம் தோட்டா தரணி அவர்களைச் சந்தித்தேன்.
நிறுவனத்தின் நோக்கத்தைத் தெரிவித்த மாத்திரத்திலேயே, ஒரு அழகான தாளில் அவ்வாலையின் வரைபடத்தை மிக நேர்த்தியான, கண்கவர் கோட்டோவியமாக மின்னல் வேகத்தில் வரைந்து காட்டினார்.
மறுநாளே நிறுவனத்தார் அதற்கு இசைவு தெரிவிக்க, அந்த வரைபடம் ஒரு சிறந்த கலை நுணுக்க ஓவியமாக உருப்பெற்றது.
அந்நிறுவனத்தார் அவரைப் பாராட்டி மகிழ்ந்தனர்.
பல தசாப்தங்களுக்குப் பிறகு, மீண்டும் அந்த ஓவிய மன்னரை ஓவியக் கண்காட்சியில் கண்ட போது, அந்தப் பசுமையான நினைவுகளை அங்கிருந்த அனைவரிடமும் பகிர்ந்து மகிழ்ந்தேன்.
உரையாடலின் ஊடே, ‘அஞ்சலி’ திரைப்படத்திற்காக அவர் உருவாக்கிய அந்தப் புகழ்பெற்ற குடியிருப்பு வளாகக் கட்டமைப்பு குறித்து வினவினேன்.
“வெறும் ஐந்தே நாட்களில் கட்டமைப்பை அமைத்தேன்,” என்று அவர் எளிமையாகக் கூறியது என்னை வியப்பில் ஆழ்த்தியது.
அவருடன் மேடையில் இருந்த அந்த இனிய தருணங்களின் ஒளிப்படப் பதிவு.

Add a Comment