POST: 2012-05-15T16:31:55+05:30
மணியாச்சி போலி,மனப்பாரை முறுக்கு,காஞ்சி இட்லி,அய்யாறு அசோகம்,கண்ணமங்கலம் சுண்டல்,பேரளம் வடை என்று சொல்வார்கள். அதேப்போல மடித்த ரொட்டிக்கு மங்காத புகழ் சேர்த்த ஊர் தான் சண்ட்விச்(Sandwich) நகரமாகும். எளிய விரல் நகத்திற்கும் கூட விரிவான வரலாறு எழுதும் பழக்கம் இங்கிலாந்து காரர்களின் இயல்பு. ஆயிரமாண்டு பழமை இருந்தாலும் அதை கணக்கிடத்தெரியாத கலக்கம் தமிழர்களுக்கு உண்டு. ஆண்டையே அறுபதுக்கு மேல் எண்ணத் தெரியாதவர்கள் sandwich உண்ணத் தொடங்கி 250 ஆண்டு விழாவாக நடைபெறுவதை நெற்றி உயர்த்தி பார்க்கிறோம். ...
POST: 2012-05-09T13:55:52+05:30
அடிமை நாட்டில் வாழ்ந்து பழகியவர்கள் குறைந்தது நூறாண்டுகளுக்கு முட்டாள்களைத்தான் எல்லாப் பதவிகளிலும் நிரப்புவார்கள் என்றார் Plato
POST: 2012-05-09T12:32:15+05:30
எல்லாக்காலங்களிலும் இந்தியர்களுக்கு இராகு (ராகுல்) காலம் தான் என்றார் ஒரு காங்கிரஸ் தலைவர்!!
POST: 2012-05-09T12:22:49+05:30
ஆதினம் என்றால் அகப்பட்டதை சுருட்டுவது என்பது பொருள். சுய ஆதினம் - தானாக எடுத்தல் பர ஆதினம் - பிறருக்குத் தருதல் அது போலத்தான் மடம் என்ற சொல்லுக்கு முட்டாள்தனம் என்பது தமிழ். தமிழிலில் எழுதும்பொழுது மடத்தலைவர் என்றுதான் எழுத வேண்டும். குடிக்கவும் நீரற்றிருக்கும் - ஏழைக் கூட்டத்தை எண்ணாமல், கொடுந்தடியர்க்கு மடங்கட்டி வைத்ததினாலே – தம்பி! வசம்கெட்டுப் போனது நமது நன்னாடு! என்பது புரட்சிக்கவிஞரின் வாழ்வில் உயர்வுகொள் என்று 1938ல் எழுதிய பாடல் வரிகளின் வாக்காகும். ஆதினச் சேற்றை கிளறினால் ஆபாச நண் ...
POST: 2012-05-08T17:03:31+05:30
தென்னிந்தியாவில் இசுலாமியர் ஆட்சியில் பல உருது மொழிச் சொற்கள் தமிழ்நாட்டு மக்களின் அன்றாட வாழ்க்கையில் பயன் சொற்களாக மாறிவிட்டன. 1சுப்பிராசி-வேலையாள் 2சுபேதார்-படையதிமான் 3சுணாவணி-வேண்டுகோள் 4செலாவணி-பொருள் மாற்று 5 சோராவரி-கொள்ளை 6சூர்மா-கண்மை 7சூத்தி-செருப்பு 8சேந்தி-கள் 9சேர்பந்து-சாட்டை 10செண்டா-கொடி 11சேடை-நீர்க்கட்டு 12சேம்பா-சளி நோய் 13சோக்கு-பகட்டாரம் 14சோல்னா-தொங்குபை 15 டக்கர்-குழப்பம் 16டாணா-காவலிடம் 17 தண்டோரா-பறையறிவிப்பு 18 தமாம்-முழுவதும் 19 தபால்-அஞ்சல் 20 தமாஷ்-வேடிக்கை 21 தம ...
