POST: 2025-09-10T09:06:37+05:30

செல்லிடத்துக் காப்பான் சினங்காப்பான் எனத் தொடங்கும் அருங்குறள் எண் முந்நூற்று ஒன்று; சொல்லெடுத்துக் கருத்துப்பிழிந்து வெல்லச் சொற்களை அள்ளி வழங்கும் உலகத்தமிழிதழ் முந்நூற்று ஒன்று

POST: 2025-09-09T10:09:03+05:30

செய்திக்குறிப்பு தமிழ் வளர்ச்சித் துறையின் 2022–2023ஆம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கையின்போது, மாண்புமிகு அமைச்சர் (தொழில் துறை) அவர்களால் சட்டமன்றப் பேரவையில் 19.04.2022ஆம் நாளன்று பின்வரும் அறிவிப்பு வெளியிடப்பட்டது. “ஊடகங்களில் தமிழ்ச் செய்திகளைத் தவறில்லாமலும், அழகாகவும், சரியாகவும் உச்சரிக்கும் செய்தி வாசிப்பாளர்கள், நேர்காணல் செய்பவர்கள் மற்றும் நிகழ்ச்சித் தொகுப்பாளர்களை ஊக்குவிக்கும் வகையில் ஆண்டுக்கு நான்கு பேரைத் தெரிவு செய்து அவர்களை பாராட்டி ஒவ்வொருவருக்கும் ரூ.25,000/- பரிசுத் தொக ...

POST: 2025-09-08T10:27:45+05:30

ஆட்சி மொழி பயிலரங்கம் மற்றும் கருத்தரங்கம் இராணிப்பேட்டை மாவட்டத்தில் 4.9.25 வியாழக்கிழமை நண்பகல் 12 மணி அளவில் தமிழ் வளர்ச்சித்துறை சார்பாக துணை இயக்குநர் திருமதி ஜெயஜோதியின் ஒருங்கிணைப்பில் நடைபெற்ற பயிலரங்கத்தில் கலந்துகொண்டு விழாச் சிறப்புரையாற்றி பங்கு கொண்ட அலுவல் பணியாளர்களுக்கு சான்றுகளை வழங்கி மகிழ்ந்தேன்.

POST: 2025-09-07T10:37:39+05:30

தமிழ் வளர்ச்சித் துறையின் கிருஷ்ணகிரி மற்றும் தருமபுரி அலுவலகங்கள் ஆய்வு 3.9.25 புதன்கிழமை அன்று மதியம் 2 மணியளவில் கிருஷ்ணகிரி ஆட்சியர் அலுவலத்தில் 2007 ஆம் ஆண்டு முதல் இயங்கி வரும் தமிழ் வளர்ச்சித் துறையின் உதவி இயக்குநர் அலுவலகத்தினையும் அவ்வண்ணமே மாலை 5 மணி அளவில் தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 1983 ஆம் ஆண்டு முதல் இயங்கி வரும் தமிழ் வளர்ச்சித் துறையின் உதவி இயக்குநர் அலுவலகத்தின் செயலாக்கப் பணிகளோடு பல்வேறு அலுவல் காப்புப் பதிவேடுகளையும் ஆய்வு செய்தேன். கிருஷ்ணகிரி மற்றும் தர ...

POST: 2025-09-06T11:08:17+05:30

பண்ணைத் தமிழ்ச் சங்கம் ஐம்பெரும் விழா 42 ஆம் ஆண்டுத் தொடக்க விழா தமிழ்ச் சான்றோர்க்கு விருது விழா கவிதைத் திருவிழா நூல் வெளியீட்டு விழா சிறந்த கவிதை நூல் பரிசளிப்பு விழா நாள் : 6 9 2025 - சனிக்கிழமை மாலை 2.30 இடம் : அண்ணா நூற்றாண்டு நூலகம் இரண்டாம் மாடி சிறப்பு விருந்தினர்கள் : மாண்பமை நீதியரசர் இராஜேஸ்வரன் வள்ளல்நேசன் மருத்துவர் ஜெயராஜமூர்த்தி முனைவர் ஒளவை ந அருள் இயக்குநர் - தமிழ் வளர்ச்சித்துறை பேராசிரியர் முனைவர் ச சுப்பிரமணியன் திருச்சி பேராசிரியர் ...

POST: 2025-09-05T09:23:16+05:30

இன்று உரைவேந்தர் சித்தாந்த கலாநிதி ஔவை துரைசாமி அவர்களின் 123 ஆம் பிறந்த நாளாகும்.(5.9.25) உரைவேந்தரைக் குறித்து நாவேந்தர் ஔவை நடராசன் அவர்கள் எழுதிய குறிப்பினை மறவாமல் பதிவு செய்கிறேன் ஆசிரியர் தினம் =============== நூலறி புலவ! ஆசிரியர் பெரும! ============================= இன்று என் தந்தையைப் பற்றிய நினைவு பற்றி படருகிறது. 123 ஆண்டுகளுக்கு முன்னர், ஔவையார் குப்பம் என்ற சிற்றூரில் பிறந்த திரு.துரைசாமி, திரு.மயிலாசனம், திரு.முத்துகுமாரசாமி திரு.சுப்பிரமணியன் ஆகிய மூவருக்குப் பின் பிறந் ...

POST: 2025-09-04T08:42:16+05:30

ஆய்வும் -செயலாக்கமும் 2.9.2025 செவ்வாய்க்கிழமை மாலை 5 மணியளவில் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் இயக்கக அலுவலகத்தில் தமிழ் வளர்ச்சித் துறையால் ஆட்சி மொழித்திட்ட செயலாக்கம் தொடர்பான ஆய்வின் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட ஆய்வறிக்கை காவல்துறை தலைமை இயக்குநர் திருமதி சீமா அகர்வால் இ கா ப அவர்களிடம் வழங்கப்பட்டதோடு அவர்களின் முன்னிலையில் அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு ஆட்சி மொழித் திட்டச் செயலாக்கம் குறித்து உரையாற்றினேன்.

POST: 2025-09-03T09:06:31+05:30

சுடர்த்தொடித் கோமகள்... எனத் தொடங்கும் பரணரின் நற்றிணைப் பாடல் எண் முந்நூறு சுடர்தமிழ்க் கருத்துகளைப் பக்கந்தோறும் பரப்பி வரும் உலகத்தமிழிதழ் வரிசை முந்நூறு

POST: 2025-09-02T10:06:47+05:30

பறவைகள் பலவிதம் 23.8.25 சனிக்கிழமையன்று உதகமண்டலத்தின் மலையோரத்தில் எழிலார்ந்த சோலையில் பல வண்ணக்கிளிகள் புடை சூழ என்னருகில் விரிந்து பறந்து வந்த போது வியப்பால் விழிகள் விரிந்தன... எவ்வண்ணமாய்ப் பறக்கும் எப்பறவையாயினும் உன் ஐவண்ணத்துள்ளே அடங்கும் மெய் வண்ணம் என்ற அழகர் கிள்ளை விடு தூது வரிகளைப் பாடி மகிழ்ந்தேன்.

POST: 2025-09-01T10:57:33+05:30

முத்தமிழ் திருவிழா உதகையிலுள்ள எஸ் ஆர் வி எஸ் பள்ளி வளாகத்தில் 23.5.25 சனிக்கிழமை நண்பகல் 12 மணி அளவில் தமிழியக்கம் சார்பாக நடைபெற்ற முத்தமிழ் விழாவில் தமிழ் ஆர்வலர்களுக்கும் போட்டிகளில் பரிசு பெற்ற மாணவச் செல்வங்களுக்கும் விருதுகளும் பரிசுகளும் வழங்கி உரையாற்றி மகிழ்ந்தேன்.