POST: 2013-05-26T23:23:21+05:30

கட்டி முடித்த கோபுரமாகிய நேரு பெருமகனாரின் குடும்பத்தை சார்ந்த தங்கையர்,மாமன்,மைத்துனர்,சித்தி மகன் என்ற கணக்குப் படி எவரவர் எந்தப்பதவியில் இருந்தனர் என்பது வியப்பைத்தரும். பேரறிஞர் அண்ணாவின் பிள்ளைகள் ஒருவரும் கடன் வாங்காமல் வாழந்ததும் இல்லை,இறந்ததும் இல்லை.படிப்பறிவு இல்லாத மனைவி மட்டும் மேலவை உறுப்பினராக இருந்தார். தன் குடும்பத்தை கல்வியாலும் செல்வத்தாலும் வளமாக்குவது ஒரு திறமை தான்....

POST: 2013-05-24T15:50:04+05:30

தமிழ் மக்கள் தம்முடைய தாய்மொழியாகிய தமிழின் மீது பேரன்புடையவர்கள். ஒரு தாய் தன்னுடைய குழந்தையைப்பரிவோடு பலவிதமான செல்லப்பெயரிட்டு அழைத்துக்கொஞ்சி மகிழ்வாள் அல்லவா?அப்படியே நம் மக்களும் தமிழ் மொழிக்கு ஏரளாமான அழகிய சிறப்பு அடைமொழிகளைச் சேர்த்து வழங்கிப் பெருமை கொள்வார்கள் சங்க காலத்திலிருந்து இன்று வரை தமிழ் மொழியின் மிகப் பரவலாக உள்ள இந்த நிலையை மற்ற மொழிகளில் நாம் அதிகமாகக் காண இயலாது

POST: 2013-05-22T13:17:23+05:30

தமிழ்நாட்டில் அறுநூறு பொறியியல் கல்லூரிகளில் நூற்றுக்கு மேற்பட்ட பொறியியல் கல்லூரிகளில் நாயுடு,ரெட்டியார் முதலிய தெலுங்கு மொழி பேசும் நண்பர்களால் நடத்தப்படுகிறது. எட்டாயிறத்திற்கு மேற்பட்ட மாணவர்கள் ஆந்திரம் பீகார்,மேற்கு வங்கம்,நேபாளம் முதலிய மாநிலங்களிலிருந்து இருபதாயிரம் பேர் ஆண்டொன்றுக்கு சேர்கின்றனர். 2060 ல் இங்கிலாந்தில் அயல் நாடுகளில் இருந்து குடி பெயர்ந்தவர்களே மக்கள் தொகையில் நிரம்பி வழிவார்களாம்(வெள்ளையர் அல்லாதார்) தமிழ்நாட்டில் வாழும் பிற மொழியினர் என்று கணக்கு எடுக்கலாம். அமெரி ...

POST: 2013-05-22T12:46:59+05:30

வாடிய பயிரை கண்ட போது வாடியவர் வள்ளலார். வாடிய பறவைகளின் உயிர்களை கண்டு பதறுவது மேனகா காந்தியாரின் இயல்பு.கொடுமைக்கார கணவனுக்கு இப்படி ஒரு இரக்கமான மனைவி,இந்தப் பொருத்தங்கள் எல்லாம் எப்படி நேர்கின்றன என்று தெரியவில்லை!தாயும் தந்தையும் ஒரேத்துறையில் வல்லவர்களாக இருந்து மகள் உலகக்கணக்குப்போட்டியில் முதல் பரிசுப்பெற்றாள் அதுவும் குடும்பம்! வறுமை,ஏழ்மை,போதாமை,நிறைவில்லாமை,மூட நம்பிக்கை உள்ள நாடுகள் உருப்படவே முடியாது என்று தந்தை பெரியார் எழுதியதை மறுக்க மனம் துணியவில்லை...

POST: 2013-05-22T12:27:26+05:30

ஒரு செருமானிய தொழிலாளிக்கு நிகர் இரண்டு அமெரிக்க தொழிலார்களை அமர்த்தலாம்.அந்த சம்பளத்திற்கு தாய்வான் நாட்டின் தொழிலார்கள் ஐவரை அமர்த்தலாம்.பிரேசில் நாட்டு தொழிலாளர் எண்மரை அமர்த்தலாம்.நல்லது,நம் இந்தியத்தொழிலார்கள் 128 பேரை அமர்த்தலாம்.இது தான் பொருளாதார ஏற்றத்தாழ்வு! செருமானிய நாட்டுத் தொழிலாளரின் ஒரு மணி நேர சம்பளம் ரூ 1150 ஆகும்.வேதம் வளர்ந்த நாட்டில் வேலை செய்பவர்கள் பற்றற்று வேலை செய்கிறார்கள்.பலர் மாதத்திற்கு நான்கு முறை அயல்நாடுகளுக்கு பயணம் செய்கிறார்கள்.இந்த அழகில் பொறியியல் கல்லூரி ...

POST: 2013-05-21T12:01:38+05:30

தமிழ்க்கடல் வ .சுப.மாணிக்கனார் வாழ்வில் கண்ட முன்னேற்ற நெறிகள்: 1)எளிய வாழ்வு 2)அளவான பேச்சு 3)எந்நிலையிலும் எதிர்கால நம்பிக்கை 4)பதவிகளைத் தொண்டாக மதித்தல் 5)தன்னைப்பற்றிய திருத்தமான சிந்தனைகள் 6)வாழ்க்கைத்திட்டங்கள் 7)பெரியவர்களின் வரலாறுகளைப்படித்தல் 8)சோர்வுக்கு இடங்கொடாத ஊக்கங்கள் 9)பகட்டின்றித் தூய எண்ணத்தால் இறைவனை வழிபடுதல் வழிகாட்டிய தமிழ் மறைகள் 1)தமிழுக்குத் தொல்காப்பியம் 2)வாழ்வின் உயர்வுக்குத் திருக்குறள் 3)உயிர்த்தூயமைக்குத் திருவாசகம்

POST: 2013-05-14T15:22:01+05:30

எந்தக்கட்சியானாலும் ஆர்ப்பாட்டம் என்ற பெயரில் போர்ப்பாட்டுப்பாடலாம்;ஆனால் ஓடும் பேருந்தும்,ஓங்கி வளர்ந்த மரமும்,செல்லும் சாலையும் பாழானால் பல கோடிகளை யார் கட்டுவார்கள்?

POST: 2013-05-14T15:18:26+05:30

விரிவாக எழுதல் என்பது சில பேருக்குக் கை வந்த கலை கவிராசர், பண்டிதர் களஞ்சியம்,புலவர் சகவீரபாண்டியனாரைச்சான்றாகக்கூறலாம்.கவிராசர்க்கு அரசு நூற்றாண்டு நினைவை நிகழ்த்தியது. தரும தீபிகை,திருக்குறட் குமரேச வெண்பா,கம்பன் கலைநிலை இவை மட்டும் ஐம்பது தொகுதிகளாக அமையும் ஒவ்வொரு திருக்குறளுக்கும் ஒரு புராண பழங்கதையை அடிப்படையாக கொண்டு குமரேசா என விளித்து வெண்பாக்களை இயற்றியுள்ளார் இது பெருஞ்செயலாகும். கம்பன் கலை நிலை மாபெரும் நிலைக்கண்ணாடியாகும்.மாநிலக்கல்லூரி தமிழ்ப்பேராசிரியர் அன்பு என் பேராசிரியர் ...

POST: 2013-05-13T16:46:53+05:30

ஒற்றுப்பிழையும் சந்திப்பிழையும் வேறு மொழிகளில் இல்லை சமயக்கலைக்களஞ்சியம் என்பதில் ஒற்றில்லை.சமயம் என்பதை வடசொல் என்று சொல்லி ஒற்றிலக்கணம் வேண்டா என்பர்,சமய சஞ்சிகை,சமய சந்தா இங்கே மிகுவதில்லை.சமயக்கையேடு,சமயப்பெரியார் என்றவிடங்களில் மிகும்.எனவே ஒற்றுப்பிழையை உற்றுப்பார்க்காதீர் என்று சொல்லலாமா என்று என்னுடன் பயின்ற நண்பர் வினவுகிறார்.

POST: 2013-05-13T16:38:47+05:30

சென்னையில் எண்பது வயது கிழவர்கள் இருவருமாக வாழ்கின்றனர்.அவர்கள் வீட்டில் குழாய் பளுதாயிற்று,வீடு குளமாகிற்று.எடுத்து ஊற்றினால் அல்லது ஈரம் துடைத்தால் இருபது மணித்துளிகளாகும்.நூறு ரூபாய் பணம் பெற்றுக்கொண்டு தெருவில் உருண்டுக்கொண்ட குடிகாரச்சிறுவனை மூன்று மணிநேர முயற்சிக்குப்பிறகு பணி முடிந்தது. இந்த அழகில் வீட்டைக்காப்பது,தண்ணீருக்கு தனிக்காசு,தூய்மை செய்ய ஆட்கள் என்று ரூபாய் 5000/- வரை தரப்படுகிறது.இதற்கு எவர் தலையிடுவது? ஓடிப்போய் சட்டமன்ற உறுப்பினர்க்கோ,நகராட்சி உறுப்பினர்க்கோ தெரிவித்தால் ச ...