எங்கும் தமிழ்! எதிலும் தமிழ்! தமிழ் வளர்ச்சித் துறை திருப்பூர் மாவட்டம் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு ஏழு மாவட்டங்களைச் சேர்ந்த 116 தமிழறிஞர் உதவித் தொகை பெற்று வரும் ஒவ்வொருவருக்கும் சிறப்பு நேர்வாக ரூ 10,000-க்கான காசோலை வழங்கும் விழா நாள்: 01.02.2024 வியாழக்கிழமை நேரம்: மாலை 04.00 மணி இடம்: ஸ்ரீ அழகு நாட்சியம்மன் அறக்கட்டளை கலையரங்கம் செங்கப்பள்ளி, திருப்பூர் நிகழ்ச்சி நிரல் தமிழ்த்தாய் வாழ்த்து வரவேற்புரை: ஔவை அருள் அவர்கள் இயக்குநர், தமிழ் வள ...
POST: 2024-01-31T07:27:14+05:30
இசைபட வாழ்பவர் செல்வம் போல எனத் தொடங்கும் கபிலரின் நற்றிணைப் பாடல் எண் இருநூற்றுப் பதினேழு. திசையெங்கும் இசை பரவ நூலறிவுச் செல்வம் பொழியும் உலகத்தமிழ் இதழின் அணி வரிசை இருநூற்றுப் பதினேழு.
POST: 2024-01-30T06:50:47+05:30
எங்கும் தமிழ்! எதிலும் தமிழ்!! தமிழ் வளர்ச்சித் துறை இளையோர் இலக்கியப் பயிற்சிப் பாசறை திண்டுக்கல் மாவட்டம் 2023 – 2024 திருவள்ளுவராண்டு 2055 / சோபகிருது / தை-16 30.01.2024 செவ்வாய்க் கிழமை இடம்: ஆர்.வி.எஸ். குமரன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி திண்டுக்கல் மாணவர்களுக்கும் இலக்கியத்திற்கும் நடக்கும் மகரந்தச் சேர்க்கை! செம்மொழித் தமிழ் செதுக்கி வைத்திருக்கும் சிற்பங்களோடு காற்றில் மிதந்து வரும் கருத்து மேகம்! பூவில் விளையாடும் பொதிகைத் தென்றலாய் நாவில் தமிழாடும் நாவலர் பெருமக்கள் இதழ் வழ ...
POST: 2024-01-29T09:34:30+05:30
தினசெய்தி - 28 1 2024 அருந்தமிழும் அன்றாட வழக்கும் – 198 விளம்பர வீதி -3 விளம்பர உத்திகள்! முனைவர் ஔவை அருள் முன்னிரவு நேரம், குழந்தைகள் ஓடியாடி விளையாடிக் களைத்து வீட்டிற்குள் சென்று அடங்கியிருப்பார்கள். அந்நேரம் தெருமுனையில் பேண்டு வாத்திய முழக்கம் கேட்கும். பிள்ளைகள் ஆர்வமுடன் வெளியே ஓடுவார்கள், பெரிய பெட்ரோமாக்ஸ் விளக்குகளைத் தலையில் ஏந்தி இருபுறமும் ஆட்கள் நடந்து வர, நடுவில் இரண்டு பக்கமும் பேனர் கட்டிய மாட்டு வண்டி மெல்லக் குலுங்கி நடை பயின்று வரும். ...
POST: 2024-01-28T10:52:46+05:30
தினசெய்தி - 21 1 2024 பக்கம் எண் : 4 அருந்தமிழும் அன்றாட வழக்கும் – 197 புதிய கலை! முனைவர் ஔவை அருள் ஷேக்ஸ்பியர் குறித்த ஆய்வினை தில்லிப் பல்கலைக்கழகத்தில் வழங்குவதற்கு வாய்ப்பு கிடைக்கப்பெற்றது. சென்னையிலிருந்து பம்பாய்க்கும், தில்லிக்கும் பல்வேறு மாநிலங்களில் உள்ள சிறந்த நூலகங்களைச் சென்று பார்த்து தகவல்களைத் திரட்டுவதற்கும் வாராது வந்த மாமணி போல கிளியா விளம்பர நிறுவனத்தின் தலைவர்கள் வாய்ப்பு நல்கியதை எண்ணி நெகிழ்கிறேன். எத்துறையில் பணியாற்றினாலும் அத்துறையின் நெளிவு சுளிவுகளை ...
POST: 2024-01-27T18:25:15+05:30
விழிகள் விழிப்போடு விரியட்டும் ! முகநூலில் பதினந்து ஆண்டுகளாக ஒரே தடத்தில் பயணித்துக் கொண்டிருக்கும் என்னை, யான் அறியாத ஒருவர் நகலெடுத்து நகர்வதாக தகவல் வரப்பெற்றுள்ளது.. எவ்வித நிதிக் கேட்புகளுக்கும், நட்புப் பாராட்டுதலுக்கும் ஆளாகாதீர் என்று பணிவோடு வேண்டுகிறேன்
POST: 2024-01-27T11:20:33+05:30
செய்தி வெளியீடு எண்: 163 தமிழ் வளர்ச்சித் துறை இலக்கியமாமணி விருது நாள் : 25.01.2024 பன்னூறு ஆண்டுகளாக வற்றாத படைப்புகளைக் கொண்டு, சீரிளமையோடு இலங்கி வரும் தமிழுக்கும், தமிழ்மொழி வளர்ச்சிக்குத் தொண்டாற்றிடும் தமிழ்த்தாயின் அறிஞர் பெருமக்களுக்குத் தமிழ்நாடு அரசு தமிழ் வளர்ச்சித் துறையின் வாயிலாக பல்வேறு விருதுகளையும் சிறப்புகளையும் வழங்கி, அவர் தம் புலமைக்கும் தொண்டுக்கும் பெருமை சேர்த்து வருகின்றது. அவ்வகையில் மரபுத்தமிழ், ஆய்வுத்தமிழ், படைப்புத் தமிழ் ஆகிய வகைப்பாட்டில் மூன்று அறிஞர் ...
POST: 2024-01-27T11:20:33+05:30
செய்தி வெளியீடு எண்: 163 தமிழ் வளர்ச்சித் துறை இலக்கியமாமணி விருது நாள் : 25.01.2024 பன்னூறு ஆண்டுகளாக வற்றாத படைப்புகளைக் கொண்டு, சீரிளமையோடு இலங்கி வரும் தமிழுக்கும், தமிழ்மொழி வளர்ச்சிக்குத் தொண்டாற்றிடும் தமிழ்த்தாயின் அறிஞர் பெருமக்களுக்குத் தமிழ்நாடு அரசு தமிழ் வளர்ச்சித் துறையின் வாயிலாக பல்வேறு விருதுகளையும் சிறப்புகளையும் வழங்கி, அவர் தம் புலமைக்கும் தொண்டுக்கும் பெருமை சேர்த்து வருகின்றது. அவ்வகையில் மரபுத்தமிழ், ஆய்வுத்தமிழ், படைப்புத் தமிழ் ஆகிய வகைப்பாட்டில் மூன்று அறிஞர் ...
POST: 2024-01-26T12:31:15+05:30
தாயின் மணிக்கொடி பாரீர் சேர்ந்ததைக் காப்பது காணீர் -------------------------------------------------------------75 ஆம் ஆண்டு இனிய குடியரசு நாளை (26.1.24) முன்னிட்டு எழுமூரில் உள்ள தமிழ்ச்சாலையில் அமைந்துள்ள தமிழ் வளர்ச்சித் துறை அலுவலக வளாகத்தின் கம்பத்திலுள்ள தேசியக்கொடியினை மேலிருந்து அவிழ்த்து பூ மாரி பொழிந்து பாரதி பாடலினை அனைவரும் பாடி அருகிலுள்ள ஐயன் திருவள்ளுவர் திருவுருவச் சிலைக்கு மலர் வணக்கம் செய்து மகிழ்ந்து நின்றோம்
POST: 2024-01-26T09:54:59+05:30
முத்துநாடு பப்ளிகேசன்ஸ் - ன் நூல் வெளியீட்டு விழா ஐந்திணை ஐம்பது, ஐந்திணை எழுபது.. நூல்களின் வரிசையில் திணைகளைப் பின்னணிகளாகக் கொண்டு 250 பாவலர்கள் நூலாசிரியர்களாகிப் படைத்திட்ட ஐந்திணை இருநூற்றைம்பது நிகழிடம் : 47 ஆவது சென்னைப் புத்தகக் காட்சி, நந்தனம், ஒய்.எம்.சி.ஏ - மைதானம். சென்னை நிகழ் நாள் 20-01-2024, சனிக்கிழமை தலைமை & நூல் வெளியிடுபவர் : முனைவர் ஒளவை ந. அருள் அவர்கள் இயக்குநர், தமிழ் வளர்ச்சித்துறை, தமிழ்நாடு அரசு : முதல் நூல் பெறுபவர் : திரு. நக்கீரன் கோபால் அவர்கள் துணைத்தல ...
