45bd5c22-22ab-4d90-8161-efa86256cbcb

மருத்துவ மாமணி தாரா நடராசன் பிறந்த நாள்

ஒளி 15.7.1932-
நிழல் 14.8.2020

இன்று எங்கள் அமுத ஊற்றான அம்மாவின்
தொண்ணூற்று இரண்டாம் பிறந்த நாள்

எங்கள் தாயே!
எங்கள் நல்வாழ்வே! ஒளியின் ஒளியே! அம்மா! அம்மா

தூயமொழி பல உரைத்தே நல்வாழ்வுக்கு விதைவிதைத்து வளர்த்த அம்மா! அம்மா!

பண்ணேறு மொழியடியார் பலர் வணங்க_

நிறைவாய் எங்கள் மூவர் வாழ்விலும் ஒளி வீசும் அம்மா! அம்மா! அம்மா!

அன்பாய்க் கசிந்(து) உருகிய பத்தரை மாற்றுப் பொன்னொத்த மங்காப் புன்னகை சிந்தும்


எங்கள் அன்னையைப் பணிந்து வணங்குகிறோம்…

             கண்ணன்,      
                 அருள்,  
                  பரதன்.
45bd5c22-22ab-4d90-8161-efa86256cbcb

ஒளவை குடும்பத்தில் முதல் மருத்துவராக மின்னி மிளிர்ந்த தாரா நடராசன்

சூலைத் திங்கள் முதல் நாளில் பாட்னாவில் பிறந்து
நாட்டின் அடிமை விலங்கை உடைத்தெறியப் பாடுபட்ட சுதந்திரப் போராட்ட வீரராய்
இணையற்ற ஒப்பனைக் கலைஞராய்
மேற்கு வங்கத்தின் முன்னாள் முதல்வராய்
கொடும் பிணி நீக்கு மருத்துவராய்
மானுட சேவையில் மகத்தான எண்பது ஆண்டுகளைப்
(1882 – 1962) பொருளுடன் கழித்துப் பின்
தான் பிறந்த அதே ஜூலை திங்கள் முதல் நாளில் கொல்கத்தாவில் இயற்கையெய்திய
மருத்துவர் பிதான் சந்திர ராய் அவர்களை
இந்திய மருத்துவர் திருநாளாகிய சூலைத் திங்கள் முதல் நாளில் நினைந்து போற்றுகிறோம்.

‘வாளால் அறுத்துச் சுடினும் மருத்துவன்பால்
மாளாத காதல் நோயாளன் யான்…’
எனப் பாடிப் பரவினார் குலசேகர ஆழ்வார்.

மருத்துவர்களை மக்கள் அருளாற்றல் வாய்ந்தவராக மனத்தால் முழுமையாக ஏற்றுக் கொண்டும் அவர்களுக்கு வைத்தியநாதன் – மருந்தீசன் என்று தாம் வழிபடும் தெய்வங்களின் பெயர்களைச் சூட்டி மகிழ்ந்தும் கண் கண்ட கடவுளராகத் தொழுதேத்தியும் வருவது தமிழர்களின் நீண்ட மரபாகும்

பெருமைமிகு இம் மருத்துவர் திருநாளாம் சூலைத் திங்கள் முதல் நாளில் இந்தக் கடவுளர்கள் நீடு வாழ்க!

ஒளவை குடும்பத்தில் முதல் மருத்துவராக மின்னி மிளிர்ந்த பெருமை எங்கள் அம்மா மருத்துவமாமணி தாரா நடராசனையே சாரும்… அவர்களுக்குப் பிறகு மரபார்ந்த குடும்பத்தில் மாபெரும் அணி வரிசையாக உலகெங்கும் மருத்துவர்களாகப்பலர் ஓங்கிப் புகழ் பெற்று வருகின்றனர் என்பது பெருமிதமான செய்தியாகும்.

மருத்துவச்சான்றோர் மாமுனிகளின் நெடும் புகழ் ஓங்குக! என உளங்கனிந்து
வாழ்த்தி மகிழ்கிறேன்.