மூன்றாண்டுகளுக்கு முன்பு தந்தையார் எழுதிய கல்வெட்டு வரிகள் என் மாமனாரை நான் இளம் பருவத்தில் இருந்து அறிவேன். தாத்தா என்று அழைத்துப் பழக்கப்பட்டேன். என் தந்தையாரின் தாய் மாமன் என்ற உறவு வகையில் பின்னி வருபவர். உழைப்புக்கு இன்னொருவரை என்னால் சான்று காட்ட முடியவில்லை.. மனம் வருந்தியதால் பிடிவாதமாகத் தன் இரு மக்கட் செல்வங்களையும் கையில் ஒரு மகளும், தோளில் ஒரு மகளுமாக நான் வளர்த்துக் காட்டுகிறேன் என்று சூளுரைத்து வந்து தன் வியர்வையையும், உதிரத்தையும், கண்ணீரையும் குடம் க ...
உரைவேந்தர் ஒளவை சு. துரைசாமி அவர்களுக்கு மணிவிழா பாராட்டு – 1963
" சிவகங்கை வள்ளுவர் இலக்கியப் பேரவையின் சார்பில்மூன்றாம் ஆண்டுக் குறள் விழாவில் - உரைவேந்தர். ஒளவை சு.துரைசாமிஅவர்கட்குக் கவிஞர் மீரா பாடியளித்த மணிவிழாப் பாராட்டிதழ் " .1963 *ஆண் ஒளவை வையைநதிக் கரையினிலே வளமுண் டாக்கிவருகின்ற வாரிதியே ! கண்ணில் தீட்டும்மையைவிடக் கறுப்பான மனவி ருட்டைமாய்க்கின்ற கதிரவனே ! பசுவின் தூயநெய்யைவிட மணமுள்ள குறட்க ருத்தைநெடுஞ்செழியன் நிலமிருந்து வழங்கி இந்தவையகத்தை வாழ்விக்கும் மழையே ! என்றும்வளர்கின்ற துரைசாமி மலையே ! வாழ்க ! தரைவேந்தர் வேலாட்சி குற ...
தமிழ் வளர்ச்சித் துறை நெல்லை அலுவலக ஆய்வு
கடந்த சனிக்கிழமை (14.6.25) ஊரக வளர்ச்சி முகமை அலுவலகத்தில் இயங்கி வரும் தமிழ் வளர்ச்சித் துறை அலுவலகத்தை முதன்முறையாக ஆய்வு செய்தேன். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருபது ஆண்டுகளுக்கு மேல் இயங்கி வந்த தமிழ் வளர்ச்சித் துறை அலுவலகத்தை ஆய்வு செய்திருந்த பொழுதும் ஓராண்டுக்கு முன் ஊரக வளர்ச்சித் துறை வளாகத்துக்கு மாற்றப்பட்ட அலுவலகத்தின் இரு அறைகளையும் பார்த்து சில திருத்தங்களை சுட்டிக்காட்டி அங்கு அணி செய்து செய்து கொண்டிருந்த அருமையான மொழிபெயர்ப்பு நூல்களைக் கண்டு வியந்துப் பாராட்டினே ...
“அவர்கள் எனக்கு ஆசிரியர்கள் – இன்று அவர்களுக்கு மரியாதை!”
இன்று மாலை பாரதிய வித்யா பவனில் என்னுடைய நான்காம் வகுப்பு ஆசிரியர் திருமதி சாவித்திரி நடராஜன் அவர்களுக்கும் 11 12 கணக்காசிரியர் சௌந்தர்ராஜன் அவர்களுக்கும் ஆசிரியர் மணி விருதுகள் வழங்கி பெருமைப்பட்டேன்
இனிய காட்சி
தலைமைச் செயலகத்தில் கூடுதல் செயலாளராக பணியாற்றிய உறவுச் செம்மல் இனிய நண்பர் திரு விஜயகுமார் அவர்களின் மூத்த மகன் திருமண நிகழ்வில் மொழிபெயர்ப்புத்துறையின் துணை இயக்குநர் திருச்செல்வன் மற்றும் அப்பாவுடன் சென்னையிலுள்ள பௌர்ணமி திருமண அரங்கில் 7.6.2015 கலந்து கொண்ட போது எடுக்கப்பட்ட ஒளிப்படக்காட்
இன்பமே எந்நாளும் துன்பமில்லை!
கடந்த 12 ஆண்டுகளாக நன்கு தெரிந்த திருமுகம் தான்திரு அசோக்குமார் ஆவார். தலைமைச் செயலகத்தில் பணியாற்றுவது என்பது பெரும்பேறு…. அதிலும், அரசின் அனைத்து நடவடிக்கைகளுக்கும் வேராகத் திகழும் அரசு செயலாளர்களிடத்தில் பணியாற்றுவது என்பது அரும்பெரும் பேறாகும்… தலைமைச் செயலகத்தில் தலைமைச் செயலாளர் முதற்கொண்டு அரசு செயலாளர் வரை தனிச் செயலராகப் பணியாற்றி அரசு இணைச்செயலாளர் பதவிக்கு நிகரான முதுநிலை முதன்மை தனிச் செயலராகப் பணியாற்றிய செம்மல் தன்னுடைய நீண்ட அலுவல் பணி முதிர்வால் 31.5.25 அன்று ...
வாழி நலம் சூழ…
தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலகத்தில் பல்வேறு நிலைகளில் அரும்பணியாற்றி துணைச் செயலாளர் பணியிலிருந்து ஓய்வு பெறும் திரு கண்ணன் அவர்கள்‘கதங்காத்துக் கற்றடங்கல் ஆற்றுவான் செவ்வி’ என்ற குறள் நெறியில் போற்றுதலுக்குரியஆற்றல் பெற்றவர் என்றால் மிகையாகாது. அன்பின் மிகுதியில் என்னிடம் மகிழ்ச்சியாக பல தலைப்புகளில் நுட்பமாக உரையாடுவார். அலுவல் சார் கோப்பு நடவடிக்கைகளில் மிகுந்த ஆர்வம் காட்டினாலும் தகுந்த சொற்களைத் தகுநிலைக்கேற்ப தக்கவாறு திருத்தி அரசாணைகளை அணி செய்வதில் வல்லமை மிக்கவராகப் பணியாற்ற ...
அறிஞர்கள் அவையம் விழா – முதல்வர் வாழ்த்து
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் ஒருங்கிணைக்கும் #அறிஞர்கள்_அவையம் என்ற கலந்துரையாடல் தொடரின் முதல் நிகழ்வு இன்று தொடங்கியது! மகிழ்ச்சி! தமிழ்மொழியில் பல்வேறு துறைகள் சார்ந்து இதுவரை நிகழ்ந்தவை குறித்தும் - இனி நிகழவேண்டியவை குறித்தும், துறைசார்ந்த அறிஞர்களின் கருத்துகேட்கும் தமிழ்வளர்ச்சித் துறையின் இந்தத் திட்டம் வெற்றிபெற வாழ்த்துகிறேன்!
நெஞ்சையள்ளும் கொள்ளை நீரால் கோடையில் மகிழ்ச்சி
கன்னியாகுமரியிலுள்ள ஐம்பது அடி உயரமுள்ள பன்னிரண்டு நூற்றாண்டுகளுக்கும் மேலான மிகப்பெரும் பழமையான திற்பரப்பு கோதையாற்று நீருவியில் குளித்த புத்துணர்ச்சி, மறுமலர்ச்சி இணைந்து சனிக்கிழமை (17.5.25) அந்தி மயங்கும் மாலையில் கிடைக்கப்பெற்ற மகிழ்வான பொழுதில்










