தினமணி - 23 4 2023 பக்கம் எண் : 8 கலைமிளிர் காப்பியம் தந்த அடிகள் ! ஒளவை அருள் கடுகளவு குறளில் கடலளவு கருத்துகள் மிளிர்கின்றனவோ, அவ்வாறே சித்திரச் சிலப்பதிகாரமும் சொல்லழகும், பொருளழகும், கற்பனைத் திறனும், காதல் உணர்ச்சியும், கற்பின் வீறும் ஒருங்கே அமைந்து இரத்தினங்களாலிழைத்த விலையுயர்ந்த ஆபரணம் போல மிளிர்கின்றது. எவ்வாறு ஷேக்ஸ்பியர் நாடகங்களில் பலப்பல நுணுக்கங்களை ஆய்ந்து மனக்கிளர்ச்சி அடைகிறேமோ, அவ்வாறே ஆய்ந்து மகிழும்படி இளங்கோவடிகள் சிலப்பதிகாரத்தைப் படைத்துள்ளார். சிலப்பதிகாரம் இயல ...
அள்ள அள்ளக் குறையா அமிழ்தம் தந்த கவி !
தினமணி - 24 3 2023 நடுப்பக்கக் கட்டுரை பக்கம் எண் : 6 அள்ள அள்ளக் குறையா அமிழ்தம் தந்த கவி ! ஒளவை அருள் ஒரு மொழிக்குச் சிறப்புத் தருவன அதன் கண் உள்ள நூல்களே. நம் தமிழ் மொழி நூல்வளம் சிறந்தது. அஃது உலகம் போற்றும் உயர்தனிச் செம்மொழிகளுள் ஒன்றாகக் கருதப்படுவதற்கு அதன் நூல் வளமே காரணமாகும். அங்ஙனம் நம் செந்தமிழ் மொழியின் சிறப்புக்குக் காரணமாதற்குரிய நூல்களுள் ' கம்பராமாயணம் ' சிறப்பிடம் பெறுவதாகும். கம்பன் கவி அள்ள அள்ளக் குறையாத தமிழ் அமிழ்தம். காலத்தால் அழியாத கற்பகப்பெட்டகம். ...
தமிழ்மொழி போல் இனிதாவதெங்கும் காணோம் !
தினமணி - 21 2 2023 பக்கம் எண் : 7 தமிழ்மொழி போல் இனிதாவதெங்கும் காணோம் ! ஒளவை அருள் மனிதன் தன் சிந்தனைத் திறத்தால் புதியன கண்டு, கேட்டு, அமைத்துப் போற்றிடும் சிறந்த நாகரிகக் கூறாக தாய்மொழி உருவெடுக்கின்றது. எத்தனையோ தடைகளையும், சில காலங்களில் நேரும் காலத்தாழ்வு, பிற்போக்கு ஆகியவற்றையும் கடந்து தாய்மொழியை மாந்தன் தன் சிந்தனையால், உறவுத் தொடர்பால் எப்படியோ வளர்த்துக் காத்து வந்திருக்கிறான் என்பது வியப்பைத் தருவதாகும். எத்தனையோ தடைகளையும், சில காலங்களில் நேரும் காலத்தாழ்வு, பிற்போக்கு ஆக ...
நிலைத்த புகழ் கொண்ட வள்ளுவர் !
தினமணி - 14 1 2023 பக்கம் எண் : 8 நிலைத்த புகழ் கொண்ட வள்ளுவர் ! தமிழகத்தில் திருவள்ளுவர் சிலை இல்லாத இடமில்லை . ' வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு ' என்ற வகையில் இன்று தமிழ்நாடு மதிக்கப்பெறுவதற்கு திருக்குறளே மையப் புள்ளியாகும். திருவள்ளுவரை 'உலகப் பாவலர்' என டாக்டர் ஜி.யூ. போப் போற்றியிருக்கிறார். திருக்குறள் பன்னாட்டு மாநாட்டில் பொதுமறை என்பதை பொதுமுறை என்று கூடச் சொல்லி, எல்லோருக்கும் ஏற்ற முறையில் திருக்குறள் அமைந்தது என்ற கருத்தில் ஒடிஸாவைச் சார்ந்த ஓய்வு ...
