ஒன்றே உலகம் ! பிறப்பு ஒக்கும் எல்லா உயிர்க்கும் !! உலகத் திருக்குறள் மையம் ( தோற்றம்:1990 ) 1000 ஆவது வள்ளுவர் கோட்டத் திருக்குறள் ஆய்வரங்கம் நிறைவு விழா உலகத்திருக்குறள் மையம் 33 ஆவது ஆண்டு நிறைவு விழா மாநாடு காலம் : தி.ஆ.2054, பங்குனி 25, 08.04.2023 சனிக்கிழமை காலை 10 - 00 மணி இடம் : வள்ளுவர் கோட்டம், நுங்கம்பாக்கம், சென்னை தலைமையுரை : முனைவர் ஔவை அருள் இயக்குநர், தமிழ் வளர்ச்சித் துறை, தமிழ்நாடு அரசு
POST: 2023-04-07T10:52:25+05:30
தினமலர் - 5 4 2023 பெயர் பலகைகளில் 6 மாதங்களில் தமிழ் சென்னை, ஏப். 5 - தமிழகத்தில் உள்ள வணிக நிறுவனங்களில், ஆறு மாதங்களில் தமிழில் பெயர்ப்பலகைகள் வைக்க நடவடிக்கை எடுப்பதாக, தமிழக வணிகர் சங்க பேரமைப்பின் தலைவர் விக்கிரமராஜா உறுதி அளித்துள்ளார். சென்னையில், நேற்று முன்தினம், தமிழ் வளர்ச்சித் துறை செயலர் செல்வராஜ், தமிழக வணிகர் சங்க பேரமைப்பின் தலைவர் விக்கிரமராஜாவை அழைத்து, தமிழில் பெயர்ப் பலகை வைப்பது குறித்து விசாரித்தார். இதுகுறித்து, விக்கிரமராஜா கூறியதாவது : தமிழில் பெயர்ப்பலகை வைக்க ...
POST: 2023-04-06T08:33:54+05:30
தினசெய்தி - 3 4 2023 பக்கம் எண் : 4 செங்கோல் ஏந்திய செம்மொழிச் சிகரம் – 98 ஓர் உவமை-இருகாட்சி! - முனைவர் ஔவை நடராசன் மேனாள் துணைவேந்தர், தமிழ்ப் பல்கலைக்கழகம். முத்தமிழறிஞர் கலைஞரின் சங்கத்தமிழ் என்ற அருமையான பனுவலை ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்த தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் பெருமைமிகு பேராசிரியரும் தமிழ்நாடு அரசின் சிறந்த மொழிபெயர்ப்பாளர் விருது பெற்றவருமான முனைவர் பழனி அரங்கசாமி அவர்களின் மொழியாக்கத்தின் பீடுநடையைக் கண்டு நான் பலமுறை பாராட்டியு ...
POST: 2023-04-05T10:33:27+05:30
"பொய்யா நாவின் கபிலன்" புலவரைப் புலவர் புகழ்ந்து பாடிய புறப்பாடல் எண் நூற்று எழுபத்து நான்கு மெய்யாய் வாழ விண்வெளி தவழும் மின்னிதழ் வரிசை நூற்று எழுபத்து நான்கு
POST: 2023-04-04T07:09:27+05:30
தினசெய்தி - 2 4 2023 பக்கம் எண் : 4 அருந்தமிழும் அன்றாட வழக்கும் – 155 ஆங்கிலப் பெருங்கவிஞர் ஷேக்ஸ்பியரின் செம்மாந்த மொழிநடை! முனைவர் ஔவை அருள் தில்லிப் பல்கலைக்கழகத்தில் நான் வழங்கிய முனைவர் பட்ட ஆய்வின் ஆறாம் பகுதி வருமாறு: However, Shakesperean comedy seems to have been more acceptable to the Tamil audience. There are approximately twenty-five translations of his comedies. Plays like “As you like it” have been put on stage fairly regularly. Shakesperean comedy ...
POST: 2023-04-03T10:12:35+05:30
உரைவேந்தர் ஔவை துரைசாமிப்பிள்ளை 41வது நினைவு நாள் ============================================== இந்த நினைவு நாளை (3.4.2023). என் சித்தப்பா டாக்டர் ஒளவை மெய்கண்டார் மதுரை மாநகரில் 1000 பேருக்கு உணவளிக்கும் வகையில் அமைத்திருக்கிறார். கம்ப இராமாயணத்தில் குகனுக்கு இலக்குவனின் தாயை அறிமுகப்படுத்தும் “உளன் எனப் பிரியாதான் ஒரு தம்பி” என்ற தொடர் தான் என்னை உருக வைக்கிறது என்று அப்பா அடிக்கடி சொல்லக் கேட்டு இருக்கிறேன். ஈடில்லா பேராசிரியர்களான திருமதி.நிர்மலா மோகன்(28.2.2018), நினைவில் வ ...
POST: 2023-04-02T09:21:47+05:30
தினமணி - 29 3 2023 பக்கம் எண் : 3 நூல் அறிமுகம்.... சென்னை பாரிமுனையில் உள்ள ஒய்.எம்.சி.ஏ. அரங்கத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பச்சையப்பன் கல்லூரி முதல் தமிழ்த்துறை தலைவர் திருமணம் செல்வக்கேசவராய முதலியாரின் ' செல்வக்கேசவராயம் ' என்ற நூல் அறிமுக விழாவில் ( இடமிருந்து ) மாநிலக் கல்லூரிப் பேராசிரியர் தாமரைக்கண்ணன், ஒய்.எம்.சி.ஏ. பட்டிமன்ற இணைச் செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, பச்சையப்பன் கல்லூரி தமிழ்த்துறை பேராசிரியர் வா.மு.சே.ஆண்டவர், விஐடி வேந்தர் கோ.விசுவநாதன், தமிழ் வளர்ச்சித்துறை இய ...
POST: 2023-04-02T09:16:16+05:30
மகளிர் குலத்தின் முத்தாரம் அப்போலோ மருத்துவமனையின் வளர்ச்சியில் பெரும் பங்காற்றிய பெருமாட்டி தான் திருமதி ரேகா ஷெட்டி ஆவார்.... திருமதி ரேகா ஷெட்டி ரோட்டரி குடும்பத்தில் தன்னை ஆட்படுத்திக் கொண்டு மகளிர் குலத்திற்கு முத்தாரமாக ரோட்டரி ஆளுநராக நியமிக்கப்பட்டு மகத்தான பணிகளை ஆற்றியதைக் கண்டு மகிழ்ந்தோம். அவர்கள் ஆங்கிலத்தில் மிக நேர்த்தியாக கூட்டங்களில் பேசுவதை கண்டு வியந்திருக்கிறேன். அண்ணா நகரில் குடியிருந்து பல நிகழ்வுகளில் தன் அருமை கணவருடன் வருகை புரிந்த நிகழ்வுகள் எல்லாம் மறக்க முடிய ...
POST: 2023-04-01T10:59:00+05:30
தினசெய்தி - 27 3 2023 பக்கம் எண் : 4 செங்கோல் ஏந்திய செம்மொழிச் சிகரம் – 97 முத்தமிழறிஞர் கலைஞர் எழுப்பிய புகழ்வாய்ந்த வள்ளுவர் கோட்டம் ! - முனைவர் ஔவை நடராசன் மேனாள் துணைவேந்தர், தமிழ்ப் பல்கலைக்கழகம். முத்தமிழறிஞர் கலைஞர் வரைந்த நெஞ்சுக்கு நீதியிலிருந்து சில பகுதிகளின் தொடர்ச்சி வருமாறு; வையம் புகழ் வள்ளுவர் கோட்டம் 1976-ஆம் ஆண்டு ஜனவரித் திங்கள் இந்திய நாட்டு வரலாற்றிலும் குறிப்பாகத் தமி ...
POST: 2023-03-31T08:16:14+05:30
பாராட்டு விழா தேசியக்குயில் டி.கே.பட்டம்மாள் நூலாசிரியர் தாமல் கோ.சரவணன் அவர்களுக்கு பாராட்டுவிழா பிரதம மந்திரி யுவா வரிசை தேசியக்குயில் டி.கே.பட்டம்மாள் தாமல் கோ.சரவணன் நாள் : வெள்ளிக்கிழமை, மார்ச் 31, 2023 மாலை 5:00 மணி இடம் ரசிக ரஞ்ஜனி சபா 30/1, சுந்தரேஷ்வரர் தெரு, மயிலாப்பூர் சென்னை - 600 004. ( லேடி சிவசாமி பள்ளி அருகில் ) சென்ற ஆண்டு இந்திய அரசின் கல்வி அமைச்சகம் இளம் எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் பொருட்டு, விடுதலைப் போராட்ட வீரர்களை நினைவுகூறும் வகையில் தேசிய அளவிலான பிரதம மந்திரி ...
