மலரும் நினைவுகள் மேடையிலே வீசுகின்ற மெல்லிய பூங்காற்று (பத்மஸ்ரீ ஔவை நடராசனுடன் நேர் காணல் கண்டவர்திருச்சி புலவர்_இரா. இராமமூர்த்தி) “எது வரைக்கும் ஒரு தமிழன் உயர்ந்தான் என்று எவரேனும் என்னிடத்தில் கேட்டால் இங்கே இதுவரைக்கும் இதுவரைக்கும் இந்த நாட்டில் இவரைத்தான் நான் உரைப்பேன்; இன்பத்தேனாம்மதுசுரக்கும் தமிழ்ப்பேச்சால் கேட்போர் தங்கள் மனங்கவர்ந்த நடராசன்…" என்று சுரதாவின் பாராட்டுப் பாடலைப் பெற்றவர். ஒரு முறை குமரி அனந்தனுடன் ஒரே மேடையில் அமர்ந்த போது ...
சாலைக்கு ஔவை நடராஜன் பெயர் சூட்ட தீர்மானம்
சென்னை மாநகராட்சியின் மாமன்ற கூட்டம் மேயர் பிரியா தலைமையில் ரிப்பன் வளாக கூட்ட அரங்கில் 29.8.24 நடைபெற்றது. இதில் 54 தீர்மானங்கள் இயற்றப்பட்டன. அதில் ஒன்றாக, தமிழறிஞர் ஒளவை நடராஜன் நினைவாக அவர் இல்லம் அமைந்துள்ள அண்ணா நகர் கிழக்கு 2ஆவது முதன்மைச் சாலைக்கு ஒளவை நடராசன் முதன்மைச் சாலை என பெயர் சூட்டுவதற்கு தீர்மானம் இயற்றப்பட்டது. சென்னை மாநகராட்சி தீர்மானம் நிம.உதுந.க.எண்.எல்.இ1/2661/2023 ஆணையர் அவர்களின் 16.08.2024 நாளிட்ட குறிப்பு பொருள் எண்.44 பெருநகர சென் ...
நினைவோ ஒரு பறவை….
கலையுலக மார்கண்டேயர் நடிப்புச்செம்மல் ஓவியர்திரு சிவகுமார் அவர்களின்30 ஆண்டு ஆவணக்குறிப்பிலிருந்து(12.9.1993) எந்தையார்பத்மஸ்ரீ ஔவை நடராசன் அவர்கள் கலந்து கொண்ட தினமணி நாளிதழின்வைர விழாக் கூட்டத்தைப் பதிவு செய்ததை (23.4.24) புலன வழியாக எனக்கு அனுப்பி மகிழ்ந்த குறிப்புக் கண்டதும் நெகிழ்ந்தேன்… ‘தினமணி’ நாளிதழின் வைரவிழா ஆண்டின் துவக்கவிழா – மதுரைமதுரை ராஜா முத்தையா செட்டியார் விழாவில் குன்றக்குடி அடிகளார் தலைமை ஏற்க, ஔவை நடராஜன்,இந்திய வங்கி M. கோபாலகிருஷ்ணன், ஜெயகாந்தன், சிவசங்கர ...
பத்மஸ்ரீ முனைவர் ஔவை நடராசனின் பன்முகம்
வாழும் தமிழறிஞர் ஔவை நடராசன் அவர்களுக்கு அவர் வாழும் காலத்திலேயே சூட்டப்பட்ட மணிமகுடம் இந்நூல். நூலாசிரியர் பேராசிரியர் தமிழ்த்தேனீ இரா. மோகன் அவர்கள் பத்மஸ்ரீ முனைவர் ஔவை நடராசன் அவர்களின் பன்முக ஆற்றலை, ஆளுமையை நவரத்தினம் போல ஒன்பது தலைப்புகளில் படம் பிடித்துக் காட்டி உள்ளார் பாராட்டுக்கள். இந்நூலை இந்த நூலின் நாயகர் ஔவை நடராசன் படித்து முடித்ததும் அவரது வாழ்நாளில் இன்னும் பல ஆண்டுகள் கூடி விடும் என்பது உண்மை. பத்மஸ்ரீ முனைவர் ஔவை நடராசனின் பன்முகம் நூல் ஆசிரியர் : பேராசிரியர் ...
அன்றாடம் அப்பாவுடன்
கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்பு தமிழ் வளர்ச்சி மற்றும் கலைப் பண்பாட்டுத் துறையின்அரசு செயலாளராக(1984 -1992)அப்பா பணியாற்றியக் காலத்தில் இலக்கிய நிகழ்வுகளுக்குமதுரை வந்தால் தங்குமிடம் ஆரத்தி உணவு விடுதியாகும். அந்நாட்களில்சென்னையிலிருந்துஇரவு சரியாக எட்டு மணிக்குகே பி போக்குவரத்துப் பேருந்தில் புறப்பட்டுச் சரியாக காலை 5 மணிக்கு மதுரை வந்து சேரும் இடமாகும்.. அவ்விடுதியை மீண்டும் காண வேண்டும் என்று நினைந்து 6.7.24 சனிக்கிழமையன்று சென்று பார்த்தேன் …பல மாற்றங்களைக் கண்டு வியந்தேன்.. நாள் ...





