POST: 2023-05-19T09:39:01+05:30

அழியாத கோலம் அண்ணாநகர் தாரகை இல்லத்தின் வாயிற்படியில் நாள்தோறும் கோலம் வரைய வேண்டும் என்பதில் அதிக ஆர்வம் காட்டியவர்கள் என் அம்மா. பல நேரங்களில் அம்முயற்சி நடைபெறாமலேயே நின்றுவிடும். சில ஆண்டுகளுக்கு முன்பு என் நெருங்கிய நண்பர் வாயிலாக வண்ணக் கோலங்களை வரைவதில் வல்லுனரான திருமதி கோகிலா எங்கள் அண்ணாநகர் தாரகை இல்ல முகப்பில்,தெருவில் நடப்போர் அனைவரின் பார்வையையும் திரும்பும்படி மாபெரும் வண்ணக் கோலத்தினை வரைந்து காட்டி என் அம்மாவின் நீண்ட நாள் விழைவினை நிறைவேற்றினார். அம்மா மறைந்த பிறகு ஒர ...

POST: 2023-05-18T10:08:30+05:30

கவிதை உறவு அமைப்பின் 51 ஆம் ஆண்டு விழா தலைமை: கல்விக்கோ வேந்தர் முனைவர் கோ.விஸ்வநாதன் தலைவர் - தமிழியக்கம் விருதுகள் மற்றும் சிறந்த நூல்களுக்குப் பரிசளித்து வாழ்த்துரை: மாண்புமிகு நீதியரசர் திரு. இரா.சுரேஷ் ( சென்னை உயர்நீதிமன்றம் ) விழா மலர் வெளியிட்டு மகிழ்வுரை: பத்மஸ்ரீ டாக்டர் நல்லி குப்புசாமி செட்டியார் மலர்பெறும் மாண்பாளர்: செவாலியே டாக்டர் வி.ஜி.சந்தோஷம் ( தலைவர் வி.ஜி.பி. உலகத் தமிழ்ச்சங்கம் ) கலைமாமணி ஏர்வாடி எஸ்.இராதாகிருஷ்ணன் எழுதியுள்ள இரு நூல்கள் யாவரும் கேளிர் வள்ளல் நேசன ...

POST: 2023-05-17T09:10:40+05:30

ஒன்று முதல் ஒன்பது வரையுள்ள இயல் எண்களுள் ஏழும் எட்டும் மட்டுமே வகுபடாத எண் நூற்று எண்பது தொன்று தொட்டு நிலவி வரும் ஏழு துறைகளையும் அளாவி எட்டுத்திக்குகளிலும் புகழ் பரப்பும் உலகத்தமிழிதழ் நூற்று எண்பது

POST: 2023-05-16T11:31:31+05:30

இராஜகமலம் - பல்சுவை ( நலம் தொடர நல்வழி காட்டும் மாத இதழ் ) 15. 5 . 2023 வடமொழியில் திராவிடச் சொற்கள் முனைவர் ஒளவை அருள் இயக்குநர் தமிழ் வளர்ச்சித்துறை தமிழ்நாடு அரசு ஒரே நாட்டில் திராவிட இனமும், ஆரிய இனமும் பல நூற்றாண்டுகளாக, அடுத்தடுத்து வாழ்ந்திருந்தமையால், திராவிட மொழிகள் தமிழல்லாத பிற மொழிகள் ஆரியச் சொற்களைப் பேரளவு கடன் வாங்கியுள்ளன. அதே நிலையில் திராவிடத்திலிருந்து கடன் வாங்க ஆரியமும் தயங்கவில்லை என்பதும் உரத்து ஒலிக்கும் உண்மை. இந்தோ ஐரோப்பிய மொழி ஒலியனாக ஒப்புக் கொள்ளாத ...

POST: 2023-05-15T09:07:27+05:30

தினசெய்தி - 15 5 2023 பக்கம் எண் : 4 அருந்தமிழும் அன்றாட வழக்கும் – 161 தமிழ்க் கவிதை வானில் ஷேக்ஸ்பியரின் சிந்தனை மழை ! முனைவர் ஔவை அருள் தில்லிப் பல்கலைக்கழகத்தில் நான் 28 ஆண்டுகளுக்கு முன்பு வழங்கிய முனைவர் பட்ட ஆய்வின் பதினோராம் பகுதி வருமாறு: If one looks at AkalikaiVenba, yet another scholarly work by V.P.Subramania Mudaliar, the behavioral pattern of the characters, their thought processes and speech modes have all been modeled on a blend between the Dravidian and English traditio ...

POST: 2023-05-14T09:35:41+05:30

கதை சொல்லும் குறள் புத்தக வெளியீடு நாள் : 14.05.2023 ஞாயிறு மாலை 6.00 மணி இடம் : குமார ராஜா முத்தையா அரங்கம், செட்டிநாடு வித்யாச்ரம் இராஜா அண்ணாமலைபுரம், சென்னை - 600 028. தமிழ்த்தாய் வாழ்த்து இன்னிசையில் திருக்குறள் : இசைப் பேரொளி திரு. சாகேதராமன் நாட்டியத்தில் திருக்குறள் : கலைமாமணி பார்வதி கண்டசாலாவின் கலாபிரதர்சினி - மாணவிகள் வரவேற்புரை : மருத்துவர் சிவகடாட்சம் நூல் வெளியிடுபவர் : திருமதி. துர்கா ஸ்டாலின் அவர்கள் முதல் பிரத ...

POST: 2023-05-13T12:15:59+05:30

பேரறிவுப் பிழம்பு மறைந்ததே ! எந்தையாரின் இனிய நண்பரான மலேசியமணித் திருநாட்டில் மருத்துவ மாமணியாகத் திகழ்ந்து, தமிழ்நாட்டில் பெரும் புகழோடு வாழ்ந்த முப்பெரும் காப்பியச்சுடர் என்று அறிவுலகம் புகழும் டாக்டர் முருகு துரைசாமி இயற்கை எய்திய செய்தியினை பொன்னேரி பிரதாப் வாயிலாகக் கேட்டபொழுது திடுக்கிட்டேன். வேலூர் மாவட்டம் காவேரிப்பாக்கத்தில் பிறந்து,சென்னை இலயோலாக் கல்லூரியில் (1953 )இடைநிலைப் படிப்பை முடித்தபின் சென்னை ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியில் மருத்துவப் படிப்புப் பயிற்சி பெற்ற போதே (195 ...

POST: 2023-05-12T09:59:50+05:30

பசுமையான நினைவுகள் ! அறம் எனப்படுவது யாதெனக் கேட்ட பின் மறவாது இது கேள் ; உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே என்ற மணி வரிகளுக்கு ஏற்ப கல்லீரல் துறையின் மாபெரும் மருத்துவச் செம்மல் டாக்டர் முகமது ரெலா என்னை தொலைபேசியில் அழைத்து ஈத்து உவக்கும் இன்பமாக தன் வளமனையில் நடைபெறும் ( 16 .4 .2023 ) இப்தார் விருந்துக்கு அழைத்தபோது நெகிழ்ந்தேன் . என் பெற்றோர்கள் மீது அளப்பரிய அன்பும் - கனிவும் பொழிந்த மருத்துவச் சிகரம் தன் இல்லத்தில் சில ஆண்டுகளுக்கு முன் சைவ உணவு வழங்கிய பசுமையான நினைவுகள் நெஞ்சில் நிழல ...

POST: 2023-05-11T08:14:14+05:30

கலைமகள் மே மாத இதழ் ,2023- பக்கம் எண் : 28,29,30. ஆசிரியர் திரு கீழாம்பூர் எஸ் .சங்கரசுப்பிரமணியன் அவர்களுக்கு நனிநன்றி ! அள்ள அள்ளக் குறையா அமிழ்தம் தந்த கவி ! ஒளவை அருள் ஒருமொழிக்குச் சிறப்புத் தருவன அதன் கண் உள்ள நூல்களே. நம் தமிழ் மொழி நூல்வளம் சிறந்தது. அஃது உலகம் போற்றும் உயர்தனிச் செம்மொழிகளுள் ஒன்றாகக் கருதப்படுவதற்கு அதன் நூல்வளமே காரணமாகும். அங்ஙனம் நம் செந்தமிழ் மொழியின் சிறப்புக்குக் காரணமாதற்குரிய நூல்களுள் ' கம்பராமாயணம் ' சிறப்பிடம் பெறுவதாகும். கம்பன் கவி அள்ள ...