பதிவுத்துறை ஆய்வு
POST: 2023-04-21T11:12:24+05:30
அண்ணலுக்கு நூறாண்டு ! அண்ணல் ஆர்க்காட்டார் பிறந்தநாள் நமக்குப் பெருமிதமூட்டுகிறது . ஓய்வில்லாத உழைப்பும் - தம்மை முழுவதுமாகக் கழகத்துக்கு ஆட்படுத்திய திறமும் என்றும் மறக்க முடியாதவை . முத்தமிழ் அறிஞர் கலைஞரையும் - பேராசிரியரையும் தம் இரண்டு தோள்களில் சுமந்த தொண்டர் திலகம் . நூறாண்டு வாழ்க !! அன்போடு ஒளவை குடும்பம் 21 4 2023
POST: 2023-04-20T12:10:11+05:30
தினமணி - 19 4 2023 பக்கம் எண் : 3 ஆலோசனை... சென்னை யுனெஸ்கோ திருக்குறள் மாநாடு தொடர்பாக, சென்னை தலைமைச் செயலகத்தில் 18.4.23 செவ்வாய்க்கிழமை தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக்கூட்டம். உடன் நிதித் துறைச் செயலர் நா.முருகானந்தம், தமிழ் வளர்ச்சித் துறைச் செயலர் இரா.செல்வராஜ், துறை இயக்குநர் ஒளவை ந.அருள், தமிழ்ப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் ம.ராசேந்திரன், சென்னை பல்கலைக்கழக திருக்குறள் ஆராய்ச்சி மைய முன்னாள் பேராசிரியர் கு.மோகனராசு, சென்னை பல்கலைக்கழக முன்னாள் பேர ...
POST: 2023-04-19T08:16:10+05:30
அருள்வெஃகி என தொடங்கும் அருங்குறள் எண் நூற்று எழுபத்து ஆறு. பொருள் பொதிந்த பெருங்கட்டுரைகளை ஏந்தி வரும் உலகத்தமிழிதழ் நூற்று எழுபத்து ஆறு
POST: 2023-04-18T11:42:56+05:30
முத்தமிழறிஞர் கலைஞர் நினைவு நூலகம் நான்மாடக்கூடலில் 20.03.2023 திங்கட்கிழமை அன்று 2,00,250 சதுர அடி பரப்பளவு கொண்ட தரைத்தளம் மற்றும் 6 தளங்களுடன் பிரம்மாண்டமான நூலகக் கட்டடக் கட்டுமானப் பணிகளைக் கண்டு மகிழ்ந்தேன்...
POST: 2023-04-17T18:08:15+05:30
உணவு மற்றும் மருத்துவ பாதுகாப்புத்துறை ஆய்வு
POST: 2023-04-17T10:09:54+05:30
தினசெய்தி - 17 4 2023 பக்கம் எண் : 4 செங்கோல் ஏந்திய செம்மொழிச் சிகரம் – 100 கலைஞர் குரல் முழங்கு கடல் ! - முனைவர் ஔவை நடராசன் மேனாள் துணைவேந்தர், தமிழ்ப் பல்கலைக்கழகம். பொது வாழ்வு மகிழ்ச்சித் ததும்பும் மலர்த் தோட்டம் அன்று. ” கொளுத்தும் வெயிலும் குமுறி வீசும் காற்றும் நிரம்பிய பாலைவனம்” என்று தெரிந்திருந்தும் தொல்லைகளைப் பெரிதெனக் கருதாது சமுதாய முன்னேற்றமே பெரிதென எண்ணி அல்லும் ப ...
POST: 2023-04-16T11:10:12+05:30
தினசெய்தி - 16 4 2023 பக்கம் எண் : 4 அருந்தமிழும் அன்றாட வழக்கும் – 157 ஷேக்ஸ்பியர் - நாடகங்களின் பொற்காலம் ! முனைவர் ஔவை அருள் தில்லிப் பல்கலைக்கழகத்தில் நான் வழங்கிய முனைவர் பட்ட ஆய்வின் எட்டாம் பகுதி வருமாறு: His bosom friend Rangavadivelu on coming to know about it suggested that Pammal Sambanda Mudaliar undertake the translation work of an easier play first and thus he began the translation of “As You Like It”. Even the translation of “As You Like It” could be completed only afte ...
POST: 2023-04-15T12:10:44+05:30
நீங்கா நூலக நினைவு ஒரு நாட்டின் நூலக வளர்ச்சி தான் அந்த நாட்டின் அறிவுச் செழுமையை சுட்டிக்காட்டும் .மாணவர்களுக்கு விருந்தகங்களாக நூலகங்கள் தான் வளர வேண்டும் எங்கள் குடும்பத்தின் இனிய நண்பராக அண்ணல் பழனி(11.7.1939-14.4.2023) 83 வயது நல்இளைஞராய்த் திகழ்ந்தார் என்பதைப் பெருமிதமாக சொல்ல விழைகிறேன் . இராயப்பேட்டையில் ஒளவை சண்முகம் சாலைக்கு அருகில் 10 பெசன்ட் சாலையில் எங்கள் பெற்றோர்களுடன் தங்கி இருந்த காலங்களில் ஈஸ்வரி வாடகை நூலகம் தான் எங்கள் குடும்பத்தின் பல்கலைக்கழகமா ...
