POST: 2026-02-14T10:38:34+05:30

”
Arul.2009/FB/#6876

எங்கும் தமிழ்!எதிலும் தமிழ்!

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுலகத்திலுள்ள வருவாய்த் துறையில் 13 பிரிவுகளில் 44 இருக்கைகள் உள்ளன.

நாற்பத்து நான்கு இருக்கைகளிலுள்ள நானூற்று ஐம்பது கோப்புகளை தமிழ் வளர்ச்சித் துறை அலுவலர்கள் மற்றும் பணியாளர்களால் மூன்று நாள்கள் ஆய்வு செய்யப்பட்டு குறிப்புகள் எடுக்கப்பட்ட நுண்ணாய்வுக் குறிப்பினை வியாழக்கிழமை
12.02.2026 பிற்பகல் 3.15 மணியளவில் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பங்கு கொண்டு ஆய்வறிக்கையினை திருப்பூர் மாவட்ட வருவாய் அலுவலர் திரு. க. கார்த்திகேயன் அவர்களிடம் வழங்கி

கோப்பு நடவடிக்கைகள் யாவும் அனைத்து நிலையிலும் நூற்றுக்கு நூறு தமிழிலேயே அமைய வேண்டும்.

அரசு ஆணைகள், மற்றும் அறிவுரைகளால் மட்டுமே ஆட்சி மொழித் திட்டத்தை வெற்றிகரமாக நிறைவேற்றிட முடியாது.

அலுவலர்களின் ஈடுபாடு, ஆர்வம், தேடல், பணித்திறன் மூலம்தான் திட்டங்களின் இலக்கை நாம் அடைய முடியும்
என்பன போன்ற பல தகவல்களை இயல்பாக விரித்துரைத்தேன்.

அரிய சொற்களையும், தேவைக்கு உரிய சொற்களையும் பெற,
ஆட்சி மொழி அகராதியைப் பயன்படுத்துவதன் அவசியத்தையும் இன்றைய
கணினியுலகில் தமிழ்த்தட்டச்சு முறைமைகள் எவ்வளவு எளிதாக அமைந்துள்ள தகவல்களை எல்லாம் தெரிந்து கொள்ளுங்கள் என்று சொல்லி வலியுறுத்தினேன்.

ஆட்சி மொழிச் சட்டம் நிறைவேற்றப்பட்டு எழுபதாண்டுகளாகியும், அகம் பூக்கும் ஆக்கம் முழுமை பெறாதிருப்பதை முன்வைத்து ஆட்சி மொழி ஆய்வு கலந்தாய்வுக் கூட்டத்தில் உரையாற்றினேன்.

நிகழ்வில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) திரு. சு.மகாராஜ், தமிழ் வளர்ச்சித் துணை இயக்குநர் திரு. வ. சுந்தர் மற்றும் வருவாய்த் துறை, கருவூலக் கணக்குத் துறை, ஊராட்சித் துறையின் அலுவலர் மற்றும் பணியாளர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.

நிகழ்விற்கு பின் தமிழ் வளர்ச்சித் துறையின் துணை இயக்குநர் தலைமையில் இயங்கும் அலுவலகத்தில் குழு படமாக அலுவலகப் பணியாளர்களுடன்.

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *