”
Arul.2009/FB/#68928
எங்கும் தமிழ்! எதிலும் தமிழ்!
தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகத்தில் 1.4.2026 2.4.2026 ஆகிய நாள்களில் ஆட்சி மொழித் திட்டச் செயலாக்க ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகத்தில் உள்ள 8 பிரிவுகளில் 24 இருக்கைகளில் பேணப்படும் வருகைப்பதிவேடு, பயணநிரல், அனுப்பப்பட்ட கடிதங்கள், காலமுறை அறிக்கைகள், அலுவலக ஆணைகள், செயல்முறை ஆணைகள், முத்திரைகள்,
பெயர்/தகவல் பலகைகள், கோப்புகள், கணினியில் தமிழ் மென்பொருள்கள் பயன்பாடு, வலைதளம் மற்றும் பிற பதிவேடுகளைத் தமிழ் வளர்ச்சித் துறை அலுவலர், பணியாளர்கள் இரண்டு நாள்கள் ஆய்வு செய்து குறிப்புகள் எடுக்கப்பட்ட ஆய்வறிக்கையின் தொடர்பாக
02.04.2026 வியாழக்கிழமை காலை 11.30 மணியளவில் தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் திரு. குமார் ஜெயந்த் இ.ஆ.ப. அவர்களுடன் ஆட்சி மொழித் திட்டச் செயலாக்கம் குறித்து கலந்துரையாடிய பிறகு அலுவலர்கள் மற்றும் பணியாளர்களிடையே குறிப்பாக புதிதாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வாயிலாகத் தெரிவு செய்யப்பெற்று பணிப் பொறுப்பேற்றுள்ள இளைஞர்களிடையே ஆட்சி மொழித் திட்டச் செயலாக்கத்தின் முக்கியத்துவம் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டதோடு அதனை செயல்படுத்துவதற்கான குறிப்புக்களுடன் உரையாற்றினேன்
நிறைவாக தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகப் பொது மேலாளர் திரு.துரைராஜ் அவர்களிடம் ஆய்வு நாள் அறிக்கை அளிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் தமிழ் வளர்ச்சித் துறையின் உதவி இயக்குநர்
திரு. எ. பழனி மற்றும் கண்காணிப்பாளர்
திருமதி வசந்தகுமாரி
ஆகியோர் உடனிருந்தனர்.

Add a Comment