”
Arul.2009/FB/#68911
எங்கும் தமிழ்!எதிலும் தமிழ்!
தமிழ்நாடு அரசின் பொருளியல் மற்றும் புள்ளியியல் துறை அலுலகத்திலுள்ள
முப்பத்து ஏழு பிரிவுகளில்
தொண்ணூற்று ஏழு இருக்கைகளிலுள்ள 819 கோப்புகள் மற்றும் 130 பதிவேடுகளைத் தமிழ் வளர்ச்சித் துறை உதவி இயக்குநர்கள் மூன்று நாள்கள் ஆய்வு செய்து குறிப்புகள் எடுக்கப்பட்ட ஆய்வறிக்கையின் தொடர்பாக 20.03.2026 வெள்ளிக்கிழமை மாலை 4.00 மணியளவில் நடைபெற்ற
கலந்தாய்வுக் கூட்டத்தில் துறையின் அலுவல் பெருமக்கள் முன்னிலையில் உரையாற்றினேன்.
பொருளியல் மற்றும் புள்ளியியல் துறையின் கூடுதல் இணை இயக்குநர் திரு. இளஞ்செழியன், நிதி ஆலோசகர் திருமதி ச.மகேஸ்வரி,
இணை இயக்குநர் திருமதி பி.ஷெரினா,
தமிழ் வளர்ச்சித்துறையின் உதவி இயக்குநர்களான திருமதி வே. வினோதராணி, திருமதி கி.இரா.சாந்தி, திருமதி கா. சித்ரா, திருமதி மு. சாந்தி, திருமதி இரா.அருட்செல்வி ஆகியோர்
உடன் இருந்தனர்.
இக்கூட்டத்தில் ஓர் இனிய திருப்பமாக நடைபெற்ற நிகழ்வு
மேடையில் இணைந்திருந்த
தமிழ்நாடு அரசின் பொருளியல் மற்றும் புள்ளியியல் துறையின் கூடுதல் இணை இயக்குநர் திரு இளஞ்செழியன்
இளங்கலை பொருளாதாரம் (1986-1989) மற்றும் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் இயக்குநர் ஔவை அருள் இளங்கலை தமிழ் இலக்கியம் (1985-1988)
இரண்டு பேரும் மாநிலக் கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Add a Comment