POST: 2024-03-08T08:23:25+05:30

செய்தி வெளியீடு எண்: 478 நாள்: 07.03.2024 தமிழ் மூதாட்டி ஔவையார் திருவுருவச் சிலைக்கு மலர் வணக்கம் நிகழ்ச்சி ஈராயிரம் ஆண்டுகளாகத் தமிழ் மக்கள் நன்கு அறிந்திருக்கும் புலவர் பெருமாட்டியருள் ஔவையாரின் அருமைத் திருப்பெயர் என்றும் அழியாமல் நிலைத்திருக்கும் திருப்பெயரும் தவப்பெயருமாகும். 'அகர முதல எழுத்தெல்லாம்' என்பது போல ஒளவை முதல அறிவெல்லாம் என்று அறிவுக்கே பரியாய நாமமாக ஒளவையார் ஆண், பெண், இளைஞர், முதியர் என எல்லோராலும் வழிபாட்டுணர்ச்சியோடு வணங்கப்படுகிறார். அதியமானுக்காகக் காஞ்சியிலிருந்து ...

POST: 2024-03-07T07:05:38+05:30

எங்கும் தமிழ்! எதிலும் தமிழ்! தமிழ் வளர்ச்சித் துறை ஐம்பெரும் விழா அழைப்பிதழ் நாள் : 07.03.2024 வியாழக்கிழமை, நேரம் : முற்பகல் 10 மணி நிகழிடம் :பேரறிஞர் அண்ணா கருத்தரங்குக் கூடம் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் மையத் தொழில்நுட்பப் பயிலக வளாகம் தரமணி, சென்னை 600 113 தமிழ் வளர்ச்சித் துறை ஐம்பெரும் விழா நிகழ்ச்சி நிரல் தமிழ்த்தாய் வாழ்த்து வரவேற்புரை : முனைவர் ஒளவை ந. அருள் இயக்குநர், தமிழ் வளர்ச்சித் துறை வாழ்த்துரை : முனைவர் இல. சுப்பிரமணியன், இ.ஆ.ப., அரசு செயலாளர், தமிழ் வளர்ச்சி மற ...

POST: 2024-03-07T06:57:02+05:30

இல்லெனினும் ஈதலே நன்று என்று அறிவுறுத்தும் அருங்குறள் எண் இரு நூற்(று) இருபத்(து)இரண்டு; சொல்லெனில் சுவைபடச் சொல்லுதலே எனும் நெறியில் தொடர்ந்து தமிழ்ப்பணியாற்றும் உலகத்தமிழிதழ் இருநூற்(று) இருபத்(து) இரண்டு!

POST: 2024-03-05T07:30:33+05:30

தினமணி திருக்கோவிலூர் கபிலர் நினைவுத் தூணை பார்வையிட்ட தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலுாரில் கபிலர் நினைவுத் தூணை தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் அவ்வை அருள் (04-02-2024) அன்று நேரில் ஆய்வு செய்தார். திருக்கோவிலுார் கபிலர் குன்று அருகே கபிலர் கோட்டம் அமைக்க வேண்டும் என பல ஆண்டுகளாக தமிழறிஞர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்நிலையில், கடந்த ஆட்சியின் போது கபிலர் நினைவுத்தூண் சிறிய அளவில் கட்டப்பட்டது. அருங்காட்சியகத்துடன் கூடிய கோட்டம் அமைக்க வேண்டு ...

POST: 2024-03-04T10:06:39+05:30

தமிழ்க்கூடல் கருத்தரங்கம் மதுரை, மார்ச் 1: மதுரை உலகத் தமிழ்ச்சங்கத்தின் பெருந்திட்ட வளாகக் கூட்டரங்கத்தில் தமிழ்க்கூடல் கருத்தரங்கம் வியாழக்கிழமை நடைபெற்றது. உலகத் தமிழ்ச் சங்கம், கருமாத்தூர் அருள் ஆனந்தர் கல்லூரி சார்பில் நடை பெற்ற இந்தக் கருத்தரங்கத்துக்கு சங்க இயக்குநர் (பொறுப்பு) ஔவை ந.அருள் தலைமை வகித்தார். மதுரை இலக்கியப்பேரவைத்தலைவர் சண்முக திருக்குமரன் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று, 'நானாற்பது காட்டும் வாழ்வியல் விழுமியங்கள்' என்ற தலைப்பில் பேசினார். அப்போது, பதினெண் கீழ்க்கணக்க ...

POST: 2024-03-03T05:36:54+05:30

செய்திக்குறிப்பு அண்ணல் அம்பேத்கர் அவர்களின் ஆக்கங்களைத் தமிழில் செம்பதிப்புக்களாக வெளியிடுதல் இந்தியாவில் மக்கள் களத்திலும், அறிவு சார் துறைகளிலும் அரசு சார்ந்த அமைப்புக்களின் மூலமாகவும், சனநாயகத்தைக் காக்க 20ஆம் நூற்றாண்டில் இடையறாத போராட்டம் நிகழ்த்திய அறிவாளுமை அண்ணல் அம்பேத்கர். பாவேந்தர் பாரதிதாசனால் சமூகத்தைப் பீடித்துள்ள முடைநாற்றம் என அறியப்பட்ட சாதீயக் கட்டமைப்புக்கும், தீண்டாமை என்னும் பஞ்ச மாபாதகச் செயலுக்கும் எதிராகச் சமரசமற்ற தாக்குதல் தொடுத்த அண்ணல் அம்பேத்கர், அவை பற்றிய தம ...

POST: 2024-03-02T08:45:43+05:30

முத்தமிழால் இணைவோம்! செம்மொழியாய் செழிப்போம்!! வாணியம்பாடி முத்தமிழ் மன்றம் பாலாற்றங் கரைதனில் தமிழ்வெள்ளப் பெருவிழா வாணிமா நகரினில் வண்ணமிகுத் திருவிழா முத்தமிழ் மன்றத்தின் இலக்கியக் கூடல் விழா தமிழகமே வியந்து நோக்கும் தீந்தமிழ்ச் சுடர்விழா! நுண்மாண் நுழைபுலம்மிக்க நூலறிஞர் கவிவாணர் பொழிவுகளில் நனைய வருக! முத்தமிழைப் பந்தியிடும் பந்தலுக்கு முந்திவந்து தமிழ் அமுதம் பருக வருக! வாணியம்பாடி முத்தமிழ் மன்ற அறக்களைச் செயலமைப்பு 31 ஆம் ஆண்டு முத்தமிழ் இலக்கியக் கூடல் விழா அமரர் ம.கண ...

POST: 2024-03-01T07:20:55+05:30

மார்ச் 1 மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு தமிழ்நாடு அரசு தமிழ் வளர்ச்சித் துறையுடன் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மத்திய சென்னை மாவட்டம் மயிலாப்பூர் - மந்தைவெளி அனைத்து வியாபாரிகள் சங்கம் இணைத்து நடத்தும் வணிக நிறுவனங்களில் தமிழில் பெயர் பலகை மாற்றம் குறித்து விழிப்புணர்வு பேரணி நாள்: 01.03.2024 காலை 11.30 மணி இடம் : எண் : 151, இராயப்பேட்டை நெடுஞ்சாலை, லஸ் கார்ணர், மயிலாப்பூர். தலைமை S.சாமுவேல் மத்திய சென்னை மாவட்டத் தலைவர் முன்னிலை V.P.மணி மாநி ...

POST: 2024-02-29T06:02:01+05:30

தினசெய்தி - 25 2 2024 பக்கம் எண் : 4 அருந்தமிழும் அன்றாட வழக்கும் – 202 விளம்பர வீதி -7 இணைய விளம்பரங்கள் ! முனைவர் ஔவை அருள் இன்று கணினிப் பயன்பாட்டுடன் இணையப் பயன்பாடும் சேர்ந்து, உலகம் உள்ளங்கைக்குள் சுருங்கி விட்டது என்று சொல்கின்றனர். உலகில் இணையம் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. உலகில் புவியியல் அடிப்படையில் இணையம் பயன்படுத்துபவர்களில் ஆசிய பெருநிலப்பகுதி முதலிடத்தில் உள்ளது. ஆசிய பெருநிலப்பகுதியில் 1076.7 மி ...

POST: 2024-02-28T08:31:30+05:30

பாடுநருக்(கு) ஈத்த பல்புகழன்னே .... என்று தொடங்கும் பொத்தியாரின் புறப்பாடல் எண் இருநூற்(று) இருபத்(து)ஒன்று; தேடுநருக்கு ஏற்ற தீந்தமிழ்ப் பெட்டகமாக வலம் வரும் உலகத் தமிழிதழ் இருநூற்(று) இருபத்(து) ஒன்று!