POST: 2023-05-03T08:12:59+05:30

மணிவண்ண நம்பிக்கு ஒரு கோல் கொண்டு வா என வேண்டும் பெரியாழ்வார் திருமொழி பாடல் எண் நூற்று எழுபத்து எட்டு அணி வண்ணமாய் பொற்றிதழாய் மிளிரும் உலகத்தமிழிதழ் வரிசை எண் நூற்று எழுபத்து எட்டு

POST: 2023-05-02T11:03:17+05:30

சென்னை சமூகப்பணிக் கல்லூரி தேசியத்தர மதிப்பீட்டில் 'ஏ+' பெற்றது 32, காசா மேஜர் சாலை, எழும்பூர், சென்னை - 600 008 தமிழ்த்துறை முத்தமிழ்ப் பேரவையின் ' தகளி ' - இதழ் வெளியீட்டு விழா இலக்கியமும் சமூகமும் இதழ் வெளியிட்டுச் சிறப்புரை : ஒளவை அருள் இயக்குநர் தமிழ் வளர்ச்சித் துறை இதழ் பெறுபவர் : முனைவர் ஆர். சுபாஷினி புல முதன்மையர் முனைவர் பிரான்சிஸ் துறைத்தலைவர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் அதிகாரமளித்தல் துறை வாழ்த்துரை : முனைவர் எஸ். இராஜா சாமுவேல் கல்லூரி முதல்வர் இடம் : கர ...

POST: 2023-05-01T08:34:21+05:30

நானிலம் போற்றும் மாநிலக் கல்லூரி யான் படித்த மாநிலக்கல்லூரியின் தமிழ்த்துறை நடத்திய முத்தமிழ் விழாவில்,25.4.2023,செவ்வாய்க்கிழமை அன்று காலை 12.30 மணிக்கு வாழ்த்துரை வழங்கினேன். முத்தமிழ் விழாவில் பேராசிரியர் மோகனராசு, பேராசிரியர் மகாலிங்கம், பேராசிரியர் தங்கராசு, கல்லூரி முதல்வர் பேராசிரியர் இராமன் கலந்து கொண்டனர்.

POST: 2023-04-30T07:24:21+05:30

தினசெய்தி - 1 5 2023 பக்கம் எண் : 4 அருந்தமிழும் அன்றாட வழக்கும் – 159 தமிழ் நாடக உலகில் பொன்னாய் மிளிரும் சேக்ஸ்பியர் முனைவர் ஔவை அருள் தில்லிப் பல்கலைக்கழகத்தில் நான் 28 ஆண்டுகளுக்கு முன்பு வழங்கிய முனைவர் பட்ட ஆய்வின் ஒன்பதாம் பகுதி வருமாறு: Damodaram Pillai, a renowned Tamil scholar, on hearing that V.G. Suryanarayana Sastriyar stood first in Tamil in the B.A. Degree Examination, wanted to test his proficiency in Tamil. He called him and gave him a passage from Shakespeare’s “Th ...

POST: 2023-04-29T07:35:14+05:30

தமிழ் வளர்ச்சித் துறை தமிழ்க் கவிஞர் நாள்- 2023 பாவேந்தர் பாரதிதாசன் 132ஆவது பிறந்தநாள் பெருந்தகையீர், வணக்கம். கத்துகடல் பாடும் முத்து நகரத்தில் சித்தம் இனிக்கும் செந்தமிழ்த் திருவிழா! நாவலரும் பாவலரும் நயந்தேத்தும் நயனுடையார், பொன்னை விடப் பொலிவுடையார், பொதியம்போல் வலிவுடையார். புத்துலகச் சிற்பி புரட்சிக்கவிஞரின் புகழ்போற்றிப் பரவும் பூரிப்புப் பெருவிழா! பாவாண்ட பாவேந்தர் பன்முகமும் பளிச்சிடவே, நாவாண்ட நல்லறிஞர் நல்விருந்து படைக்கின்ற நற்றமிழ்க் கலைவிழா! பொங்குமலர்க் கமலத்தின் புத ...

POST: 2023-04-28T08:08:01+05:30

தினமணி - 23 4 2023 பக்கம் எண் : 8 கலைமிளிர் காப்பியம் தந்த அடிகள் ! ஒளவை அருள் கடுகளவு குறளில் கடலளவு கருத்துகள் மிளிர்கின்றனவோ, அவ்வாறே சித்திரச் சிலப்பதிகாரமும் சொல்லழகும், பொருளழகும், கற்பனைத் திறனும், காதல் உணர்ச்சியும், கற்பின் வீறும் ஒருங்கே அமைந்து இரத்தினங்களாலிழைத்த விலையுயர்ந்த ஆபரணம் போல மிளிர்கின்றது. எவ்வாறு ஷேக்ஸ்பியர் நாடகங்களில் பலப்பல நுணுக்கங்களை ஆய்ந்து மனக்கிளர்ச்சி அடைகிறேமோ, அவ்வாறே ஆய்ந்து மகிழும்படி இளங்கோவடிகள் சிலப்பதிகாரத்தைப் படைத்துள்ளார். சிலப்பதிகாரம் இயல ...

POST: 2023-04-27T11:12:24+05:30

தினசெய்தி - 23 4 2023 பக்கம் எண் : 4 அருந்தமிழும் அன்றாட வழக்கும் – 158 எண்ணற்ற சொற்களில் ஈடற்ற சிந்தனைகள் - முனைவர் ஔவை அருள் வில்லியம் சேக்சுபியரின் 460வது பிறந்த நாள் ( 23.04.2023 ) எண்ணிப்பார்க்க முடியாத எண்ண அலைகளையும் ஏறத்தாழ ஆயிரம் பேரை நம் எதிரே நிறுத்தி அவர்களின் உள்ள உணர்வுகளை ஓவியமாக்கிய ஒப்பற்ற நாடக கவி மன்னர் சேக்சுபியர் (23.04.1564) பிறந்த நன்னாளிது. இலண்டன் மாநகரத்தில் ஆவான் ஆற்றங்கரையில் அமைந்திருக்கும் அழகிய சிற்றூரில் ...

POST: 2023-04-26T08:11:14+05:30

பிரிந்த கணவன் தலைவியின் மார்பில் எழுதிய தொய்யிலை நினைந்தே திரும்பிடுவான் எனத் தேற்றும் அகநானூற்றுப் பாடல் எண் நூற்று எழுபத்து ஏழு விரிந்த உலகின் வியத்தகு திறனெலாம் சுமந்து தமிழ்த் தொண்டாற்றும் உலகத்தமிழிதழ் எண் நூற்று எழுபத்து ஏழு

POST: 2023-04-25T10:17:47+05:30

இளங்கோவடிகள் திருவுருவச் சிலைக்கு மலர் வணக்கம் 24.04.2023 செய்திக் குறிப்பு இளங்கோவடிகள் வேந்தர் குலத்திற் பிறந்தவர், உயர் கல்வி பெற்று வளர்ந்தவர். கணியன் கூறியபடி அரசாளும் திருப்பொறி வாய்ந்தவர், காதலை வெறுத்தோ - கடமைக்கு அஞ்சியோ இவர் துறவு மேற்கொள்ளவில்லை. மூத்தவன் ஆளும் அரச மரபு பிறழக்கூடாது என்பதற்காகவே துறவு மேற்கொண்டார். அடிகளான பின்னுங் கூட "குடக்கோச்சேரல் இளங்கோ" என்றே குறிப்பிடுகிறார். செந்தமிழ்ச்செல்வியின் காற்சிலம்பு காரணமாக அருந்தமிழ் அன்னைக்கு நூற்சிலம்பு அணிவித்த பெருமை இள ...

POST: 2023-04-24T08:32:59+05:30

பிறந்த நாள் புகழ் வணக்கம் 24.04.1936 தில்லை நடவரசர் நட அசைவே நானிலத்தின் இயக்கமென்பார் ஔவை நடராசர் நாவசைத்தால் நற்றமிழும் நடனமிடும் முல்லை மலர்ச் சிரிப்பால் எமை ஆளும் முத்தமிழின் வேந்தே என்றும் நும் நினைவில் கண்ணன் அருள் பரதன். தினமலர் பக்கம் 24.4.2023 இதே நாளில் அன்று ஏப்ரல், 24, 1936 திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறில், அவ்வை துரைசாமி லோகம்மாள் தம்பதிக்கு மகனாக, 1936ல், இதே நாளில் பிறந்தவர் நடராசன். இவரின் தந்தை நற்றிணை, சிலப்பதி காரம், திருவருட்பா உள ...