POST: 2012-06-01T19:51:19+05:30

Today happens to the 31st Anniversary of the greatest Jaffna library being burnt to ashes,and great tamil works had been ravaged by Sinhala cops wayback in 1981! and I had an oppurtunity to visit today Roja Muthiah Library and had a complete tour of the every shelf which they have meticulously protected and taken great efforts in restoration and digitilization.The passion of the work is reflected from the Director Mr Sundar to each and evey employee over there.Kudos and they deserve 3 cheers and ...

POST: 2012-05-31T15:31:03+05:30

அரிய உழைப்போடு 17 ஆண்டுக்காலத்தில் ஆறு தொகுதிகளாக 50 இலட்சம் வரிகளைக் கொண்டு அந்தப்பார இலக்கியம் 2006ல் 5000 படிகள் வெளியிடப்பட்டதாகவும் அத்திங்களிலேயே அவ்வளவு நூல்களும் விற்பனையாயின. ஒரு படியின் விலை நம்மூர்க்கணக்கில் ரூ.3862 என்று குறிப்பிடப்பட்டுள்ளது. சீன நாட்டு சமூக கலைப் பண்பாட்டு வளர்ச்சி நிறுவனம் மூலம் வெளியிடப்பட்டதாம்.

POST: 2012-05-31T14:28:50+05:30

இந்திய பேரிதிகாசமான இராமாயணத்தை Ji Xianlin சீன மொழியில்1976-ஆம் ஆண்டில் மொழிப் பெயர்த்த பெரும் பணிக்காக நம் பாரத அரசு 2008-ம் ஆண்டு அவருடைய தளர்ந்த 97ம் அகவையில் பத்ம பூஷன் விருது வழங்கியது. அந்நாளைய வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி, அயலுறவு செயலருடன் சீன நாட்டில் Ji Xianlin இல்லத்திற்கே சென்று பாராட்டியிருக்கிறார்

POST: 2012-05-30T11:52:12+05:30

மாஸ்கோவில் தான் பயணம் செய்தபோது எதிர்பாராமல் வாடகை காரோட்டியோடு பேச்சு கொடுத்தபோது திருக்குறள் எங்கள் ரஷ்ய மொழியில் மொழிபெயர்க்கப்பட்டது என்றும், எனக்கு மனப்பாடமாக பல குறள்கள் சொல்ல முடியும் என்று கூறியதைக் கேட்டு அறிஞர் தெ.பொ.மீ. வியந்ததாக மாஸ்கோவில் திருக்குறள் என்ற கட்டுரையில் குறிக்கப்பட்டுள்ளது.

POST: 2012-05-29T17:03:49+05:30

ஒரு வியர்வைத்துளி சிந்தினால் அதற்கு எனக்கு வெள்ளிக்காசு அள்ளித் தருகிறது தமிழ்நாடு கவிப்பேரரசு வைரமுத்து Rajini ஐ பாட வைத்தார். வியர்வை சிந்துமானால் அது விலை மதிக்க முடியாதது என்பது வணிகத்தின் குறிக்கோள்! விமானத்தில் கால்வைக்கும் போதே இந்தியப் பணம் வீணாகிறது என்று நெஞ்சு நடுக்கம் இருக்குமானால் ஒரு பிரதமரோ, குடியரசுத் தலைவரோ உலக உல்லாச உலா நடத்த மாட்டர்கள். ஒரு பயணச் செலவினல் என்ன பயன் விளைந்தது என்று ஒரு திங்களுக்குள் அறிக்கைத் தர வேண்டாமா? அற்பனுக்கு வாழ்வு வந்தால் அயல் நாடுகளை சுற்றிக் ...

POST: 2012-05-28T15:50:22+05:30

எவனக்குப்பின் எவன்? ----------------------------------------------------------------------------- புகழ்வாய்ந்த ஒருவர் மறைந்த பிறகு தனக்குப்பிறகு தன்னைப்போல் சிந்திக்கும் ஒருவரை தன்னுடைய அறுபதாம் அகவையிலாவது பண்படுத்த வேண்டும். நாவலர் நாட்டார் மணிமேகலை உரையெழுதி நிறைவேற்றாமல் மறைந்தார்.உரைவேந்தர் ஔவை துரைசாமி அந்தக்கடைசி பகுதிகளை சமண பௌத்த நூல்களோடு தோய்ந்து உரை எழுதினார் அறிவியலாளர்கள் நால்வர் ஐவராகக்குழு அமைத்துக் கொள்வர் மகப்பேற்று இயலில் மருத்துவமாமணி முதலியார் ஐ புகழ்ந்தவர்கள் மருத்துவ ...

POST: 2012-05-27T23:09:55+05:30

Advertisemnet line against Pizza,Pasta,Burger,Puffs and Chinese food: Few moment on your lips.... Forever on your hips...! அமுதம் உனது அசைந்திடும் வாய்க்கு... அகலும் இடுப்பு நோய்க்கு இடம்தரும்...!

POST: 2012-05-27T23:05:03+05:30

ஆர்வத்தோடு ஒரு புலவன் அரசனிடம் இல்லாமைப்பற்றிய வறுமையைச்சொல்லி ஒரு வாய்க்கு உணவு தந்தாலும் போதும் என்றான்.ஒரு வாய் என்பது அரசனுக்கு காதில் விழாமல் நிமிர்ந்து நின்ற நால்வாயை நிறுத்தினான்.இதற்கு கொடை என்பது பெயரல்ல,கொடை மடம் என்பது பெயர். அதுபோலத்தான் கேட்டதற்கு பொருத்தமாக தருவதும் அறிந்து தருவதும் பெரிய கலையாகும்.வேண்டத்தக்கது அறிவோய் நீ என்பது திருவாசகத்தொடர்.இந்த நிலையில் இந்தியாவில் இப்போது தான் மாறி 10,000 கோடி வருமானம் உடைய நிறுவனம் 100000அடி அகலத்திலேயே பணியாற்றுகிறது.