Arul.2009/FB/#6849
எங்கும் திருக்குறள்!!
எப்போதும் தமிழ்க்குரல்!!
தமிழ் வளர்ச்சித் துறையின் திருக்குறள் வாரம் விழாவையொட்டி சென்னை மாநகராட்சி நிருவாகம் சார்பாக இன்று சனவரி 18 ஞாயிற்றுக்கிழமை மாலை 6:30 மணிக்கு இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் இசையமைத்த திருக்குறளும் தமிழ் இலக்கியப் பாடல்களும் எனும் இசைவடிவிலான இன்னிசை நிகழ்ச்சி சென்னை மெரினா கடற்கரையின் நீச்சல் குளம் அருகில் நடைபெற உள்ளது.
திரு ஜேம்ஸ் வசந்தன் தனது முதல் படமான ‘சுப்ரமணியபுரம்’ படத்தில் “கண்கள் இரண்டால்” பாடல் மூலம் ஒட்டுமொத்த தமிழ் இசை ஆர்வலர்களை கட்டி இழுத்தவர்,
ஈசன், பசங்க, நாணயம் போன்ற பல வெற்றிப் படங்களுக்குத் தன் இசையால் சொக்க வைத்தவர்.
இவர் உருவாக்கியுள்ள ‘தமிழ் ஓசை’ என்னும் பிரம்மாண்ட சேர்ந்திசைக் குழுவில் முப்பது பயிற்சிப்பெற்ற இளம் பாடகர்களைக் கொண்ட ‘தமிழ் ஓசைக்குழு, புதிய பரிமாணத்தில் தமிழ் உணர்வை இசையால் வளர்த்து வருகிறது.
கடந்த ஆறு ஆண்டுகளுக்கும் மேலாகத் தமிழ்நாடு மட்டுமன்றி, இந்தியாவின் பல மாநிலங்களிலும், அமெரிக்கா, கனடா, ஐக்கிய அரபு அமீரகம், மலேசியா போன்ற உலகின் பல்வேறு நாடுகளிலும் ‘தமிழ் ஓசை’ குழு மிகச் சிறப்பாகச் செய்து வருகிறது.
அனைவரும் வருக!
https://maps.app.goo.gl/VaUSmdyNY7TNqogU6?g_st=awb

Add a Comment