POST: 2013-06-18T21:50:42+05:30

ஈரோடு மாவட்டத்தில் 2012-2013 ஆம் கல்வியாண்டில் பத்தாம் வகுப்புப்பொதுத்தேர்வில் மாணவச்செல்வங்களை தேர்ச்சி பெற வைத்த 36 அரசுப்பள்ளிகளின் ஆசிரிய பெருமக்களுக்கு ஈரோடு மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் பாராட்டு விழா 29.6.2013,சனிக்கிழமை நடைபெறவிருக்கிறது அரசுப்பள்ளிகளின் பட்டியல்: அரசு மகளிர் மேனிலைப்பள்ளி,மொடக்குறிச்சி அரசு மாதிரி மேனிலைப்பள்ளி, பட்டிமணியக்காரன்பாளையம் மாத்தூர் அரசு மேனிலைப்பள்ளிகள்: பொலவக்காளிபாளையம், பு.புளியம்பட்டி, பாசூர், லக்காபுரம், மின்னப்பாளையம் அரசு உயர்நிலைப்பள்ளிகள் ...

POST: 2013-06-17T13:28:14+05:30

Dr BR Ambedkar was the only person who walked out in a huff from a private audience with the Pope of Rome. His Holiness Pius xi heard the miseries of Indian Outcastes wayback on 16th March 1936 and replied to Dr Ambedkar,My Son,it may take three or four centuries to remedy these abuses,be patient!

POST: 2013-06-09T21:25:11+05:30

தாய்க்கு முழு டிக்கெட்,பிள்ளைகளுக்கு அரை டிக்கெட்களும் வழங்கிய காலம் போய் அனைத்துப்பிள்ளைகளுக்கும் செம்மொழி டிக்கெட்களை வழங்கிய கன்டக்டர்க்கு வாழ்த்துக்கள். டிக்கெட் -செலவுச்சீட்டு கன்டக்டர்-நடத்துநர்

POST: 2013-06-09T21:16:42+05:30

உருளைக்கிழங்கு சீவலுக்காகவே ஓர் உயரிய அருங்காட்சியகம் பெல்ஜியத்தில் இயங்குகிறது.உருளைக்கிழங்கினை சீவி விற்ற பெல்ஜிய பெண் நாவில் பிரெஞ்சு மொழி நடமாடியதால் பிரெஞ்சு சீவல் என்றே பெயர் வந்ததாம்.பிறந்தது தமிழ்நாட்டில்,செய்ததும் தமிழ்நாட்டில் மைசூர் போண்டா என்று வழங்கப்படுவது போல. சிறு மீன்களின் பற்றாக்குறையால் சிறு மீன்களின் வடிவத்தில் உருளைக்கிழங்கின் சீவல் பெல்ஜியம் மக்களுக்கு சிற்றுண்டியாக அமைந்ததாம். இன்று உலகெங்கும் பெல்ஜியம் நினைவில்லாமல் எல்லோரும் பிரெஞ்சு சீவல் (French Fries)என்றே அழைக்க ...

POST: 2013-05-27T18:00:15+05:30

இங்கே நம்மிடையே வாழும் தெலுங்கர்களோ கன்னடத்துக்காரர்களோ மழலைகளையும்,பிள்ளைகளையும் பள்ளிகளில் சேர்க்கும் கவலையில் இருக்கிறார்கள்.காலை முதல் காயும் கனல் எங்களை கருக வைக்கிறது. அமெரிக்காவில் புற நானூறு மாநாடு,சிட்னியில் சியமா சாஸ்த்ரிகள் ஆராதனைகளும் நடைபெறுகிறது.ஊரை விட்டுப்போனாலும் அவர்களின் உள்ளத்தில் கலையார்வம் ததும்புகிறது. வேலை வெட்டியில்லாதவர்கள் விஞ்ஞானம் வளர்ப்பதாகச்சொல்லி அங்கங்கங்கே விநாயகர் கோவில்களை கட்டி வருகிறார்கள் என்று தமிழ்நாட்டில் தரையோரத்தில் படுத்திருந்து விபத்துக்குள்ளான குட ...

POST: 2013-05-27T17:32:14+05:30

ழ கரம் தமிழுக்கு சிறப்புடையது தான்.வேட்டி தமிழர்க்கு பெருமை தரும் உடை தான்.ராகுலுக்கு வேட்டி கட்டுவதோ,ரஷ்யினை ழ கரம் ஒலிக்க வைப்பதோ வீண் வேலை. நாம் எகிப்து என்கிறோம்.எவனாவது அப்படி இல்லை என்று Egyptலிருந்து மறுப்புக்குரல் வந்ததா?கோடையில் கொப்பளம் வருவது போல ஏன் இப்படி தமிழால் சொறிந்து கொள்கிறார்கள்

POST: 2013-05-27T16:52:26+05:30

வங்கத்தின் முதலமைச்சராக இருந்த ஜோதி பாசு கொடி கட்டி பறந்த நேரம்.மேற்கு வங்க சட்டசபையில் உறுப்பினர் ஒருவர் கேள்வி கேட்டார். பெர்த்வான் மாவட்டத்தின் ஆட்சித்தலைவர் தமிழர்,மாவட்ட காவல்துறைத்தலைவர் உத்தர பிரதேசத்தை சார்ந்தவர்,துணை ஆட்சித்தலைவர் மலையாளி,துணைக்காவல் அதிகாரி ராஜஸ்தானை சேர்ந்தவர்,கூடுதல் ஆட்சித்தலைவர் உத்தர பிரதேசத்தை சார்ந்தவர்.இப்போது மேற்கு வங்கம் வங்காளிகளுக்கு இல்லை என்பது பொருளா? என்று அவையில் கேட்கப்பட்டபோது உடனே பாசு அவர்கள் எழுந்து இவர்கள் எல்லாம் இந்தியர்கள் இல்லையா?இது போன்ற ...

POST: 2013-05-26T23:57:13+05:30

தியாகையர் கீர்த்தனைகளை தினம் தினம் பாடி சகுந்தலையில் நடித்தாலும் சங்கராச்சாரியார் கேட்டு மகிழ்ந்ததால் எம் எஸ் புகழ் ஐ நா வில் ஒலித்தது. தியாகராஜா பாகவதரை மிஞ்சி தினம் தினம் ஒரு பாடல் பாடி ஆண் குரலுக்கு எவ்வளவு அழகு இருக்கும் என்பதை நிறுவிக்காட்டிய டி எம் எஸ் க்கு கடைசி வரை அழுது கொண்டே சிரித்துக்கொண்டிருந்தார். குரலின் வளத்தால் பெருமையா?நடிப்புத்திறத்தால் பெருமையா என்று கலங்கித்தவித்து கவிழ்க்க நினைத்தவர்கள் திலகமென்றும் புரட்சியென்றும் திசை தடுமாறினார்கள். பேச்சுப்பேச்சு என்னும் பெரும்ப ...

POST: 2013-05-26T23:43:51+05:30

குரங்குக்கையில் பூமாலை என்ற ஒரு பழமொழியுண்டு. பூமாலையை புவியில் பல நாடுகள் விரும்புவார்கள். குரங்குகளின் கையில் நன்மை என்ற பெயர்க்கொண்ட கிரிக்கெட் எப்படிச்சின்னாபின்னமாகிறது என்று பாருங்கள்.ஸ்ரீனிவாசன் அனுமன் பக்தராம். வட நாட்டுக்காரர்கள் பிடிபடவில்லையே என்று இப்போது தான் சுட்டிக்காட்டுகிறார்கள் தென்னாட்டுத்திருடர்கள். சிருங்கேரி மடாதிபதி தலையிட வேண்டுமென்று ஸ்ரீநிவாசன் குடும்பத்தார் கேட்டுக்கொண்டு இருப்பதாக ஒரு செய்தி தேவகோட்டையிலிருந்து பரப்பப்படுகிறது