POST: 2024-04-15T09:53:19+05:30

3.3.24 இனிய நண்பரின் மறைவிற்கு ஒரு நாள் முன் நடந்த நிகழ்ச்சி இரத்தனகிரி பாலமுருகன் அடிமை சாமி வழங்கிய சிறப்பு வழிபாட்டு ஆடை,பூசை பொருட்கள் இனிய நண்பர் நாடகச் செம்மல் வைத்தீஸ்வரன் அவர்களுக்கு அவரின் இல்லத்தில் வழங்கிய நெகிழ்வான தருணம்

POST: 2024-04-14T13:35:19+05:30

' அண்ணல் அம்பேத்கர் அவர்களின் 134 ஆம் பிறந்தநாள் (14.4.24) சமத்துவ நாள் உறுதிமொழி 12.4.24 வெள்ளிக்கிழமையன்று தமிழ் வளர்ச்சி இயக்கத்தில் படிக்கப்பட்டது சாதி வேறுபாடுகளுக்கு எதிராகவும், சாதிகளின் பெயரால் நடக்கும் சமூக அடக்குமுறைகளுக்கு எதிராகவும், தொடர்ந்து போராடி, ஒதுக்கப்பட்டவர்களுடைய உரிமைகளுக்காகவும், ஒடுக்கப்பட்டவர்களுடைய சமத்துவத்திற்காகவும், வாழ்நாள் எல்லாம் குரல் கொடுத்து, எளிய மக்களின் உரிமைகளைப் பற்றி விழிப்புணர்வை ஊட்டிய, நம் அரசியலமைப்புச் சட்டத்தை வகுத்துத் தந்த அண்ணல் அம்பேத் ...

POST: 2024-04-13T11:01:30+05:30

ஆனந்த விகடன் 11 4 2024 பக்கம் எண் : 88-89. உலகத் தமிழ்ச் சங்கம்.... இது தமிழகத்தின் அடையாளம் ! உலகத் தமிழ்ச் சங்கம் மூலம் இதுவரை 22 நூல்கள் வெளியிடப்பட்டுள்ளன. மின் நூல் வடிவில் பல நூல்கள் வெளியிடப்பட்டுள்ளன. பண்டைய தமிழகத்தில் மதுரையை மையமாகக் கொண்டு மூன்று தமிழ்ச் சங்கங்கள் இயங்கின. அந்நிய மன்னர்களின் ஆட்சியில் தமிழ்ச் சங்கம் மறைந்துவிட்ட நிலையில் தமிழின் தொன்மை இலக்கியங்கள், அறநூல்கள், ஓலைச்சுவடிகள் அழிந்துவிடாமல் இருக்க, 1901-ம் ஆண்டில், சேதுபதிகள் வழிவந்த பாலவநத்தம் ஜமீன்தார், ...

POST: 2024-04-12T09:32:43+05:30

பழுத்துப் பண்பட்ட குணக்குன்று மறைந்ததே! அறிஞர் ப ஸ்ரீ ராகவன் (29.6.1927-10.4.2024) தனது கனிந்த முதிர்ந்த 97 ஆம் அகவையில் மறைந்தார் என்ற செய்தி துயரத்தைத் தருகிறது. எந்தையாரின் இனிய நண்பர், பல்லாண்டுகளுக்கு முன்பு தஞ்சை தமிழ்ப்பல்கலைக் கழகத்திற்கு, அறிவுரைஞர் குழுவில் சென்று வந்து கண்டு பேசியதை அப்பா என்னிடம் அடிக்கடி வேடிக்கையாக சொல்லுவார் ஆங்கில நாளேடான பிசினஸ் லைனில் அவர் தொடர்ந்து எழுதிய ஒப்பினியன் (Opinion)என்ற தலைப்பிலான கட்டுரையினை அப்பாவிடம் படித்துக் காட்டுவதற்காகவே அவ்விதழை வாங ...

POST: 2024-04-11T12:18:08+05:30

தோற்றம்: 9.9.1926 மறைவு: 9.4.2024 அருளாளர் ஆர்.எம்.வீ ஒர் ஆலயம்! குறிப்பின் குறிப்புணர்வாரை என்று சொல்வது போல புரட்சித்தலைவரின் குறிப்பறிந்து நடப்பதில், ஆர்.எம்.வீ.க்கு நிகராக, யாரையும் சொல்ல முடியாது" பல ஆண்டுகளுக்கு முன்பு, இராயப்பேட்டையில் திருவள்ளுவர் கழகம் என்பதை நடத்தினார். சென்னை, கம்பன் கழகத்தில் தலைவராகவும் பொறுப்பு வகித்தார். அவரிடம் கனிவு எவ்வளவு உண்டோ, அந்த அளவிற்குக் கண்டிப்பும் உண்டு. ஆனால், தெளிவான முடிவெடுப்பதில் தேர்ந்தவராக, ஆர்.எம்.வீ. அவர்கள், அருளாளராகவும், பண்ப ...

POST: 2024-04-10T08:39:48+05:30

நயனில் கூற்றத்துக்கு நயம்பட உரைக்கும் ஆவடுதுறை மாசாத்தனார் புறநானூற்றுப் பாடல் எண் இருநூற்(று) இருபத்(து) ஏழு பயன்மிகு படைப்புகளைப் பாரெங்கும் கொண்டு சென்று அறிவுப்பசிதீர் உலகத்தமிழ் மின்னிதழ் இருநூற்(று) இருபத்(து) ஏழு

POST: 2024-04-09T09:25:06+05:30

இதுவரை நானே பார்க்காத படம்... சென்னை கிருத்துவக்கல்லூரியின் தமிழ்ப்பேரவை நூற்றாண்டு விழாவின் ஒளிப்படம் மாநிலக்கல்லூரியில் இளங்கலை தமிழிலக்கியம் இரண்டாமியாண்டு பயின்ற காலத்தில் (1986-1987)

POST: 2024-04-08T10:09:42+05:30

மெல்லத்தமிழினி வாழும் தமிழ்நாடு அரசு 38 மாவட்டங்களிலும் கல்லூரி மாணவர்களுக்காக ' இளையோர் இலக்கியப் பாசறையை' தமிழ் வளர்ச்சித்துறை மூலம் நடத்தி வருகிறது. கவிஞர்.நெல்லை ஜெயந்தா அவர்கள் தமிழக அரசால் இந்நிகழ்வின் மாநில ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்டிருக்கிறார். ஒரு மாவட்டத்தின் பல்வேறு கல்லூரிகளில் இருந்து வருகிற 100 மாணவர்களுக்கு சான்றிதழ், தேநீர் & மதிய உணவு , குறிப்பேடு, பேனா ஆகியவற்றை வழங்குகின்றனர். தகுதி கொண்ட ஆறு கருத்தாளர்களை அழைத்து தரமான இலக்கிய உரைகளை ஆற்ற வைத்து கௌரவமான தொ ...

POST: 2024-04-08T10:09:42+05:30

மெல்லத்தமிழினி வாழும் தமிழ்நாடு அரசு 38 மாவட்டங்களிலும் கல்லூரி மாணவர்களுக்காக ' இளையோர் இலக்கியப் பாசறையை' தமிழ் வளர்ச்சித்துறை மூலம் நடத்தி வருகிறது. கவிஞர்.நெல்லை ஜெயந்தா அவர்கள் தமிழக அரசால் இந்நிகழ்வின் மாநில ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்டிருக்கிறார். ஒரு மாவட்டத்தின் பல்வேறு கல்லூரிகளில் இருந்து வருகிற 100 மாணவர்களுக்கு சான்றிதழ், தேநீர் & மதிய உணவு , குறிப்பேடு, பேனா ஆகியவற்றை வழங்குகின்றனர். தகுதி கொண்ட ஆறு கருத்தாளர்களை அழைத்து தரமான இலக்கிய உரைகளை ஆற்ற வைத்து கௌரவமான தொ ...

POST: 2024-04-07T11:26:44+05:30

சொல்லாண்டு வாழ்க நினைவில் வாழும் என் மாமா,பேராசிரியர் குமரவேலனின் இனிய மாணவர் தமிழ் நாடு பொதுநிலைப் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறையின் தலைவர்,எழுத்தாளர், பேச்சாளர், செயல் மறவர் பேராசிரியர் பாரதி பாலன் அவர்களின் பிறந்த நாள் விருந்து 3.4.24 புதன்கிழமை சட்டக்கதிர் ஆசிரியர் டாக்டர் வி ஆர் எசு சம்பத் ஒருங்கிணைப்பில் தஞ்சை சங்கம் விருந்தகத்தில் நடைபெற்ற இனிய அல்லுணா நிகழ்வின் பொழுது