POST: 2013-05-13T15:40:50+05:30

கணவனும் மனைவியும் ஓங்கிய குரலில் பேசினாலும் ஓலமிட்டாலும் அடுத்த வீட்டுக்காரரும் எதிர் வீட்டுக்காரரும் காவல்துறைக்கு முறையிட்டால் வருவார்கள் என்பது அமெரிக்காவில் சொல்லப்பட்டது இப்போது தொல்லையென்று கீழ் வீட்டுக்காரர் சொன்னால் ஒரு காவலர் உடனடியாக அனுப்பபடுகிறார்.இது சென்னையில் நடக்கிறது.இப்போக்கு பாரட்டத்தக்கது

POST: 2013-05-13T14:48:34+05:30

நெரிசல்,நெருக்கடி என்று இருந்தாலும் காலை எட்டு மணிக்கு அலுவலகத்திற்கு வரவில்லையென்றால் ஒரு வேளை ஊதியம் நிறுத்தப்படும் என்ற ஆணை எப்படி இங்கிலாந்தில் கடைப்பிடிக்கப்படுகிறது என்பது இன்றைய வினா?

POST: 2013-05-12T09:44:37+05:30

கரும்பு தந்த தீஞ்சாறே கனி தந்த நறுமலரே அரும்பு தந்த வெண்கையே அணி தந்த செந்தமிழே என்ற புகழ்ச்சொல்லை சொல்வது தமிழர்களின் கடமையாகும்

POST: 2013-05-12T09:22:44+05:30

வாழ்க்கை என்பது வையகத்தோடு வாழும் சூழலைப்பொறுத்தது.பனி கொட்டும் எஸ்கிமோகல் கொதிப்பின் குறைவில்லாத அராபிய நாடுகள் இரண்டு நிலைகளில் நிற்கின்றன. இந்திய நாடு குளிரும் கொதிப்பும் கலந்துள்ள நாடு.காலம் செல்லச்செல்ல பங்குனி,சித்திரை,வைகாசி திங்களில் கொதிப்பின் கொடுமையை எப்படிக்குறைக்கலாம்.இடி மேல் விழுந்தாலும் இந்த மூன்று திங்களிலும் மின்வெட்டே அமையக்கூடாது என்று சிந்திக்கத்தெரியாதவர்கள் தான் அமெரிக்காவிற்கும் அயல் நாடுகளுக்கும் சென்று வாழ்ந்துக்கொண்டு நாசாவில் புதுமைகளைச்செய்து கொண்டிருக்கிறார்கள். ஒ ...

POST: 2013-05-08T22:24:14+05:30

புன்னகை(Smile), சிரிப்பு(Laughter) என்ற இருவரும் ஒரே வீட்டில் பிறந்தவர்கள். அரும்பும் புன்னகையும்,ஆர்ப்பரிக்கும் நகைப்பும் உடலுக்கு நலம் செய்பவை. மும்பையைச்சார்ந்த டாக்டர் மதன் கட்டாரியா அவர்களை நகை மருத்துவர்(Giggling Guru) என்றே நாடு அழைத்தது. மே மாதத்தின் முதல் ஞாயிற்று கிழமை நகைத்திருநாளாக(World Laughter Day) உலகம் மகிழ்ந்து கொண்டாடுகிறது. நகைக்க தெரிந்த குடும்பம் நன்றாக வாழும் -களித்து,நிலைத்து...

POST: 2013-05-08T21:51:07+05:30

பெயர் மாற்றத்திட்டம் கைவிடப்பட்டது --------------------------------------------------------------------------------------- கேரள மாநிலத்தை சார்ந்தவர்களை ஆங்கிலத்தில் Keralite என்பார்கள் இது எதை நினைவூட்டுவது என்றால் அதிபர் இடி அமின் தன் நாட்டுக்கு இடி என்று பெயர் வைக்க ஆணையிட்டார்.இரண்டு வாரங்கள் கழித்து ஓர் அமைச்சர் துணிவாக அதிபரிடம் இடி நாட்டைச்சார்ந்தவர்களை ஆங்கிலத்தில் Idiots என்று சொல்வார்களே என்று பணிவோடு சொன்னார்.உகாண்டவின் பெயர் மாற்றத் திட்டம் கைவிடப்பட்டது!

POST: 2013-05-07T16:36:22+05:30

எவருக்கும் அடங்காத சிங்கங்கள்,ஈடில்லாத இருவர் அறிஞர் கு இராசவேலும்,பேராசிரியர் அரசன் கண்ணனார் ஆவர்.இவர்கள் மட்டுமே அந்நாளைய தலைமைச்செயலாளரையே தமிழால் நடுங்க வைத்தார்கள். ஒரு முறை அவர்கள் சொன்னது மூன்று ஆண்டுகளோ ஐந்து ஆண்டுகளோ ஓயாமல் தமிழ்,தமிழ் என்று காதில் விழ கேட்டுப்பழகிய கல்வி தான் தமிழ் முதுகலையாகும்.பிறகு தொடர்ந்து நூறு நூல்களையாவது அப்படி இப்படிப்புரட்டி ஆய்வு பட்டப்பேறு கிட்டுகிறது.கல்லூரியில் இளங்கலையில் ஒரு பாடம் படித்து விட்டு கணக்கு வழக்கு தெரிந்து கொண்டதாக நம்பிக்கொண்டு அரசுப்பணிய ...

POST: 2013-05-07T15:49:46+05:30

பேராசிரியர் மறைமலை இலக்குவனார் நான் மாநிலக் கல்லூரியில் பயின்றபோது எனக்குப் பெரும் பேறாக வாய்த்த பேராசிரியர் திலகமாவார். பகுத்தறிவுச் சிந்தனையும் பரந்த நூலறிவும் சிறந்த ஆங்கில நுணுக்கமும் ஒரு சேரப்பெற்ற எங்கள் பேராசிரியர் தன் தாங்கமுடியாத அவலத்தை மனத்தில் தேக்கிக்கொண்டு அஞ்சாமல் தன் நெஞ்சில் பட்டதை எடுத்துரைக்கும் நேர்மை வாய்ந்தவர். நடைமுறை வாழ்வில் நாட்டிலும், அரசிலும், கலை, மொழி, பண்பாட்டுத் துறைகளிலும் படர்கின்ற நலிவுகளைத் சிந்தனைகளை வகுப்பறைகளிலும் எங்களுக்கு வழங்கினார். எந்தப் பரிவும் எ ...

POST: 2013-05-06T23:56:23+05:30

ஆயிரம் ஆண்டுப்பழமையுடைய பெயர்களைத்தான் இன்றும் வெள்ளையர்கள் குடும்பப்பெயர்களாக வில்லியம்ஸ்,ஜேம்ஸ்,ஜான்,ரிச்சர்ட்,பீட்டர்,மாத்தியு என்று இன்றும் வைத்திருக்கிறார்கள்.அவ்வப்போது இரண்டு மூன்று எழுத்துக்களில் சுருக்கப்பெயரைச்சூட்டிக்கொள்கிறார்கள். விக்னேஷ் என்பது தமிழ்நாடு முதலிய மாநில இளைஞர்களின் பெயர்.விக்னேஸ்வரன் என்பது தமிழுக்கு போராடும் ஈழத்துப்பெயர்.நல்ல வேளை தமிழ்நாட்டில் வினாயகம் என்ற பெயர் அப்படியே இருக்கிறது!

POST: 2013-05-06T10:27:18+05:30

பிச்சு ஐயர் பக்கத்து வீட்டில் இருந்து கொண்டு பீட்சா உணவிற்கு தொலைபேசியில் சுழற்றிக்கொன்டிருக்கிறார்.பிச்சு ஐயர் பேரன் மாடு மேய்த்துக்கொண்டிருந்த ஸ்ரீவில்லிப்புத்தூரை மறந்து விட்டு இட்லி தோசைக்கடையை அமெரிக்காவில் திறந்திருக்கிறார். அமெரிக்கர்கள் இந்த அசடுகளை கண்டு சிரிக்கிறார்கள்.அமெரிக்கன் எந்த ஊருக்குச் சென்றாலும் தன் ஊர் உணவை தான் மட்டும் வாங்கி உண்பான்,பர்கர் வணிகம் செய்ய மாட்டான். எப்படி பிழைத்தால் என்ன? இந்தியாவை விட்டுப்போனால் சரி!