அழைப்பிதழ்கள் – பத்மஸ்ரீ ஒளவை நடராஜன்

2019 ALL RIGHTS RESERVED BY ஒளவை நடராசன்

அழைப்பிதழ்கள் – பத்மஸ்ரீ ஒளவை நடராஜன்

2019 ALL RIGHTS RESERVED BY ஒளவை நடராசன்

டாக்டர் ந அருள்

2019 ALL RIGHTS RESERVED BY ஒளவை நடராசன்

செய்தித்தாள் கட்டுரைகள் – பத்மஸ்ரீ ஒளவை நடராஜன்

மன்னாதி மன்னனுக்கு மற்றுமொரு மணி மகுடம்..! (பகுதி – 28)

செய்தித்தாள் கட்டுரைகள்|

தினசெய்தி நாளிதழில் 30.03.2020 அன்று வெளியான கட்டுரை

=============================================

மன்னாதி மன்னனுக்கு மற்றுமொரு மணி மகுடம்..! (பகுதி – 28)

‘‘விண்ணின் விடிவை பண்ணில் காட்டிய பாரதியார்..!’’

ஔவை நடராசன்,

மேனாள் துணைவேந்தர்,

=========================================

புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் தமது படத்தில் பாடிய பாடல்கள் எல்லாம் பகுத்தறிவுப் படையின் அணிவரிசைகளாக அமைய வேண்டும் என்று வற்புறுத்தினார்.

பூ வைப்பது போல புரட்சித் தீ வைப்பதையும் பாடல்களில் செய்ய வேண்டும் என்றார்.

இனவாயத்தின் எழுச்சியையும் நடைமுறை நலிவுகளையும் மின்னல் வரிகளாகக் கொண்ட மிடுக்குடைய பாடல்களையே அவர் பாடினார்.

புலமையால் வென்று நின்ற புலமைப் பித்தனை, தோள் மேல் ஏற்றி அரசவைக் கவிஞராக, மேலவைத் தலைவராக மேன்மைகளை வளர்த்தார்.

புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்., பாரதியார் கவிதைகளை விரும்பிக் கேட்பார். ரசித்து மகிழ்வார். அவ்வகையில் 11.12.1981 அன்று எட்டயபுரத்தில் நடைபெற்ற பாரதி நூற்றாண்டு தொடக்க விழாவில் அவர் ஆற்றிய உரையில் பாரதியாரின் புகழை ஓங்கி ஒலித்தார்.

இதோ அந்த உரை…

‘‘சுப்பிரமணிய பாரதியாரின் நூறாவது பிறந்த நாள் இன்றைய தினம் தமிழக மக்களால் அனைத்து மக்களால் கொண்டாடப்படும் விழாவாக உருவாகி இருக்கிறது என்பதை எண்ணிப் பார்க்கிறேன்.  அவர் செயல்களெல்லாம் அவர் வாழ்ந்த காலத்தில்  செய்த கடமைகளை எல்லாம் நாம் யாரும் மறக்க முடியாது- வரலாறு மறக்காது என்ற வகையில் இந்த நிகழ்ச்சி நடைபெறுகிறது.  அவரது தியாகங்கள் நமக்கு எடுத்துக்காட்ட – வழி வகுக்க இந்த நாள் பயன்படும் என்பதைச் சுட்டிக் காட்ட விரும்புகிறேன்.

பாரதிக்கு முன்பு எத்தனையோ கவிஞர்கள் இருந்திருக்கிறார்கள். அவருக்குப் பின்னரும் எத்தனையோ கவிஞர்கள் தோன்றியிருக்கிறார்கள், தோன்றிக் கொண்டிருக்கிறார்கள்.  பாரதி எடுத்துச் சொல்லிய கருத்துகளை எல்லாம் வைத்துச் சில கேள்விகளைக் கேட்டு, நாமே அவற்றிற்கு விடை கூறிக்கொண்டால் அவர் யார் என்பது விளங்கும். சமூக சீர்திருத்தத்தில் அவர் ஆர்வம் கொண்டிருந்தவரா என்று கேட்டால், ஆம் என்ற விடை கிடைக்கும். பெண்கள் மறுமலர்ச்சிக்குரிய கருத்துகளை வெளியிட்டவரா என்று கேட்டால் ஆமாம் என்ற பதில் கிடைக்கும். பெண் உரிமைக்காகப் போராடியவரா என்று கேட்டால், ஆம் என்ற பதிலே கிடைக்கும்.     ஆணும் பெண்ணும் சரிநிகர் சமானமாக வாழ வேண்டும் என்ற தத்துவத்தை எடுத்துச் சொன்னாரா என்றால், ஆமாம் என்னும் பதிலே கிடைக்கும். சாதிகள் கூடாது என்ற உண்மையை – தனது உணர்வை எழுதி பேசி வந்தவரா என்றால், ஆமாம் என்னும் பதிலே கிடைக்கும்.     பெண்களை அடிமைப்படுத்தக் கூடாது என்ற தத்துவத்தை வலியுறுத்தியவரா என்று கேட்டால், ஆமாம் என்ற பதிலே கிடைக்கும். நாட்டு விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டவரா என்று கேட்டால் ஆமாம் என்ற பதிலே கிடைக்கும்.

    எந்தப் புரட்சிக் கருத்தையும் இன்று கூற முடியும். ஆனால், அதனைச் சொல்ல முடியாத காலத்தில் சொல்வதற்கு அச்சப்பட்ட காலத்தில் அதனைத் துணிவாகச் சொல்லியிருக்கிறார். எத்தனை துணிச்சல் இருந்தால் சொல்லியிருக்க முடியும் என்பதை நாம் எண்ணிப்பார்க்க வேண்டும். அவர் புகழோடு இருந்த காலத்தில் அவர் உயர்ந்த பதவியில் இருந்தபோது இந்த விழா கொண்டாடப்பட்டிருக்குமேயானால் அதில் சிறப்பிருக்காது. மறைந்த பிறகு இந்த விழா கொண்டாடப்படுவதே சிறப்பாகும்.

    பஞ்சாப் மாநில முதல்வர் தர்பாரா சிங் அவர்கள் இந்த விழாவில் ஆர்வத்துடன் பங்கேற்றிருக்கிறார்கள். அடுத்த ஆண்டு பஞ்சாபில் பாரதியார் பிறந்த நாள் விழாக் கொண்டாடப்படும் என்று அவர் சொன்னார். வங்காள முதல்வர் ஜோதிபாசு அவர்கள் நாங்கள் கொண்டாட இருக்கிறோம் உங்களின் உதவி தேவை என்ற கடிதம் எழுதியிருக்கிறார்கள். உத்தரப்பிரதேச முதல்வர் நாங்களும் கொண்டாடப் போகிறோம் என்று சொல்லியிருக்கிறார்கள். மற்ற மாநிலங்களும் அவ்வாறே கொண்டாட இருக்கின்றன.  பாரதியின் புகழ், தியாகம், ஆற்றல் இந்தியர் அனைவருக்கும் இந்தியத் துணைக் கண்டம் முழுதுக்கும் பயன்பட வேண்டும் என்பது மட்டுமல்ல, உலகுக்கே பயன்பட வேண்டும் என்பது எனது விருப்பம்.

    சிலருக்குச் சில நாட்கள் புகழ் இருக்கலாம். சில வாரங்கள் புகழ் இருக்கலாம்.   சில மாதங்கள் புகழ் இருக்கலாம். ஆனால், பாரதியின் புகழ் நூறாண்டுகளுக்கும் மேலாக இருந்து வருகிறது. இன்னும் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு அது இருக்கும். சமுதாயம் அவரைப் போற்றும் வாழ்த்தும் என அறுதியிட்டுக் கூறகிறேன். பாரதிக்குத் துணிவு எங்கிருந்து வந்தது?  பிராமண குலத்தில் பிறந்தவர் அவர்.  பிறப்பால் தாழ்த்தப்பட்டவர் இல்லை. தனக்காகவோ தனது இனத்துக்காகவோ சமுதாயத்துடன் போராட வேண்டிய அவசியம் அவருக்கு இல்லை.  வசதியாகத்தான் வாழ்ந்திருக்கிறார். அவரது தந்தை ஒரு சிறிய தொழிற்சாலை நடத்துகின்ற அளவுக்கு அவரது குடும்பச் சூழ்நிலை இருந்திருக்கிறது. அப்படி இருந்தும் அவர், தனக்காகப் போராடவில்லை. சமுதாயத்துக்காகப் போராடியிருக்கிறார். அவர் தனி மனிதரல்லர் தத்துவத்தின் சின்னம்.

    மற்றவர்கள் சொல்ல அஞ்சும் கருத்துகளை பிரச்சினைகளை சமுதாய சீர்திருத்தக் கருத்துகளை அவர் துணிச்சலுடன் தெரிவித்திருக்கிறார். அவரை தேசிய கவி என்பதால் மகாகவி என்பதா, தேசிய மகாகவி என்பதா? அந்தப் பெருமையை எண்ணித்தான் விழா கொண்டாடப்படுகிறது. அவர் எந்தக் கருத்தையும் பெரிதாகச் சொல்லியிருக்கிறார். பெண்களின் கற்பு நிலை குறித்து விவரமாக வெளியிட்டிருக்கிறார். பெண்களுக்கெனச் சில திட்டங்களைத் தெரிவித்திருக்கிறார்.

    “பெண் பக்குவமடைவதற்கு முன் திருமணம் செய்யக்கூடாது” என்று பாரதியார் கூறியிருக்கிறார். அவர் சொல்லிய பிறகு அவ்வாறு திருமணம் செய்வதற்குத் தடை விதிக்கப்பட்டு இருக்கிறது. ஆனால், தடைச்சட்டம் வருவதற்கு முன்பே எவ்வளவு சிந்தனையோடு-துணிவோடு சொல்லியிருக்கிறார் பாரதி என்பதை இளைஞர் சமுதாயம் நினைவிற்கொள்ள வேண்டும்.

    இன்று நாம் பேசுகின்ற பல புரட்சித் தத்துவங்களை 50 ஆண்டுகளுக்கு முன்பே பாரதியார் சொல்லியிருக்கிறார். பிதுரார்ஜித சொத்தில் பெண்களுக்கும் சமபங்கு வழங்கப்பட வேண்டும் என்று பல்லாண்டுகளுக்கு முன்பே தெரிவித்திருக்கிறார். கணவன் இறந்த பிறகு ஒரு பெண் மறுவிவாகம் செய்ய விரும்பினால் அதைக் தடுக்கக் கூடாது என்றும் அவர் கூறியிருக்கிறார்.

    பெண்களுக்குப் படிப்பு வேண்டும் என்று அக்காலத்திலேயே பாரதி கூறியுள்ளார்.  அவர்களுக்குப் பட்டப்படிப்புக் கொடுக்க வேண்டும் என்று முன்னமேயே சிந்தனையுடன் கூறியுள்ளார் என்பதை நாம் எண்ணிப் பார்க்க வேண்டும்.

    அண்ணா அவர்கள் வழியில் பெரியார் அவர்களின்  வழியில் நடைபோடும் இந்த அரசு அவர்களின் கொள்கைகளில் பலவற்றை நிறைவேற்றியிருக்கிறது. பெண்களுக்கென ஒரு பல்கலைக்கழகத்தை அடுத்த ஆண்டு இறுதிக்குள் தமிழக அரசு துவக்கப் போகிறது. பெண்கள் மறுமலர்ச்சியில் பெரும்பங்கு கொண்டவர் பாரதி. பெண் விடுதலையின் பெருமைக்காக தர்மயுத்தம் தொடங்குவேன், அதற்கு மகா சக்தி துணைபுரிவாள் என்கிறார் பாரதி.

    தமிழகத்தைப் பொறுத்தவரை நான்கு மாவட்டங்களில் மாவட்ட ஆட்சித் தலைவராகப் பெண்களே இருக்கின்றனர் என்று நான் பெருமையுடன் குறிப்பிடுகிறேன்.  கலப்பு மணம் செய்து கொள்ளுங்கள் என்று பாரதி வலியுறுத்தினார்.  தமிழகத்தைப் பொறுத்த வரையில் இப்போது கலப்புத் திருமணம் செய்து கொள்பவர்களுக்கு நாம் பரிசு கொடுக்கிறோம் பணம் கொடுக்கிறோம். மாபெரும் தியாகம் செய்த பாரதியை, தியாகி என்பதா வீரர் என்பதா, மறத்தமிழன் என்பதா!

    தன்னோடு பிறந்தவன் சகோதரன் அவனுக்கு உரிமை கிடையாது என்ற நிலை இருந்தது. அவனை அடிமை என்று கருதி வந்தார்கள். அந்த இழிநிலை ஒழிய வேண்டும் என்று தீவிரமாக இருந்தார் பாரதி.  அனைத்து மனிதர்களும் சகோதரர்கள் என்று அவர் கூறினார். “ஒன்றே குலம் ஒருவனே தேவன்” என்று நமது அண்ணா அவர்கள் வலியுறுத்தி வந்தார்களே, அதுபோல மனிதரத்தம் அனைத்தும் ஒன்றே என்று தெரிவித்தார் பாரதியார்.

    சமதர்ம சமுதாயம் வேண்டும் என்கிறார் புரட்சி மனம் கொண்ட பாரதி. இந்தியா முழுமையும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியவர் பாரதி. அதனால், பாரதி பிறந்த நாளை இந்திய நாட்டின் ஒருமைப்பாட்டு நாளாகக் கொண்டாட வேண்டும்.  தமிழகத்தில் ஒவ்வொரு நாளும் ஏதாவது ஒரு ஊராட்சி ஒன்றியத்தில் பாரதியின் பிறந்த நாள் விழா நடைபெறும்.

    இந்த நாளில் ஏற்றத்தாழ்வை அகற்ற நாம் உறுதி எடுத்துக்கொள்வோம். ஒன்றே குலம் என்ற நிலை உருவாகப் பாடுபடுவோம்.” என்றுரைத்து நிறைவு செய்தார்.

தொடர்வோம் பொன்மனச் செம்மலின் பொன்னான நினைவுகளை…

– ஔவை நடராசன், தொடர்புக்கு: thamizhavvai@gmail.com

செய்தித்தாள் கட்டுரைகள் – பத்மஸ்ரீ ஒளவை நடராஜன்

பழகிப் பார்த்ததில் இவர்கள்…

செய்தித்தாள் கட்டுரைகள்|

==================================================

ஓம் சக்தி – பிப்ரவரி 2020 இதழில்

பத்மஸ்ரீ ஔவை நடராசன் அவர்களைப் பற்றி

மரபின் மைந்தன் முத்தையா அவர்கள் எழுதிய கட்டுரை

==================================================

பழகிப் பார்த்ததில் இவர்கள்…

பத்மஸ்ரீ ஔவை நடராசன்

காலம் எல்லோரையும் ஒரு பாறையாகத்தான் படைக்கிறது. சிலர்தான் உளிகளைத் தேடி எடுத்துத் தங்களைத் தாங்களே செதுக்கிக் கொள்கிறார்கள். அப்படித் தன்னை ஒரு விஸ்வரூபச் சிலையாக வடித்தெடுத்து நிற்கும் வித்தகர்தான் அவ்வை நடராசன் அவர்கள்.

அவ்வை சு. துரைசாமிப் பிள்ளை என்னும் பேரறிஞரின் புதல்வர் என்பது அவருக்கு அமைந்த அடித்தளம்.

முனைப்பு, முயற்சி, உழைப்பு, உற்சாகம், நுண்ண றிவு, எளிவந்த தன்மை என்னும் ஏராளமான அம்சங்களால் தன் வாழ்வை ஒரு கலைக் கோவிலாக அவர் கட்டமைத்தார்.

ஆசிரியப் பணியில் தொடங்கி மொழிபெயர்ப்புத் துறை இயக்குனர், அரசுச் செயலாளர், பல்கலைக்கழகத் துணைவேந்தர், செம்மொழி உயராய்வு மையத்தின் துணைத் தலைவர் என்று எத்தனையோ அரிய பொறுப்புகளுக்கு அணி செய்த அ றி ஞர் பெருமகன் அவ்வை நடராஜன்.

     பண்டைய இலக்கியங்களில் ஆழங்கால்பட்ட அவர், புதுமை இலக்கியங்களின் நந்தவனத்தில் பூக்கள் பறிப்பவர். புத்தம் புதிதாய் இன்று தமிழ் இலக்கிய மேடைகளில் அரும்பி நிற்கும் இளைஞர் களையும் அடையாளம் கண்டு அங்கீகரிக்கும் விசாலமான மனம் இவருடைய விலாசமாக விளங்குகிறது.

     பச்சையப்பன் கல்லூரி மாணவர் ஒருவரின் கவிதைகளைப் படித்துவிட்டு வாழ்த்துச் சொல்ல நேரில் போய், அவர் அங்கே இல்லாததால் ‘உங்கள் வித்தக விரல்கள் வெல்க!’ என வாழ்த்தெழுதி வழங்கிவிட்டு வந்தார். அப்படி வாழ்த்துப் பெற்ற கவிஞர்தான் கவிப்பேரரசு வைரமுத்து.

‘சொல்வேந்தர்’ சுகி சிவம், ரவி கல்யாணராமன் உள்ளிட்ட இந் நாளைய இலக்கிய வேந்தர்கள் இளவரசர்களாக இருந்தபோது, பல மேடைகளில் அவர்களுக்குப் பட்டம் கட்டி அழகு பார்த்தவர் மறைமுகமாகச் சொல்வார்.

நல்ல திறமை இருந்தால் வயது பேதம் பாராமல் மதிப்பதும், தவறுகள் இருப்பின் சிரித்த முகத்துடன் நேர்பட உரைப்பதும் அவருடைய இயல்புகள்.

தமிழிலும் ஆங்கிலத்திலும் தடையின்றிச் சொற்பெருக்கு ஆற்றும் தனித் தன்மையால் புலவர்கள் மத்தியில் தலைவராகத் திகழும் அவர், தொண் டருக்குத் தொண்டராய் எல்லோரோடும் எளிதில் பழகும் பண்புநலன் வாய்ந்தவர். எனவே எல்லாத் தரப் பிலும் அவருக்கு நண்பர்கள் உண்டு.

இளைஞர்களைக் காண நேர்ந்தால், “என்ன ராஜா எப்படி இருக்கீங்க?” எனத் தோளில் தட்டித் தோழமைப் பாராட்டுவார். ஒரு கூட்டத்தில் நான் சிறப்புரையாற்ற அழைக்கப்பட்டிருந்தேன். அந்த விழாத் தலைவரையும் தோளில் கைவைத்து “என்ன ராஜா எப்படி இருக்கீங்க?” என உரிமையுடன் வினவினார் அவ்வை.

அப்படி – வினவப்பட்டவர் உண்மையிலேயே ராஜா. செட்டி நாட் டரசர் எம்.ஏ.எம் ராமசாமி செட்டியார் அவர்கள் தான் அந்த விழாவின் தலைவர்.

அவ்வை அவர்களின் துணைவியாரும், மருத்துவப் பல்கலைக்கழகத்தின் மேனாள் டீன் (Dean)-ஆக இருந்தவருமான டாக்டர் தாரா நடராஜன் அவர்கள் மூட்டு மாற்று அறுவைச் சிகிச்சைக்காகக் கோவை கங்கா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அப்போது அவர்களுக்கு எங்கள் வீட்டிலிருந்து அன்றாடம் உணவு கொண்டு செல்வேன்.

துணைவியாருக்குத் துணையாக உடனிருந்து பார்த்துக் கொள்வார் அவ்வை. “நான் அம்மாவுடன் சேர்ந்தாற்போல, பத்து நாட்கள் இருப்பது இப்போதுதான்” என என்னிடம் சொன்னார். அம்மையார் ஓய்வு எடுக்கத் தொடங்கியதும் தன் அரச உலாவை ஆரம்பிப்பார்.

பேரூர் தமிழ்க் கல்லூரியில் சைவ சித்தாந்த அமர்வின் கருத்தரங்கத் தலைமை, உலகத் தமிழர் பேரவை ஜனார்த்தனன் உடன் அவர் தங்கியிருக்கும் அறையில் சென்று அளவளாவுதல் என்று எப்போதும் தன்னைச் சுறு சுறுப்பாகவே வைத்திருப்பார்.

ஜனார்த்தனம் அவர்களை எனக்கு அறிமுகம் செய்துவைத்து அவர் சொன் னார், “ஜனார்த்தனம்தான் என்னை அண்ணாவிடம் அழைத்துப் போய் அறிமுகம் செய்தவர்” என்று.

அத்துடன் விட்டாரா என்றால் இல்லை. ஜனார்த்தனம் அவர்களிடம் என்னை அறிமுகம் செய்து, “இவர் நல்ல இளைஞர். சிறந்த கவிஞர். ஆனால் திராவிட இலக்கியங்கள் பால் இவருக்கு நல்ல அபிப்ராயம் இல்லை” என்று போட்டு உடைத்துவிட்டார். ஜனார்த்தனம் அவர்களின் நக்கீரப் பார்வையிலிருந்து நான் விலகி நிற்க வேண்டியதாகிவிட்டது.

அதேபோல, தஞ்சையில் புலவர் லியோ ராமலிங்கம் அவர்களின் நூல் வெளியீட்டு விழா ஒன்றிற்கு அவரும் நானும் உரை யாற்றப் போயிருந்தோம். “ராஜா, அறையிலேயே அடைந்து கிடக்காதீர்கள். என்னோடு வாருங்கள்” என்று உள்ளபடியே நான் காண விரும்பி இருந்த ஓர் அறிஞர் இல்லத்திற்கு என்னை முதல் முறையாக அழைத்துச் சென்றார். –

அந்த அறிஞர்தான்சேக் கிழார் அடிப்பொடி டி.என். ராமச்சந்திரன் அவர்கள். என்னைக் காண்பித்து, “அண்ணா , இவன் ஓர் இளம் மாணாக்கன்” என்று ஆலாபனையுடன் அறிமுகம் செய்து, பின்னர் இன்னாருடைய பெயரன் என்றும் சொன்னதும் டி.என்.ஆர். பெரிதும் அகமகிழ்ந்தார்.

அப்போது அவர்களின் உரையாடலில் நடந்த ஒரு சுவையான சம்பவம் எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. இருவரும் ஒரு மொழி பெயர்ப்பாளரைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தார்கள்.

அவர் பற்றி அவ்வை அவர்களுக்கு நல்ல அபிப்பிராயம் இருந்தது. ஆனால் டி.என்.ஆர். அவர்களுக்கு அத்தகைய அபிப்பிராயம் இல்லை. என்றாலும் அவர் அதை வெளிக் காட்டிக் கொள்ளவில்லை.

அவ்வை பேசிக் கொண்டே போனார். ” அந்த மொழிபெயர்ப்பாளரிடம் ஒரு மொழிபெயர்ப்புப் பணியைக் கொடுத்தேன். மிக விரைவில் முடித்துக் கொடுத்துவிட்டார்” என்று பாராட்டினார்.

உடனே டி.என்.ஆர். சொன்ன வார்த்தை இது. “அதெல்லாம் கொடுத்துவிடுவார். பிடி சாபம் என்று உடனே கொடுத்து விடுவார்.” அதிலிருந்து அந்த மொழிபெயர்ப்பாளர் பற்றி அவர் என்ன நினைக்கிறார் என்பதை அவ்வை புரிந்துகொண்டு வாய்விட்டுச் சிரித்தார்.

உடலளவிலும் மனதளவிலும் எதற்கும் அலட்டிக் கொள்ளாதது அவருடைய இயல்பு என்பதை அறியாதவர்கள் இல்லை. அவருக்கு நெடுங்காலமாகவே சர்க்கரை நோய் உண்டு. அதுபற்றிக் கேட்டால், அவர் சொல்வது என்ன தெரியுமா? “40 வயதுக்குள் உனக்கு சர்க்கரை வியாதி வராவிட்டால், நீ வாழ்க்கையைச் சரியாக வாழவில்லை என்று அர்த்தம்” என்பார்.

கேட்பவர்களுக்குத் தூக்கிவாரிப் போடும். பத்து பதினைந்து ஆண்டுகளுக்கு முன் அவரிடம் பேசிக் கொண்டிருந்தபோது, “ஐயா, சர்க்கரை வியாதியைக் கட்டுக்குள் வைக்க நடைப் பழக்கம் நல்லது என்கிறார்களே. நீங்கள் நடப்பது உண்டா ?” என்று கேட்டேன். “மக்களுக்கு நோய் வந்தால் நோயைச் சரி செய்து கொடுக்கும் அளவு மருத்துவத்தையும் அறிவியலையும் வளர்க்க வேண்டும். நான் அமர்ந்து இருக்கும் போது என் கால்களுக்குக் கீழே ஒரு கருவியைக் கொடுத்து அமர்ந்த நிலையிலேயே கலோரிகளை எரிக்க ஏற்பாடு செய்ய வேண்டுமே தவிர, நீ நட… ஓடு… விளை யாடு… என்றெல்லாம் என்னைச் சொல்லக் கூடாது” என்றாரே பார்க்கலாம். அலட்டிக் கொள்ளாமல் இருந்தாலும் நிரம்பி நிற்கும் நடுக்கடல் போல் சலனமில்லாமல் இருக்கும் சிந்தனையாளர் அவர். எந்த இலக்கியம் குறித்தும், எந்த இலக்கிய வாதி குறித்தும் கையிலொரு சிறு குறிப்பும் இல்லாமல் உடனுக்குடன் மணிக் கணக்காய் உரையாற்றும் நுண்மாண் நுழைபுலம் கொண்டவர் அவர்.

அவருடைய புதல்வர்களில் திரு. அருள், தமிழ்நாடு அரசு மொழி பெயர்ப்புத் துறையில் இயக்குனராக இருக்கிறார். தந்தையின் எத்தனையோ இயல்புகளை உள்வாங்கிக் கொண்டு இருப்பவர். இன்று அவ்வையின் நெடிய அனுபவங்களை எல்லாம் கேட்டு, அவற்றை வரிசையாக முகநூலில் பதிவு செய்து கொண்டிருக்கிறார்.

குறிப்பாக எம்.ஜி.ஆர் அவர்களின் கீழ் தமிழ் வளர்ச்சித் துறைச் செயலாள ராகப் பணிபுரிந்த அவரின் அனுபவங்கள் விலைமதிப்பில்லாதவை.

தேர்ந்த அறிவாற்றல், தலைசிறந்த நினைவாற்றல், தகைசான்ற நிர்வாக ஆற்றல் ஆகியவற்றின் ஊற்றுக்கண் ணாக இருந்தாலும் தன்னியல்பில் தீராத விளையாட்டுப் பிள்ளையாகவே திகழும் அவ்வை நடராஜன் தமிழுலகில் ஓர் ஆலமரம்!

செய்தித்தாள் கட்டுரைகள் – டாக்டர் தாரா நடராஜன்

பருமன்படுத்தும் பாடு

செய்தித்தாள் கட்டுரைகள்|

பருமன்படுத்தும் பாடு
inflammation

டாக்டர் திருமதிதா நடராசன் குழந்தைகளை முன்னாள் முதல்வர் மதுரை மருத்துவக்கல்லூரி

நம் உடலில் கொழுப்புச்சத்து அளவுக்கு மேல் அதிகமாக Lee ) – .
இருப்பதை உடற்பருமன் என்று கூறலாம். அது வயிற்றுப்பகுதியினைச் தவறாகக் கண்க
சார்ந்த கொழுப்புத்தன்மையைக்கூடுதலாக்குகிறது. பொருளாதார உணவுகொடுப்பது
ரீதியாகவும் தொழில்நுட்ப தீரியாகவும் வளர்ச்சியம் செழிப்பும் மிக்க நாடுகளில் மட்டும் குழநதைகள
மரபணுககளை
பரவலாகக் எனப்பட்ட உடற்பருமன் இப்பொழுது இந்தியா போன்ற வளரும் நாடுகளிலும் அதிகமாகி வருகிறது. குறிப்பாக நம் சமுதாயத்தின் இளைய தலைமுறையை இது அதிகம் ாதித்துவருகின்றது. நமதுவாழ்க்கைத்தரம், வாழ்வியல்முறை போதிய உடல் உழைப்பின்மை தரமற்றஉணவுமுஆைகியவையே குழந்தைளின்டல்ருமன் கூடுவதற்குக்காரணமாகின்றன. இருபதுஅல்லது முப்பது ஆண்டுகளுக்கு முன்னர் நம்நாட்டின் குழந்தைகளை அதிகம் பாதித்த நோய்களான நிமோனியா, அம்மை, போலியோ போன்றவைகளில் பெரும்பாலானவை தடுப்பு மருநதுகள் மூலம் தடுத்து நிறுத்தப்பட்டுவிட்டன. எனவே பாதிக்கப்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கையும் ஓராவிற்குக் குறைந்துள்ளது காலப்போக்கில் குழந்தைகளை விட வாழ்க்கைத் தரம் பொருளாதார வளர்ச்சியை ஒட்டி முன்னேறிக்கொண்டு இருப்பதால் வறுமைக்கோட்டின் கீழிருந்த மக்கள் ஓரிரு தலைமுறைகளாகப் படிப்படியாகத் தங்கள் 血 Gவாழ்க்கைத் தரத்தை உயர்த்திக் கொண்டுவிட்டார்கள். கிராமிய வாழ்க்கையைத் துறந்து. — மேல்படிப்பையும், வேலைவாய்ப்புகளையும் கருதில் கொண்டு நம்மில் பலர் நகரங்கில் குடியேறிவிட்டோம் இனால் நம் அன்றாட வாழ்க்கை முறை உணவு பழக்கங்கள் ஆகியவை பெரிய மாற்றத்தைக் கண்டுள்ளன. இத்தகைய மாற்றங்களைச் சார்ந்த வாழ்வு நிலைதான் முக்கியமாக நாம் உடல்பருமனாகிவிட்டது.
குழந்தைகள் அதிக எடையுடன் இருப்பதால் பல்வேறு நோய்களுக்கு ஆளாதல் – – நீரிழிவு நோய் – இடுப்புச் சுற்றளவு (Abdomonal Obes) அதிகம் கூடுவதால் சிறு அதனால் அவா வயதினிலேயேநீரிழிவுநோய்(இரண்டாம்வகை ஏற்படுவதற்கு வாய்ப்புள்ளது. பண்டங்களையே
2 2 உடல் பருமன் அதிகரிப்பால் இன்சுலின் சுரப்பி தேவையான அளவு சுரக்காமல் மற்றும் வள்ைப தடைப்படுகின்றது.இதனால் உண்னும் உணவில் உள்ள சத்துப்பொருள்கள் உடலில் குழந்தைகளின் உள்ள உயிர்அணுக்களில் சேராமல் பலவித நோய்கள் தோன்றுகின்றன.

அதிக எடையுள்ள இளம் பெண் குழந்தைகளுக்கு சுவை நீர்களை (Hormone imbalance) பருக்களும், ஒழுங்கறறமாதவலக்கு ஏற்படுவதால் உடலில் பழக்கவேண்டும் உள்ளஅணுக்கள் இன்சுலினை ஏற்காமல் புறக்கணிக்கத்தொடங்குகின்றன. குடுவைகளில்

பெண் குழந்தைகளுக்கு
குருதியில் உறிஞ்சப்படாத மிகையான கொழுப்பே உடல் பருமனுக்கு (Vascular
nammation) அடிகோலுகிறது. தவறான சமுதாய நோக்கினால், உடல் பருமனுள்ள குழந்தைகளை நம் சமூகம் உடல் வளமான குழந்தைகளாகத் தவறாகக் கருதுகின்றது. மேலும் பெற்றோரும், உற்றோரும் அந்தக் குழந்தை வயது ஆக ஆக உடலில் உள்ள கொழுப்புச்சத்து (Puppy Fat) தானாவே குறைந்து விடும் என்று தவறாகக் கணிக்கிறார்கள். ஆனால் குழந்தைக்கு மேலும் மேலும் அதிக அளவில் உணவு கொடுப்பதால், அதுவளர்ந்தாலும் அதிகப்பருமனாகவே இருக்கும். குழந்தைகள் பருமனாக இருப்பதற்குச் சில நேரங்களில் அவர்களின் மரபணுக்களையும் காரணம் காட்டுவது உண்டு. சில குடும்பங்களில் பலர் பரம்பரையாகப் பருமனாக இருந்தாலும் அதைப் பரம்பரை நோய் என்று கூறமுடியாது. ஏன் என்றால், அக்குடும்பத்தில் உள்ள அனைவரும் பருமனாக இருப்பதில்லை. ஆகையால் தலைமுறை என்ற காரணத்திற்கும் மேலாக தவறான உணவுப் பழக்கங்களும், உடற்பயிற்சியோ, உடல் உழைப்போ இல்லாத வெறும் அதிகப் படிப்புச் சுமையினால், இப்பொழுதெல்லாம் ஓடி விளையாடும் நேரத்திலும் குழந்தைகள் விளையாடாமல் புத்தகமும் கையுமாக இருக்கிறார்கள். ஆண் குழந்தைகளைவிடப்பெண்குழந்தைகளே அதிகம் பாதிக்கப்படுகிறார்கள் என்று பல ஆய்வுகள் எடுத்துரைக்கின்றன. விளையாடுவதற்கு ஏற்ற திடல்களோ, வெற்றிடங்களே பல வீடுகளின் அருகில் இல்லாததால் வெளித் திடல்களில் விளையாடும் ஆட்டங்களில் அவர்களால் ஈடுபட முடிவதில்லை. அதனால் அவர்கள் பல மணி நேரங்களை விட்டில் கணிணி அல்லது தொலைக்காட்சி முன்னால் செலவிடுகின்றனர். விளைவு அவர்களுக்குத் தேவையான உடற்பயிற்சி முக்கியமாக நாம் கூர்ந்து நோக்க வேண்டிய விஷயம் ஒன்று உள்ளது. அது அனைத்திற்கும் மேலாகக் குழந்தைகளின் உணவுப் பழக்கமாகும். கடந்து பத்து ஆண்டுகளில், அவர்களின் உணவு வகை மிகவும் மாறி இருக்கிறது. பெற்றோர் இருவரும் பணிக்குச் சென்று விடுவதே இன்றைய பெரும்பாலான நடுத்தரக் குடும்பங்களின் சூழ்நிலையாகும் மாலை அல்லது இரவுவிட்டிற்கு வந்து ஊட்டச்சத்து மிக்க உணவு வகைகளைச் சமைக்க அவர்களுக்கு நேரம் கிடைப்பதில்லை. அதனால் அவர்கள் உணவு விடுதிகளில் கிடைக்கும் உணவுப் (Fast F000 பண்டங்களையே குழந்தைகளுக்கு அளிக்கிறார்கள் இவைகளில் அதிக எண்ணெய் மற்றும் வனஸ்பதி கலந்திருப்பதால், உடலில் கொழுப்புச் சக்தி அதிகரித்து குழந்தைகளின் எடையும் கூடிவிடுகின்றன. மேலும், குழந்தைகள் சமவிகித உணவினை Balanced Die) உட்கொள்ளப் பழக்குவது மிகவும் அவசியமாகும். தேவையான த்துப் பொருட்கள் இருக்கின்றதா என்று சரிபார்த்து அவர்கள் காய்கறி, பழம், பருப்பு வகைகளை உண்பதற்கு சிறு வயதிலிருந்தே ஊக்குவிக்க வேண்டும் அதிகம் சக்கரை சேர்த்து விற்பனையாகும் சுவை நீர்களை குடிப்பதற்கு பதிலாக சுத்தமான தண்ணிரை அருந்துவதற்கு ந்கவேண்டும் பெற்றோர்கள் குடுவைகளில் சுத்தமானநீரைக்கையோடு எடுத்துசசெல்லவேண்டும். அப்பொழுதுதான் குழந்தைகள் தாகம் என்று சொல்லும்பொழுது கடைகளில் கிடைக்கும் கோக் ஃபாண்டா போன்ற குளிர்பானங்களை வாங்கிக் கொடுக்காமல் தாங்கள் எடுத்துச் செல்லும் தண்ணிரைக் கொடுக்கலாம். ஆந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா? ஆகவே சிறு வயதில் நல்ல உணவு பக்கங்களை பழக்கினால் அவர்கள் வயது இன்னும் சொல்லப்போனால், குழந்தைப் பருவத்தில் உடல் பருமனாக இருப்பதை இப்பொழுது ஒரு நோய் என்றே மருத்துவ உலகம் கணிக்கின்றது முடிந்தவரை குடும்பத்தினர் அனைவரும் ஒன்றாக உணவு உண்னும் பழக்கத்தைக் கடைபிடிக்க முயற்சிக்க வேண்டும். ஆனால் இன்றைய காலகட்டத்தில் இது முடியுமா என்பது கேள்விக்குரிய விஷயம்தான். அதனால் முடிந்தவரை வார நாட்களில் இரவு உணவையும் விடுமுறை நாட்களில் மூன்று அல்லது நான்கு வேளையும் சேர்ந்து உணவு உண்பதற்கு முயற்சிக்க வேண்டும். இவ்வாறு சேர்ந்து உணவு உண்னும் பொழுது விட்டில் உள்ள பெரியவர்கள், குழந்தைகள் அதிக கொழுப்புச் சத்துள்ள கடைகளில் கிடைக்கும் உணவுப் பொருட்களைக் குறைந்த அளவில் உண்பதற்கோ அல்லது அறவே தவிர்ப்பதற்கோ அறிவுத்துவதற்கு வாய்ப்புகள் ஏற்படும். மேலும் கல்விக்கூடங்களில் சந்தான உணவு பழக்கங்களையும் சுகாதாரமான வாழ்க்கை முறையையும் ஒரு முக்கியமான பாடப்பிரிவாக வகுத்துக் பெற்றோர் உணவுப்பொருட்கள் வாங்கும் பொழுதும், உணவு தயாரிக்கும் பொழுதும் குழந்தைகளையும் தம்முடன் பங்கேற்கச் சொல்ல வேண்டும் அப்பொழுது தான் அவர்களின் விருப்பு வெறுப்புகளை நாம் அறிந்துக் கொள்ள முடியும் மற்றும் சத்துணவுப் பற்றிய விவரங்களையும் அவர்களுக்கு எடுத்துச் சொல்லவும் முடியும் மேலும் சத்துணவைத்தயாரிப்பதில் பெற்றோருடன் ஈடுபடும் பொழுது அவர்களுக்கு அவ்வுணவைச்ாப்பிடவேண்டும் என்றடுபாடு அவசியம் ஏற்படும் உடல் பருமனைப் பற்றிய விழிப்புணர்வு உடல் உழைப்பின் அவசியம், கொழுப்பு உணவுகளுக்கு மாறுபட்ட சத்துணவு செய்முறை ஆகியவற்றைப் பற்றிய பல சமுதாய அமைப்புகள் பரப்பி வருக்னிறன. உதாரணமாக (CHETNA – Children health Education through Nutrition and health Awaneness Program). (MARG – Medical Education for Children Adolescents for realistic prevention of Obesity and Diabetes and for healthy Agening) and usic அமைப்புகளும் உடல் பருமனால் ஏற்படக்கூடிய விளைவுகளை விவாதங்கள் நாடகங்கள் விரிவுரைகள், அறிக்கைகள் மூலம் உணர்த்துகின்றன. எடையை எப்பொழுது எப்படி அளக்க வேண்டும் என்று அறிந்து கொள்வது அவசியம் அமெரிக்க CHS Standard விதியின்படி 98 Cente க்குமேல் உள்ள குழந்தைகளை அதீத பருமனுடையவர்கள் எனக் கருதுகிறார்கள். அதே போன்று குழந்தை சரியான எடையுடனும் உயரத்துடனும் வளர்ந்து வருகின்றதா என்று பெற்றோர்கவனத்துடன் கண்காணிப்பதுஅவசியமாகும் குழந்தை பிறந்தவுடன் அதன் எடையை அளக்க வேண்டியது அவசியமாகும்.