POST: 2024-04-06T06:53:47+05:30

ஊர்ப்பெயர்' ஆராய்ந்தவுனக்கு ஊரும் பேருமே ஔவை! தமிழ் வளர்ந்த இடங்களில் எல்லாம் நீ வளர உன்னால் ஆய்வுகள் மலர 'கலவை'யில் இருந்தபோதும் எந்தக் கலவையிலும் ஒன்றாதவன்! தமிழ்வாழ்வு குன்றாதவன்! அண்ணா மலை தமிழ்ப்புலத்தின் அகன்ற வளாகம்-தமிழரும் அகன்ற 'சைவ சமயத்தையும் 'ஞானாமிர்தத்தை'யும் ஞாலத்திற்கு அளித்தது! அச்சில் வராத உன் நூல்கள் குழந்தையின் எச்சில் படாதத் தாயின் கன்னங்களாகவே தமிழுலகு நினைக்கிறது! சேர மன்னர் வரலாறு தமிழரிடம் போய்ச ...

POST: 2024-04-05T06:51:43+05:30

_உரைவேந்தர் * அவ்வை சு.துரைசாமி அவர்களின் நினைவுநாள் : ஏப்பிரல் 3*_ ( 3 4 1981 ) _ஆரியம் *உ.வே.சா.* அவர்களை அனுப்பி எதிர்த்தது._ _திராவிடம் *ஏ.டி.பன்னீர்ச்செல்வம்* அவர்களை அனுப்பிப் பாதுகாத்தது._ ................................................................. _*ஐங்குறுநூறு* நூலுக்கு உரை எழுதி வெளியிடும் முயற்சியில் ஈடுபட்டார் *அவ்வை சு.துரைசாமி* அவர்கள்._ _செய்தி அறிந்த உ .வே.சா. அவர்கள், பதிப்புரிமை அடிப்படையில் வழக்கு தொடர்ந்து , அவ்வை துரைசாமி அவர்களின் நூல் வராமல் தடுக்க முயன்றார்._ ...

POST: 2024-04-04T07:01:42+05:30

உரைவேந்தர் ஔவை துரைசாமிப்பிள்ளை 42வது நினைவு நாள் ============================================== இந்த நினைவு நாளை (3.4.2024). என் சித்தப்பா டாக்டர் ஒளவை மெய்கண்டார் மதுரை மாநகரில் 1000 பேருக்கு உணவளிக்கும் வகையில் அமைத்திருக்கிறார். கம்ப இராமாயணத்தில் குகனுக்கு இலக்குவனின் தாயை அறிமுகப்படுத்தும் “உளன் எனப் பிரியா தான் ஒரு தம்பி” என்ற தொடர் தான் என்னை உருக வைக்கிறது என்று அப்பா அடிக்கடி சொல்லக் கேட்டு இருக்கிறேன். ஈடில்லா பேராசிரியர்களான திருமதி.நிர்மலா மோகன்(28.2.2018), நினை ...

POST: 2024-04-03T08:30:43+05:30

அற்றார் அழிபசி தீர்த்தலை வலியுறுத்தும் குறள் எண் இருநூற்(று) இருபத்(து) ஆறு; உற்றார் அறிவுப்பசி தீர, தீந்தமிழ்ப் படைப்புகளைத் திரட்டி வரும் உலகத்தமிழிதழ் இருநூற்(று) இருபத்(து) ஆறு.

POST: 2024-04-02T09:00:14+05:30

மாநிலக் கல்லூரி (தன்னாட்சி), சென்னை 600 005. தமிழ்த்துறை முத்தமிழ் விழா - 2024 அன்புடையீர், வணக்கம், நம் தமிழ்த்துறையின் முத்தமிழ் விழாவானது திருவள்ளுவர் ஆண்டு 2055 பங்குனி 26 (02.04.2024) செவ்வாய்க்கிழமை முற்பகல் 11.00 மணிக்குப் பழைய தேர்வரங்கத்தில் நடைபெற உள்ளது. தமிழ்த்தாய் வாழ்த்து வரவேற்புரை : முனைவர் ப.தாமரைக்கண்ணன் தமிழ்த்துறைத் தலைவர் ஆண்டறிக்கை வாசித்தல்: முனைவர் இரா.பசுபதி இணைப்பேராசிரியர், தமிழ்த்துறை தலைமையுரை : முனைவர் இரா.இராமன் சென்னை மண்டலக் கல்லூரிக் கல்வி இணை இயக் ...

POST: 2024-04-01T10:42:54+05:30

ஒளவையின் நிழலும் அருந்தமிழ் ஆளும்.. தனக்குத் தரப்படும் எந்தச் செயலையும் புரிந்து செயலாற்றுவதில் வல்லவர் பொன்னேரி பிரதாப் என்று பொன்னாரம் சுட்டலாம் என்ற அடிக்கடி அப்பா தன்னுடைய தனிச்செயலாளர் பற்றி குறிப்பிடுவது உண்டு அன்றாடம் தான் கையாளும் எண்ணற்ற பணிகளை முன்னுரிமை தந்து வரிசைப்படுத்தி அவற்றுக்கான கால அளவை நிர்ணயித்து மன உறுதியோடு அவர் செய்து முடிக்கும் திட்பம் கண்டு மகிழ்ந்து என் பெற்றோர்கள் பாராட்டுவது உண்டு. பெற்றோர்கள் இன்று இருந்திருந்தால் பிரதாப்பை கொண்டாடியிருப்பார்கள்.. ...

ஒளவையின் நிழலும் அருந்தமிழ் ஆளும்..

ஒளவையின் நிழலும் அருந்தமிழ் ஆளும்.. தனக்குத் தரப்படும் எந்தச் செயலையும் புரிந்து செயலாற்றுவதில் வல்லவர் பொன்னேரி பிரதாப் என்று பொன்னாரம் சுட்டலாம் என்ற அடிக்கடி அப்பா தன்னுடைய தனிச்செயலாளர் பற்றி குறிப்பிடுவது உண்டு அன்றாடம் தான் கையாளும் எண்ணற்ற பணிகளை முன்னுரிமை தந்து வரிசைப்படுத்தி அவற்றுக்கான கால அளவை நிர்ணயித்து மன உறுதியோடு அவர் செய்து முடிக்கும் திட்பம் கண்டு மகிழ்ந்து என் பெற்றோர்கள் பாராட்டுவது உண்டு. பெற்றோர்கள் இன்று இருந்திருந்தால் பிரதாப்பை கொண்டாடியிருப்பார்கள்.. ...

POST: 2024-03-31T07:35:20+05:30

1.3.24 வெள்ளிக்கிழமை இலக்கியமாமணி பேராசிரியர் அரங்க இராமலிங்கம் இல்லத் திருமண வரவேற்பு நிகழ்வு இடம் :புதிய உடல்ண்சு உணவகம்

POST: 2024-03-30T07:00:14+05:30

உலக இட்டலி நாள் – 30.03.2024 ============================ இட்டலிக்கு ஏதிங்கே இணை ! ----------------------------------------------- ஆவியில் வேக வைத்து வெளியில் எடுத்துக் கையால் இட்டு அளிப்பதற்கு இட்டலி என்ற பெயர் வந்ததாம். அவிப்பது என்ற வகையில் இட்டவி ஆயிற்று. ளகரம் லகரமாகத் திரிந்து வெந்தது. இது அரிசியும் உளுந்தும் கலந்த தமிழுணவாகும் இட்டலியின் தம்பி தான் கொழுக்கட்டையாகும் . இது முழுக்கத் முழுக்க தமிழ்நாட்டு உணவு என்று சொல்வதற்கேற்பத் தமிழர்களை இட்லி சாம்பார் என்று புதுதில்லியில் வழ ...

POST: 2024-03-29T12:29:05+05:30

8.3.24 பிறந்த நாள் வாழ்த்து வெல்க தினத்தந்தி ! எழுத்துக்கூட்டிப் படிக்க முயலும் தமிழ் மக்களுக்கேற்ற எளிய நடையில் உலகச் செய்திகளோடு உள்ளூர் செய்திகளையும் நாள் தவறாமல் கோடிக்கணக்கான மக்களின் நெஞ்சத்தைக் கொள்ளை கொண்டிருக்கும் ஒரே நாளிதழாக தினத்தந்தி திகழ்கிறது. தமிழர் தலைவர் தினத்தந்தியை வளர்த்தார். செம்மல் சிவந்தி ஆதித்தனார் செழிக்க வைத்தார். பெருமை மிகு பாலசுப்பிரமணியன் ஆதித்தனார் செழிப்போடு சிறப்பாக மெருகூட்டி செயற்கை நுண்ணறிவுக் கால மாற்றங்களுக்கு ஏற்பக் கொழிக்க வைத்திருக்கிறார். ...