POST: 2026-01-09T11:02:18+05:30

Arul.2009/FB/#6840

மங்கலம் பொங்கும்
மணிமொழி அக்கை வாழி!

திருமதி மணிமொழி 22.6.1983 புதன்கிழமையன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பதிவு செய்த போது பதினோராம் வகுப்பு பள்ளி மாணவனாக யானும் அம்மா மருத்துவமாமணி தாரா நடராசன் அவர்களுடன் அந்நிகழ்வில் கலந்து கொண்டோம்.

திருப்பத் தூரின் செல்வி மணிமொழி
தீரன் ஆனந்த கிருஷ்ணன் துணைவி!

விருப்பால் எண்பத்து மூன்றில் சென்னை
வியன்நீதி மன்றில் பதிவு கண்டாய்!

சிறப்பே அந்நாள் பள்ளி பயின்றே
ஈன்ற தாயுடன் சென்றேன் தம்பி!

உறவால் உவப்பால் தந்தை யினையே
உரிமை யோடே அப்பா என்றாய்!

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *