தடுப்பூ எங்கள் தோளைத்தொட்டது !
மகளிர் தினத்தில் மாதர் மாட்சியை நினைத்தேன் .என் மனத்தரசியின் இழப்பை எண்ணி ஆற்ற முடியாமல் சில நொடிகள் கண் கலங்கினேன் . என் அருமைப் பெயர்த்தியும் , எங்கள் குடும்பத்தின் நிகரிலாச் செல்வமும் ஆகிய டாக்டர் நிகிதா தாரா கண்ணன் எனக்கு ஆசுதிரிலேயாவிலிருந்து " மகிழ்ச்சியில் திளைக்கும் மனிதன் " (The Happiest Man on Earth ) என்ற இனிய நூலை எனக்கு அனுப்பிக் " கண்ணீரைத் துடைத்துக் கொள்ளுங்கள் .கருத்தோடு இந்த நூலைப் படித்து மனத்தளர்ச்சியை நீக்கிக் கொள்ளுங்கள் தாத்தா " என்று எழுதியுள்ளார் . இந்த நாளில் ...
அன்புள்ள அம்மா
ஒளவை நடராசன் ஒளவை துரைசாமி, லோகாம்பாள் பெற்ற பதினோறு பிள்ளைகளில், புகழ் பெற்ற பிள்ளை நீ என்று நீ பிறந்த ஆரணியை அடுத்த கோட்டுப்பாக்கத் தில் இருந்து, என் தந்தை பிறந்த ஒளவையார் குப்பம் ரெட்டணையில் தொடங்கி ஊர் மெச்சக் காரணம் நீதானே ! உன் இருபதாவது வயதிலேயே உன் தந்தையாரை இழந்ததால், நாதியில்லாமல் என் பாட்டி லட்சுமி வீட்டில் வளர்ந்தாயாம் ! உரக்க உரக்கப் பேசுவாய், கோபத்தில் கொதித்துப் போவாய். ஆனால் உனக்கு ஈரமனம், இளகிய போக்கு எழுத்துக் கூட்டிப் படிக்க மட்டும் தெரிந்த நீ, தினம் அதிகால ...
இரக்கத்தின் வடிவம்
வள்ளலாரும் தைப்பூசமும் என்ற தலைப்பில் 18.2.25 செவ்வாய்க்கிழமையன்று மாலை 7.00 மணியளவில்பாரிமுனையிலுள்ள ஒய் எம் சி ஏ பட்டிமன்ற அரங்கில் உரையாற்றினேன்.
திருப்பாவை பேருரை
பத்மஸ்ரீ முனைவர் ஔவை நடராசன் =================================== பாடல் - 2 ======== வையத்து வாழ்வீர்காள்! வையத்து வாழ்வீர்காள்! நாமும் நம்பாவைக்குச்செய்யும் கிரிசைகள் கேளீரோ பாற்கடலுள்பையத் துயின்ற பரமனடி பாடிநெய்யுண்ணோம் பாலுண்ணோம் நாட்காலே நீராடிமையிட்டு எழுதோம் மலரிட்டு நாம்முடியோம்செய்யாதன செய்யோம் தீக்குறளைச் சென்றோதோம்ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கைகாட்டிஉய்யுமா றெண்ணி உகந்தேலோர் எம்பாவாய். திருப்பாவை செய்யுள்.2 எதைச் செய்தாலுமே நல்ல முறையில் திருத்த ...
ததும்பிய காதலும்-நிறைந்த வாழ்வும்
இன்றைய நாள் ( 10 - 12 - 2024) எங்கள் பெற்றோர்களின் 63 ஆம் ஆண்டு திருமண நாளை நினைவூட்டுகிறது திருப்பரங்குன்றத்தில் பெற்றோர்களின் திருமணம்(10.12.1961) நடைபெற்றது. 59 ஆண்டுகள் இல்ல விளக்குகளாக பேரொளியில் இணைந்து வாழ்ந்து கலந்து விட்டாலும்… நினைவெல்லாம் அவர்கள் இருவர் வாழ்ந்த பெருவாழ்வும் அப்பா அம்மாவின்ஞான ஒளியும் தொடர்ந்துஎங்கள் மூவரையும் வழி நடத்தும் என்பது உறுதி கண்ணன், அருள், பரதன்
அப்பாவின் ஈர்ப்பு -தொடர் காவியம்
அப்பா மறைந்து ஈராண்டுகள் கடந்தும் ஈரமான அவரின் நினைவுகளைப் பலர் பல நிலைகளில் என்னிடம் தொடர்ந்து பகிர்ந்து வருகிறார்கள். அதில் குறிப்பாக அப்பாவுடன் மிக நெருக்கமாகத் தன் பள்ளிப்பருவநாள் முதல் பழகத் தொடங்கி அடக்கமாக செயலாற்றிய அன்பு இளவல் கலாநிதி தன்னுடைய திருமணம், மக்கள் செல்வங்கள், வணிகத் தொடர்புகள் என்று வளர்ந்த சூழலிலும் அப்பாவை தொடர்ந்து கொண்டாடுபவர்… இன்றும் எங்கள் அண்ணா நகர் தாரகை இல்லத்தில் நாள்தோறும் விடியற்காலை பெற்றோர்க ...
எந்தை ஈராண்டு நிறைந்த எங்களின் சிந்தை
ஔவை நடராசன் ஒளி 24.04.1935 நிழல் 21.11.2022 எந்தை ஈராண்டு நிறைந்தஎங்களின் சிந்தை பெருந்தகையீர், வணக்கம். உடுக்கணக்கு மரபின்படி, எங்கள் அருமைத் தந்தையார் ஒளவை நடராசன் (21.11.2022) மறைந்து ஈராண்டுகள் நிறைவுபெற்று, எதிர்வரும் கார்த்திகைத் திங்கள் பதினோராம் நாள் செவ்வாய்க்கிழமை (26.11.2024) காலை 7.30 -09.00 மணிக்குத் 'தாரகை இல்லத்தில்'(ஜெ 82 இரண்டாம் முதன்மைச் சாலை அண்ணா நகர் கிழக்கு, சென்னை-600 102) இரண்டாமியாண்டு நினைவேந்தல் மரபுள ...
ஈரண்டு… என்றும் எந்த நினதுருட்புகழின் நிழலில்
ஔவை நடராசன்ஒளி 24.4.1935நிழல் 21.11.22 கண்ணன் நடராசன்சாந்தி கண்ணன்தாரா நிகிதா கண்ணன் அருள் நடராசன்சாலை வாணி அருள்அதிரை அருள் பரதன் நடராசன்நிசா பரதன்இனியா பரதன்கார்த்திக் பரதன் Avvai Naarajan Birth 24.4.1935 Passed 21.11.2022 2 years Always in Father's Graceful shadow Dr Kannan NatarajanDr Shanti KannanDr Tara Nikita Kannan Dr Arul NatarajanSalaivani ArulAathirai Arul Dr Bharathan NatarajanDr Nisha BharathanInia BharathanKarth ...










