புதுப்புனலாய்ப் புதுவழியாய்ப் புத்தொளியாய் இனிமை பெறு புத்தாண்டேவருக ! நலமனைத்தும் எமக்காக்கித்தங்குகவே ! இனிய புத்தாண்டுநல்வாழ்த்துகள் ! முக்கடல் சூழ் குமரி முனையிலிருந்து ஔவை அருள் 1.1.2025
வயிறு வலிக்க சிரிக்க வைத்து சிந்திக்கத் தூண்டும் பதிவு…
MR ராதாவின் அசத்தலானசிந்தனைநம்மை வியக்கவைக்கிறது.. இறுதிவரை கேளுங்கள்…
நினைத்தது நடந்தது
தமிழ்க் கணினிவுலகில் பலரை சந்தித்த பொழுதும் ஒருவரை மட்டும் நெருங்கி சந்தித்துப் பேச முடியாத ஒர் ஏக்கச்சூழல் 13 ஆண்டுகளாக நிலவி வந்ததை அண்ணல் காந்தியடிகளின் பிறந்த நாளன்று 2.10.24 தீர்வு கிடைத்தது ஆம், தமிழ்க் கணினிவுலகின் இணையற்ற வேந்தர் எழுத்துரு வடிவங்களின் உள்ளங்கவர் உத்தமர் முரசு அஞ்சலின் தந்தை இனிய அண்ணல் முரசு நெடுமாறன் அவர்களை சென்னையில் உள்ள ஐ மீன் உணவகத்தில் நேரில் சந்தித்து பேசும் பெருமிதமான வாய்ப்பு கிடைக்கப்பெற்றதில்எல்லையில்லாத மகிழ்ச்சி அடைந்தேன். ...
மொழிபெயர்ப்புத்துறையின் நன்முத்துக்கள்
2013 ஆம் ஆண்டில் நடைபெற்ற தமிழ்நாடு தேர்வாணையத்தின் மகத்தான தேர்வில் வென்று, தமிழ் நாட்டின் அதிகார மணிமுடியாக இலங்கும் தலைமைச்செயலகத்தில் மொழிபெயர்ப்புப்பிரிவில் 2015-ஆம் ஆண்டு உதவிப்பிரிவு அலுவலர்களாகப் பணியில் சேர்ந்த வீரமங்கை திருமதிதி விஜயலட்சுமி துப்பாக்கி சுடுதலிலும் தேர்ச்சி பெற்றவர். திருமதி ஆ.ர. சுபத்ராதேவி புதுயுகக் கவிஞர்தமிழ் ஆங்கிலம் மற்றும் வடமொழியிலும் தேர்ச்சிப் பெற்றவர் திரு. இரா. சந்திரசேகரன்எண்ணியதை எண்ணியாங்கு செய்பவர்…நீங்கள் எண்ணியது இதுதான் என நமக்கே நினைவூட் ...




