POST: 2026-01-13T06:34:45+05:30

Arul.2009/FB/#6844

பாட்டனார் உரைவேந்தர் ஔவை துரைசாமி அவர்கள் 3.4.1981 ஆம் ஆண்டு மறைந்த பொழுது எந்தையார் ஔவை நடராசன் அவர்கள் வரைந்த நீத்தார் நினைவுக்குறிப்பு

நீத்தார் வழிபாடு

அன்புடையீர்,
சித்தாந்த கலாநிதி செந்தமிழ்ப்
பெரும் பேராசிரியர் உரைவேந்தராகிய எங்கள் அருமைத் தந்தை ஔவை துரைசாமி அவர்கள் 03-04-81ஆம் நாளன்று காலை 8 மணி அளவில் மதுரையில் தம் ‘ஔவை’ இல்லத்தில் திருவடிப் பேறெய்தினார்கள்.

12-04-81ஆம் நாளன்று காலை 8 மணி அளவில் நீத்தார் வழிபாடு நிகழும்.

33, இராசாசி சாலை,
காந்தி நகர்,
மதுரை – 625 020.

இங்ஙனம்,

ஔவை நடராசன்
திருநாவுக்கரசு
ஞானசம்பந்தன்
மெய்கண்டான்
நெடுமாறன்

அதியன்தான் இன்றில்லை இருந்தி ருந்தால்
அடடாவோ ஈதென்ன விந்தை! இங்கே
புதியதோர் ஆண் ஔவை என
வியப்பான்
பூரிப்பான்; மகிழ்ச்சியிலே மிதப்பான்; மற்றோர்
அதிமதுரக் கருநெல்லிக் கனிகொ ணர்ந்தே
அளித்தும்மைக் காத்திருப்பான்! அந்தோ! உங்கள்
விதிமுடிந்த வாறிதுவோ? ஏது செய்வோம்?
விழிநீரைத் துடைத்தும்மை
வணங்கு கின்றோம்!

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *