POST: 2026-02-27T10:28:27+05:30

”
Arul.2009/FB/#6889

செய்திப்பரல்

சென்னை குடியரசு தின விழாவில் பங்கேற்ற தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் மாணவர்களுக்கு பாராட்டு

தஞ்சாவூர், பிப். 4:

கடந்த ஜனவரி 26ம் தேதி
சென்னையில் நடைபெற்ற குடியரசு தின விழாவில், நாட்டு நலப்பணித் திட்டத்தின் சார்பாக 102 மாணவர்கள் அணிவகுப்பில் கலந்து கொண்டனர்.

அந்த அணிவகுப்பில் தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தைச் சார்ந்த மூன்றாம் ஆண்டு இலக்கியத்துறை மாணவர்கள் அபிலாஷ் மற்றும் பிரிய தர்ஷினி, ஆகிய இருவரும் கலந்து கொண்டு சிறப்பாக பங்காற்றினர்.

இவ்விரண்டு மாணவர்களுக்கும் தமிழ்ப் பல்கலைக்கழகம் சார்பாக,2.2.25 அன்று தஞ்சாவூரில் துணைவேந்தர் பொறுப்புக்குழு உறுப்பினர்கள் அருள், பாரதஜோதி, பதிவாளர்(பொ) பன்னீர்செல்வம், நாட்டுநலப் பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர் வீரமணி மற்றும் திட்ட ஒருங்கிணைப்பாளர் வெங்கடேசன் ஆகியோர் பாராட்டு தெரிவித்தனர்.

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *