சென்னை மாநகராட்சியின் மாமன்ற கூட்டம் மேயர் பிரியா தலைமையில் ரிப்பன் வளாக கூட்ட அரங்கில் 29.8.24 நடைபெற்றது.
இதில் 54 தீர்மானங்கள் இயற்றப்பட்டன.
அதில் ஒன்றாக, தமிழறிஞர் ஒளவை நடராஜன் நினைவாக அவர் இல்லம் அமைந்துள்ள அண்ணா நகர் கிழக்கு 2ஆவது முதன்மைச் சாலைக்கு ஒளவை நடராசன் முதன்மைச் சாலை என பெயர் சூட்டுவதற்கு தீர்மானம் இயற்றப்பட்டது.
சென்னை மாநகராட்சி தீர்மானம்
நிம.உதுந.க.எண்.எல்.இ1/2661/2023
ஆணையர் அவர்களின் 16.08.2024 நாளிட்ட குறிப்பு
பொருள் எண்.44
பெருநகர சென்னை மாநகராட்சி நிலம் மற்றும் உடைமைத்துறை
மருத்துவர் து.மெய்கண்டான் அவர்கள் தமிழறிஞர் ஔவை நடராசன் அவர்கள் வசித்து வந்த தாரகை இல்லம் அமைந்துள்ள அண்ணாநகர், கிழக்கு (ஜே 82), 2வது முதன்மைச் சாலைக்கு
ஒளவை நடராசன் முதன்மைச் சாலை என பெயர் சூட்டுவதற்கு மன்ற தீர்மானம் நிறைவேற்றிட அரசின் அனுமதி பெறப்பட்டது
-மன்றத்தின் அனுமதி.
இயக்குநர். தமிழ் வளர்ச்சி இயக்ககம் அவர்களின் கடிதத்தில், “
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள செய்யாறில் உலகம்மாள் உரைவேந்தர் ஔவை துரைசாமி ஆகியோருக்கு மகனாக 1936ஆம் ஆண்டு ஏப்ரல் திங்கள் 24 அன்று பிறந்த ஒளவை நடராசன் அவர்கள்.
தனது இளமைக் காலத்தில் திருப்பதி,அண்ணாமலை நகர் ஆகிய இடங்களில் பள்ளிப்படிப்பையும்.
மதுரை தியாகராசர் கல்லூரியில் முதுகலைப் பட்டமும்,
சென்னை பச்சையப்பன் கல்லூரியில் முனைவர் பட்டமும் பெற்றார் என்றும்,
கல்லூரி காலத்தில் மாநில அளவிலான பேச்சுப் போட்டிகள் பலவற்றில் கலந்துகொண்டு பரிசுகளைப் பெற்றுள்ளார் என்றும்,
உவமைக் கவிஞர் சுரதா அவர்கள் பாதி அண்ணாதுரை’ என்று இவரைப் பாராட்டி பாடல் எழுதும் அளவிற்கு தனது திறமையை வளர்த்துக் கொண்டு தமிழ் மட்டுமின்றி ஆங்கிலத்திலும் தமது புலமையை வளர்த்துக்கொண்டவர் என்றும்,
அவர் பெற்ற தமிழ்ப் புலமையால் கல்லூரிகளில் விரிவுரையாளராகப் பணியாற்றியுள்ளார்
மேலும் அவரிடம் பயின்ற மாணவர்கள் பலர் அரசியல் தலைவர்களாகவும், சட்டமன்ற. நாடளுமன்ற உறுப்பினர்களாகவும், கல்வியாளர்களாகவும். இலக்கிய ஆளுமையாளர்களாகவும் இன்றளவும் தடம்பதித்து வருகின்றனர் என்றும்,
கல்விப் பணிகளில் மட்டுமின்றி நிருவாகப் பணிகளிலும் தனது ஆளுமையை நிருபித்த ஒளவை நடராசன் அவர்கள், செய்தித்துறையின் துணை இயக்குநராகவும். மொழிபெயர்ப்புத் துறை இயக்குநராகவும். தமிழ் வளர்ச்சித் துறையின் செயலராகவும், தமிழ் பல்கலைக்கழக துணை வேந்தராகவும், செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் துணைத் தலைவராகவும் தனது முத்திரையைப் பதித்து முத்தமிழறிஞர் மு. கருணாநிதி உள்ளிட்ட மூன்று மேலாள் முதலமைச்சர்களிடமும் பணியாற்றிய பெருமைக்குச் சொந்தக்காரராவார் என்றும்,
சங்க இலக்கிய ஆய்வில் புலமைச் செவ்வியர்’ என்னும் நூலும், கம்பரின் காவியத்தைப் பற்றி அவர் எழுதிய கட்டுரைத் தொகுப்புகள் கம்பர் விருந்து’ என்னும் பெயரிலும், வள்ளலார் நூற்றாண்டு விழாவில் அவர் ஆற்றிய சொற்பொழிவு வாழ்விக்க வந்த வள்ளலார்’ என்னும் தலைப்பிலும் நூலாக வெளிவந்துள்ளன என்றும். மகாகவி பாரதியார் குறித்து அவர் ஆற்றிய உரைகள் எழுதியக் கட்டுரைகள் பாரதி பல்சுவை என்னும் தலைப்பில் நூலாக வெளிவந்துள்ளது பேரறிஞர் அண்ணாவின் பன்முகம் என்னும் தலைப்பிலும் நூலைப் படைத்துள்ளார் என்றும். இலங்கை கம்பர் கழகத்தின் சார்பில், தன்னேரிலாத தமிழ் மகன்’ விருதும், மதுரைக் காமராசர் பல்கலைக்கழகம் சார்பில், ‘தமிழ்ப் பேரவைச் செம்மல் விருதும். தமிழ்நாடு அரசின் கலைமாமணி’ விருதும், இவரது வாழ்நாள் சாதனைகளைப் பெருமைப்படுத்தும் வகையில் இந்திய அரசின் உயரிய விருதான பத்மஸ்ரீ விருதும் தமிழறிஞர் ஒளவை நடராசன் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன என்றும்.
ஆதலால்,
மருத்துவர் து.மெய்கண்டான் அவர்கள் தமிழறிஞர் ஔவை நடராசன் அவர்கள்
வசித்து வந்த தாரகை இல்லம் அமைந்துள்ள அண்ணா நகர். கிழக்கு (ஜே 82).
2வது முதன்மைச்
சாலைக்கு
“ஒளவை நடராசன் முதன்மைச் சாலை”
என பெயர் சூட்டுமாறு கேட்டுக்
கொண்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசாணை (நிலை)எண். 98 நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் (மா.ந.6) துறை. நாள் 11072022யின்படி, புலத்தணிக்கை மேற்கொண்டு பரிந்துரையுடன் கூடிய விரிவான அறிக்கையை அனுப்ப கோரி மண்டல அலுவலர். மண்டலம்-8 அவர்களிடம் கேட்டுக்கொள்ளப்பட்டதற்கு, மண்டல அலுவலர். மண்டலம்-8 அவர்களின் குறிப்பில். தமிழ் வளர்ச்சி இயக்குநர் அவர்களின் கடிதத்தின் அடிப்படையில், தமிழக செய்தித்துறையின் துணை இயக்குநராகவும் மொழிபெயர்ப்புத் துறை இயக்குநராகவும், தமிழ் வளர்ச்சித் துறையின் செயலராகவும், தமிழ் பல்கலைக்கழக துணை வேந்தராகவும். செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் துணைத் தலைவராகவும் மூன்று மேலாள் முதலமைச்சர்களிடமும் பணியாற்றிய பெருமைக்குச் சொந்தக்காரராக திகழ்ந்த மறைந்த ஒளவை நடராசன் அவர்களின் சாதனைகளை பெருமைப்படுத்தும் விதமாக அன்னார் வாழ்ந்த சென்னை அண்ணா நகர் கிழக்கு (ஜே 82) 2வது முதன்மைச் சாலைக்கு ஒளவை நடராசன் முதன்மைச் சாலை என பெயர் சூட்டிட 8வது மண்டல வார்டு குழுவின் அனுமதி பெற்று (தீர்மான எண் :1027) நிலம் மற்றும் உடைமைத்துறைக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
தமிழறிஞர் ஔவை நடராசன் அவர்கள் வசித்து வந்த தாரகை இல்லம் அமைந்துள்ள அண்ணா நகர், கிழக்கு ((ஜே 82), 2வது முதன்மைச் சாலைக்கு “ஒளவை நடராசன் முதன்மைச் சாலை என பெயர் சூட்டுவதற்கு பெருநகர சென்னை மாநகராட்சியின் மாமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றிட அனுமதி வழங்குமாறு அரசு முதன்மைச் செயலாளர். நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அவர்களுக்கு 13.032024 நாளிட்ட இவ்வலுவலக கடிதம் மூலம் கேட்டுக்கொள்ளப்பட்டது.
அரசு முதன்மைச் செயலாளர் அவர்களின் 31.07.2024 நாளிட்ட கடிதத்தில் தமிழறிஞர் ஒளவை நடராசன் அவர்கள் வசித்து வந்த தாரகை இல்லம் அமைந்துள்ள அண்ணா நகர் கிழக்கு (ஜே 82). 2-வது முதன்மைச் சாலைக்கு “ஒளவை நடராசன் முதன்மைச் சாலை” என பெயர் சூட்டுவற்கு பெருநகர சென்னை மாநகராட்சி மாமன்றத்தின் முன் ஒப்புதலுக்கு வைத்திட அரசால் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
மேற்காணும் தீர்மானம் நிறைவேற்றிய பிறகு இப்பொருள் தொடர்பான உரிய கருத்துருவினை அரசுக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
எனவே மண்டலம்-8 பகுதி-23. கோட்டம்-102ல் உள்ள தமிழறிஞர் ஔவை நடராசன் அவர்கள் வசித்து வந்த தாரகை இல்லம் அமைந்துள்ள அண்ணா நகர் கிழக்கு (ஜே 82). 2-வது முதன்மைச் சாலைக்கு “ஔவை நடராசன் முதன்மைச் சாலை” என பெயர் சூட்டுவற்கு நிலைக்குழு (வரிவிதிப்பு மற்றும் நிதி) மூலமாக மன்றத்தின் அனுமதி வேண்டி சமர்ப்பிக்கப்படுகிறது.
“23.08.2024 அன்று நடைபெற்ற நிலைக்குழு (வ.வி.ம.நி.) கூட்டத்தில் தீர்மான எண்.137/2024, நாள்.23.08.2024ன்படி இதற்கு நிலைக்குழு (வ.வி.ம.நி.) பரிந்துரை செய்து மன்றத்தின் அனுமதி வேண்டி சமர்ப்பிக்கப்படுகிறது.”
மக்கள் குரல் 30.8.2024
வெள்ளிக்கிழமை
பக்கம் 10
தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர்
சென்னையில் அண்ணா நகர் கிழக்கு 2வது முதன்மைச் சாலைக்கு ஒளவை நடராசன் பெயர்
சென்னை, ஆக 30-
தமிழறிஞர் ஒளவை நடராசன் வசித்து வந்த தாரகை இல்லம் அமைந்துள்ள அண்ணாநகர் கிழக்கு (ஜே 82) 2வது முதன்மைச் சாலைக்கு ஒளவை நடராசன் முதன்மைச் சாலை என பெயர் சூட்டுவதற்கு சென்னை மாநகராட்சி தீர்மானம் நிறைவேற்றிட அரசின் அனுமதி பெறப்பட்டது.
செய்யாறில் உலகம்மாள் உரைவேந்தர் ஒளவை துரைசாமி ஆகியோருக்கு மகனாக 1936ஆம் ஆண்டு ஏப்ரல் 24ந் தேதி பிறந்தவர் ஒளவை நடராசன்.
தனது இளமைக் காலத்தில் திருப்பதி, அண்ணாமலை நகர் ஆகிய இடங்களில் பள்ளிப் படிப்பையும், மதுரை தியாகராசர் கல்லூரியில் முதுகலைப் பட்டமும், சென்னை பச்சையப்பன் கல்லூரியில் முனைவர் பட்டமும் பெற்றவர்.
கல்லூரி காலத்தில் மாநில அளவிலான பேச்சுப் போட்டிகளில் கலந்து கொண்டு பரிசுகளைப் பெற்றுள்ளார். உவமைக் கவிஞர் சுரதா ‘பாதி அண்ணாதுரை’ என்று இவரைப் பாராட்டி பாடல் எழுதும் அளவுக்கு தனது திறமையை வளர்த்துக் கொண்டு தமிழ் மட்டுமின்றி ஆங்கிலத்திலும் தனது புலமையை வளர்த்துக் கொண்டவர்.
அவர் பெற்ற தமிழ்ப் புலமையால் கல்லூரிகளில் விரைவுரையாளராகப் பணியாற்றியுள்ளார்.
மேலும் அவரிடம் பயின்ற மாணவர்கள் பலர் அரசியல் தலைவர்களாகவும், சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்களாகவும், கல்வியாளர்களாகவும், இலக்கிய ஆளுமையாளர்களாகவும் இன்றளவும் தடம் பதித்து வருகின்றனர்.
கல்விப் பணிகளில் மட்டுமின்றி நிர்வாகப் பணிகளிலும் தனது ஆளுமையை நிரூபித்த ஒளவை
நடராசன் செய்தித்துறையின் துணை இயக்குனராகவும், மொழியெர்ப்புத் துறை இயக்குனராகவும், தமிழ் வளர்ச்சித்துறையின் செயலராகவும், தமிழ் பல்கலைக்கழக துணை வேந்தராகவும், செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் துணைத் தலைவராகவும் முத்திரை பதித்து முத்தமிழறிஞர் மு.கருணாநிதி, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகிய 3 முதலமைச்சர்களிடமும் பணியாற்றிய பெருமைக்குச் சொந்தக்காரரர்.
பேரறிஞர் அண்ணாவின் பன்முகம் என்னும் தலைப்பில் நூலைப் படைத்துள்ளார்.
இலங்கை கம்பர் கழகத்தின் சார்பில் ‘தன்னேரிலாத தமிழ் மகன்’ விருதும், மதுரை காமராசர் பல்கலைக்கழகம் சார்பில் ‘தமிழ்ப் பேரவைச் செம்மல்’ விருதும், தமிழ்நாடு அரசின் ‘கலைமாமணி’ விருதும், இவரது வாழ்நாள் சாதனைகளைப் பெருமைப்படுத்தும் வகையில் இந்திய அரசின் உயரிய விருதான ‘பத்மஸ்ரீ’ விருதும் தமிழறிஞர் ஒளவை நடராசனுக்கு வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.சென்னை மாநகராட்சியின் மாமன்ற கூட்டம் மேயர் பிரியா தலைமையில் ரிப்பன் வளாக கூட்ட அரங்கில் 29.8.24 நடைபெற்றது.

இலங்கை கம்பர் கழகத்தின் சார்பில் ‘தன்னேரிலாத தமிழ் மகன்’ விருதும், மதுரை காமராசர் பல்கலைக்கழகம் சார்பில் ‘தமிழ்ப் பேரவைச் செம்மல்’ விருதும், தமிழ்நாடு அரசின் ‘கலைமாமணி’ விருதும், இவரது வாழ்நாள் சாதனைகளைப் பெருமைப்படுத்தும் வகையில் இந்திய அரசின் உயரிய விருதான ‘பத்மஸ்ரீ’ விருதும் தமிழறிஞர் ஒளவை நடராசனுக்கு வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.