தினமணி - 19 2 2024 பக்கம் எண் : 6 உ.வே.சா.வையும் தமிழையும் பிரிக்க இயலாது! தமிழுக்கு இன்று உலகளாவிய போற்றுதலைப் பெற்றுத்தருவது சங்க இலக்கியமாகும். காலப்பழைமையும் கருத்துச்செழுமையும் சங்க இலக்கியத்தில் காணலாகும். சங்கம் தழைக்கும் மதுரை என்றும் தமிழையே சங்கத்தமிழ் என்றும் புலவர்கள் மொழிந்துள்ளனர். அத்தகைய சங்க இலக்கியங்கள் காலங்காலமாக, குறிப்பாக ஐரோப்பியர் வருகைக்கு முன்பு வரை பளை ஓலைகளால் செய்யப்பட்ட சுவடிகளில் எழுதப்பட்டுத் தேய்ந்தும், சிதைந்தும், ஒருபுறம் ஒடிந்தும் கட்டுக்கட்டாகக் கிட ...
தேமதுரத் தமிழோசைத் திருவிழா!
தினமணி _ 5 .1. 2024 பக்கம் எண் : 8 தேமதுரத் தமிழோசைத் திருவிழா! - ஔவை அருள் மகாகவி பாரதியார் பாடிய, ' பெற்ற தாயும் பிறந்த பொன்னாடும் நற்றவ வானினும் நனி சிறந்தனவே' என்ற நெறிக்கிணங்க பிறந்த நாள் முதல் தாயின் வழியாக சொல்லப்பட்ட கதைகளும்,கருத்துகளும், அறநெறிப் பாடல்களும் தான் என்றென்றும் பல இளந்தமிழர்களின் நெஞ்சில் ஆழமாகப் பசுமரத்தாணி போல் பதிந்துள்ளன. பள்ளிப்பருவம் முடித்து வருங்காலச் சிந்தனையாளர்களாக, செயல்வீரர்களாக இளைஞர்கள் கல்லூரியில் கால் பதிக்கத் தொடங்குகிறார்கள். இளமைக்காலத்தில் த ...
கலைச்சொல் கோயில் கட்டுவோம்!
தினமணி நாள்: 07.12.2023 பக்கம்: 8 கலைச்சொல் கோயில் கட்டுவோம்! தமிழ் சொல்வளம் மிக்க மொழி. வழக்கில் உள்ள சொற்கள் சில ஆயிரமே என்றாலும், அகராதியில் உள்ள சொற்கள் இலட்சத்தைக் கடந்தவை. அகராதியில் இல்லாத பலநூறு சொற்கள் மக்கள் வழக்கில் உள்ளன. புதிய சொற்களைப் படைக்க முயலும் போது முதலில் பழைய சொற்களைத் தேடிப் பார்க்க வேண்டும். ஒரே சொல்லாகக் கிடைக்காவிட்டால், இணைப்புச் சொற்களை வைத்துக் கொள்ளலாம். அப்படியும் முடியாவிட்டால்தான், புதிய சொல்லைப் படைக்க வேண்டும். எந்த முயற்சியுமே செய்யாமல் இதற்கு என ...
குன்றென நிமிர்ந்து நின்றவர்
தினமணி 31.10.23 பக்கம் 8 குன்றென நிமிர்ந்து நின்றவர் இந்திய விடுதலைப்போரின் முப்பெருந்தலைவர்கள் என்று போற்றப் பட்டவர்கள் மகாத்மா காந்தி, ஜவாஹர்லால் நேரு, சர்தார் வல்லபபாய் படேல் ஆகியோர். இவர்களில் காந்தியடிகளும் படேலும் குஜராத் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். அப்போது குஜராத் தனி மாநிலமாகாமல், அன்றைய பம்பாய் மாநிலத்தின் ஒரு பகுதியாக இருந்து வந்தது. 1875 அக்டோபர் 31 அன்று ஜாவேரிபாய் - லதுபாய் இணையருக்கு நான்காவது பிள்ளையாக வல்லபபாய் படேல் பிறந்தார். அகமதாபாதில் வழக்குரைஞர் தொழில் மூலம் பெரும் ...
தமிழுக்குத் தொண்டாற்றித் தம் புகழ் நிறுவியவர்!
இன்று உரைவேந்தர் சித்தாந்த கலாநிதி ஔவை துரைசாமியின் 121ஆம் பிறந்த நாளாகும்.. (5.9.2023) என்பதை நினைவு கூர்ந்து நெகிழலாம் . தினமணி – 3.9.2023 பக்கம் எண்.8 தமிழுக்குத் தொண்டாற்றித் தம் புகழ் நிறுவியவர்! அன்றைய தென்னாற்காடு மாவட்டம், திண்டிவனம் அருகேயுள்ள ஒளவையார் குப்பம் என்னும் கிராமத்தில், சுந்தரம் பிள்ளை - சந்திரமதி அம்மையார் இணையருக்கு ஐந்தாவது குழந்தையாக 1902 செப்டம்பர் 5-ஆம் நாள் பிறந்தார் ஒளவை துரைசாமிப்பிள்ளை. கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் தலைவராக இருந்தவர் 'தமிழவேள்' உமா மகேஸ்வரனார் ...
சங்கம் அமைத்து தமிழ் வளர்ப்பதில் தமிழர்கள் கை தேர்ந்தவர்கள்
தினமணி - 2 9 2023 பக்கம் எண் : 4 சங்கம் அமைத்து தமிழ் வளர்ப்பதில் தமிழர்கள் கை தேர்ந்தவர்கள் ஒளவை ந அருள் சென்னை எழும்பூரில் உலகத் தமிழர் பேரவை சார்பில் பிரான்சு தமிழ்ச் சங்கத் தலைவர் பி.தசரதனுக்கு 'தமிழ்ப் பண்பாட்டுச் செம்மல் ' விருதை வெள்ளிக்கிழமை வழங்கிய தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் ஒளவை ந.அருள். உடன் ( இடமிருந்து ) உலகத் தமிழர் பேரவை நிர்வாகிகள் குணசேகரன், ப.சந்தர், மெய்ஞானி பிரபாகரபாபு, பொன்னேரி பிரதாப் உள்ளிட்டோர். சென்னை, செட்1: உலகத்தில் எங்கு போனாலும் சங்கம் அமைத்து தமிழை ...
திருக்குறள் முற்றோதலுக்கு மாணவர்களை தயார் செய்வது நமது கடமை
தினமணி - 13 8 2023 பக்கம் எண் : 4 திருக்குறள் முற்றோதலுக்கு மாணவர்களை தயார் செய்வது நமது கடமை ஒளவை ந அருள் சென்னை, ஆக. 12: திருக்குறள் முற்றோதலுக்கு மாணவர்களை தயார் செய்வது நமது கடமை என தமிழ் வளர்ச்சி துறை இயக்குநர் ஒளவை ந.அருள் தெரிவித்தார். நுங்கம்பாக்கம், வள்ளுவர் கோட்டத்தில் உலகத் திருக்குறன் மையம் சார்பில் பேராசிரியர் கு.மோகனராசுவின் 76 - ஆவது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, சாதனையாளர்களுக்கு விருது வழங்கும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது : பேர ...
அடியாரைப் பாடிய கடவுள் மாக்கவிஞர்
தினமணி - 6 8 2023 பக்கம் எண் : 8 அடியாரைப் பாடிய கடவுள் மாக்கவிஞர் ஒளவை அருள் சென்னை மாநகரத்திற்கு எத்தனையோ சிறப்புகள் உண்டு. அந்த வகையில் சேக்கிழார் பிறந்த குன்றத்தூர் சென்னையை அடுத்து இருப்பதும் ஓர் சிறப்பு. சேக்கிழாரைப் போற்றுவது, செந்தமிழைப் போற்றுவதாகும்; செந்தமிழைப் போற்றுவது நம் தமிழகத்தைப் போற்றுவதாகும்; தமிழகத்தைப் போற்றுவது தொண்டர்களைப் போற்றுவதாகும்; தொண்டர்களைப் போற்றுவது தன்னலமில்லாத அறப்பணிக்குத் தம்மை அர்ப்பணித்துக் கொள்கிற உயர்ந்த மனத்தைப் போற்றுவதாகும். ஆயிரம் ...
விளம்பரம் என்பதொரு கூட்டுக்கலை !
தினமணி - 16.6.2023 வெள்ளிக்கிழமை பக்கம் எண் : 8 விளம்பரம் என்பதொரு கூட்டுக்கலை ! புதிய புதிய கண்டுபிடிப்புகளுக்கு அமெரிக்காவே தாயகம் என்று சொல்லப்படுவது போல, விளம்பரங்களுக்குக்கூட அமெரிக்கா தான் தாயகம் என்று சொல்லலாம். அமெரிக்காவில் விளம்பர நிறுவனங்கள் நிறைந்த ஒரு பகுதிக்கு ' மாடிஸன் அவென்யு ' எனும் பிரபல விளம்பர நிறுவனத்தின் பெயரைச் சூட்டியிருக்கிறார்கள். ' ஒரு பொருளின் விளம்பரத்திற்காக ஒரு டாலர் செலவு செய்யப்படுகிறது என்று சொன்னால் அப்பொருளின் விற்பனை எழுபது டாலரை எட்டினால் தான் அந்த வ ...
கற்பித்தலும் ஆய்வியலும்
தினமணி - 20 5 2023 பக்கம் எண் : 6 நடுப்பக்கக் கட்டுரை கற்பித்தலும் ஆய்வியலும் தகவல் தொழில்நுட்பமும், தகவல் தொடர்பு தொழில்நுட்பமும் ஒருங்கிணைக்கப்பட்டு தகவல் மற்றும் தகவல் தொடர்பு தொழில்நுட்பமாக அண்மையில் மாறியுள்ளது. தகவல் தொழில்நுட்பமானது, உயரிய தொழில்நுட்பத்துடன் இணைந்து உயர் தகவலியலுக்கு வழி வகுத்துள்ளது. நுகர்வோர் உற்பத்தி பொருட்களில் புதிய அதிவேக வகைகளை கொண்டு வருவதற்கு மின்னணுவியலும் நுண்மின்னணுவியலும் இணைந்து ஆய்வகங்களிலிருந்து ஒளி அணுவியலாக உருவெடுத்து உள்ளதை யாவரும் அறிவர். மெ ...
