”
Arul.2009/FB/#68904
செய்தி வெளியீடு எண்: 694
: 13.03.2026
செய்தி வெளியீடு
தமிழ் இணையக் கல்விக்கழகத்தின்
மூன்று சிறப்பு இணையப் பக்கங்கள் வெளியீடு .
தமிழ்நாடு அரசின் தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறையின் கீழ் இயங்கிவரும் தமிழ் இணையக் கழகத்தால் உருவாக்கப்பட்டுள்ள ‘தமிழில் பெயர்கள்”, “நாட்டுடைமை நூல்கள்”, “தமிழ்நாடு பண்பாட்டு மின் நிலவரை எடு’ ஆகிய மூன்று சிறப்பு இணையப் பக்கங்களை மாண்புமிகு தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் முனைவர். பழனிவேல் தியாக ராஜன் அவர்கள் இன்று (13.03.2026) தலைமை செயலகத்தில் வெளியிட்டுள்ளார்.
குழந்தைகளுக்குத் தமிழ்ப் பெயர்கள்
குழந்தைகளுக்குத் தமிழ்ப் பெயரைச் சூட்டுங்கள் என முதலமைச்சர் முன்வைத்த கோரிக்கைக்கு வரவேற்பு கிடைத்ததைத் தொடர்ந்து, தமிழ்ப் பெயர்களுக்கான வலைத்தளம் ஒன்றை உருவாக்கினால் சிறப்பாக இருக்கும் என எக்ஸ் தளத்தின் வழியாக முதலமைச்சரிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள். குழந்தைகளுக்கான அழகிய தமிழ்ப் பெயர்களும் அதற்கான பொருள் விளக்கங்களும் அடங்கிய இணையப்பக்கம் தமிழ் இணையக் கல்விக்கழகம் வாயிலாகத் தொடங்கப்படும் என அறிவித்தார். அதன்பேரில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் சீரிய வழிகாட்டுதல்களின் படி உருவாக்கப்பட்டுள்ள அன்புக் குழந்தைகளுக்குத் ‘தமிழில் பெயர்கள் (https://tamildigitalibrary.in/tamilnames) சிறப்பு இணையப் பக்கம் குழந்தைகளுக்குச் சூட்டுவதற்கான தமிழ்ப் பெயர்களையும் அவற்றுக்கான விளக்கங்களையும் கொண்டுள்ளது.
நாட்டுடைமை நூல்கள்
மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் ஆட்சிப் பொறுப்பேற்றது முதல் அதிக எண்ணிக்கையிலான தமிழறிஞர்கள், எழுத்தாளர்களின் நாட்டுடைமையாக்கப்பட்டு வருகின்றன.
இந்நூல்களைப் பெருமளவில் வாசகர்களிடம் கொண்டுசேர்க்க வேண்டும் என்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அறிவுறுத்தியதன் பேரில் தமிழ் வளர்ச்சித் துறை நிதிநல்கையுடன் நாட்டுடைமை நூல்கள்’ சிறப்பு இணையப் பக்கம் (https://tamildigitallibrary.in/nationalisedbooks) உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த சிறப்பு இணையப் பக்கத்தில் 1963 ஆம் ஆண்டு முதல் 2025 ஆம் ஆண்டு வரையில் நாட்டுடைமையாக்கப்பட்ட ஆசிரியர்களின் வாழ்க்கை வரலாறு உள்ளிட்ட விவரங்கள். அவர்களின் நூல் தொகுப்புகள் ஆகியவை இடம்பெற்றுள்ளன.
இச்சிறப்பு இணையப் பக்கம் தொடர்ந்து மேம்படுத்தப்படும்.
பண்பாட்டு மின் நிலவரை எடு
தமிழ்நாடு பண்பாட்டு மின் நிலவரை ஏடு (https//tamilculturalatias.in) திட்டத்தில். முதல் கட்டமாக மதுரை, விருதுநகர், திண்டுக்கல், சிவகங்கை, தேனி ஆகிய மாவட்டங்களில் உள்ள கோவில்கள். தொல்லியல் தனங்கள். வரலாற்று நினைவுச் சின்னங்கள், கைவினைக் கலைகள் முதலியவற்றின் விவரங்கள், புகைப்படங்கள், காணொலிகள் ஆகியவை இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகின்றன.
சுற்றுலாப் பயணிகளுக்கும் பண்பாட்டு ஆர்வலர்களுக்கும் பயன்படும் வகையில் இத்தளம் தொடர்ந்து மேம்படுத்தப்படும்.
சிறப்பு இணையப் பக்கங்கள் வெளியீட்டு நிகழ்வில், தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை முதன்மைச் செயலாளர் திரு. பிரஜேந்திர நவ்நீத் இ.ஆ.ப.. எல்காட் மேலாண் இயக்குநர் மரு. கே.பி. கார்த்திகேயன். இ.ஆ.ப. எல்காட் செயல் இயக்குநர் திருமதி வி. தீபனாவிஸ்வேஸ்வரி. இ.ஆ.ப. தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் முனைவர் ந. அருள், தமிழ் இணையக் கல்விக்கழக இயக்குநர் (பொ) திரு. ரெ. கோமகன் உள்ளிட்ட அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
வெளியீடு: இயக்குநர், செய்தி மக்கள் தொடர்புத்துறை, சென்னை – 600 009 …

Add a Comment