POST: 2012-05-27T22:50:12+05:30

மொழியென்பது பேசும் மக்கள் வாழும் நிலத்தின் தட்ப வெப்ப நிலைகளால் ஒலிமாற்றம் பெறும். இளம்பருவத்திலேயே ஒலிப்புப்பயிற்சியை ஒழுங்குற கற்றுத்தர வேண்டுமென்று ஆங்கில ஆசிரியர்கள் வலியுறுத்துவார்கள்.இதனை Enunciation and Pronunication என்பார்கள். சோழ நாட்டில் ழ கர ஒலிப்பு சீர்குலைந்ததைக்காணலாம்.இதனாலேயே பாண்டிய நின் நாடுடைத்து நல்லத்தமிழ் என்றத் தொடர் பிறந்ததோ? நெருங்கியப்பழக்கத்தால் நையாண்டிக்குரலால் எவே,ஏம்மா,ஏன்ப்பா,இங்க,ஏனுங்க என்ற ஒலிப்புகள் பிறந்திருக்கலாம். பக்கத்தில் இருக்கும் கேரளக்காரர்கள் ஆ ...

POST: 2012-05-26T14:39:32+05:30

இறந்து போனவர்கள் தன்னை பிறர் நினைக்க வேண்டுமென்று விரும்புகிற பழக்கம் இருப்பதால் தான் புதைக்கிறார்கள். பலரின் புதைக்கல்லுக்கு மேலோ எரியூட்டிய இடங்களிலோ இரங்கல் எழுத்துக்கள் இடம் பெறுவதில்லை. இசுலாமிய கடைசி மன்னரின் இறுதி வேண்டுகோள் எழுத்துக்கள் நம் கண்களை ஈரமாக்குகிறது! இருண்டு போன என்னை எவர் வந்து ஒளியேற்றப்போகிறார்கள்? பூக்களை வைத்து போற்றிடப்போகிறார்கள்? எவர் ஒளிவிளக்கு ஏற்ற விரும்புவார்கள்? இதனால் தான் பலரும் இன்றும் பர்மா வருகிறார்கள்.சில ஆண்டுகளுக்கு முன் அண்ணல் அப்துல் கலாமும ...

POST: 2012-05-26T14:19:09+05:30

மியான்மர் என்பதற்கு பர்மா என்பது பெயர். பர்மிய நாட்டுத்தொடர்பு நகரத்தார்க்கு நிரம்ப உண்டு. நகரத்தார் மாளிகைகளின் தூண்கள் எல்லாம் பர்மியத் தேக்குகள் ஆனவை. நகரத்தார் கோயில்கள் பர்மாவில் இருந்ததாக சொல்வார்கள். பர்மிய அகதிகள் தமிழ்நாட்டுக்கு வந்து பாரிமுனை ஓரத்தில் அங்காடிகள் வைத்திருகின்றனர்.அந்தக்குறிப்புக்களையெல்லாம் தலைப்பாகை தலைமை அமைச்சர்க்கு கார் துடைப்பவனும் தமிழ்நாட்டுக்காரன் இல்லை.இதன் முழுக்கதையும் தெரிந்த நகரத்தாரே உள்துறை அமைச்சராக இருக்கிறார்.

POST: 2012-05-25T14:04:57+05:30

தலைப்பாய்கட்டு தலைமை அமைச்சர் இன்று மியன்மார் செல்கிறார்,உடன்120 பேர் செல்கிறார்கள். செலவை குறைத்துக்கொள்ளுங்கள் என்ற உலக மாநாடு ஜெனிவாவில் நடத்த முடிவு செய்யலாம் என்பது திட்டமாம்

POST: 2012-05-25T13:59:25+05:30

இசுலாம் நாட்டினரின் காலணியில் எண்ணை வளம் தேங்கியிருக்கிறது. கிருத்தவ நாட்டினர் நேற்று கண்டறிந்த கருவிகளோடு முயன்று விற்கிறார்கள். இந்து நாட்டினர் விலை கொடுத்து வாங்குகின்றார்கள் அதுவும் கொரியாச்சீருந்துகளும்,சப்பானிய பொருட்களும் வாய்திறந்து கிடக்கின்றன.

POST: 2012-05-25T13:48:54+05:30

மொழி ஞாயிறு தேவநேயப்பாவாணர் coffee என்ற சொல்லுக்கு குழம்பி என்ற சொல்லை1940 அளவில் செய்தார்.coffee house குளம்பியகம் என்று எழுதும் பொழுது குழம்புதல் என்று பொருள்படுவதால் தமிழ் அறிஞர்களும் பொது மக்களும் இச்சொல்லை பயன்படுத்த தயங்கினர் .சிலர் நகையாடவும் செய்தனர் இப்பொழுது coffee காணீர் என்கிறோம். காழ் என்ற சொல் கெட்டியான வித்திணைக்குறிக்கும். காழ்+ நீர் இலக்கணப்புணர்ச்சியின் வண்ணம் காணீர் என்றாகும். Tea -தேநீர் என்பது போல,Coffee- காணீர் என்போம்

POST: 2012-05-24T17:29:43+05:30

கோயில் சொத்து குலநாசம் என்பது ஒரு முதுமொழி. பிள்ளையில்லாதவர்கள், மனைவியோடு சண்டையிட்டவர்கள், காவலுக்கு அகப்படாமல் தப்பித்த கொள்ளையர்கள், ஊர் நிலத்தை தன் பெயரில் எழுதிக் கொண்ட பக்திமான்கள் இப்படிக் குவிந்த நிதிதான் கோயில் சொத்தாயிற்று. இதனால் கோயில் சொத்து குல விலாசம் என்று பல பெயர் தெரியலாயிற்று. கோயிற் பூனைகள் என்றே எப்படி கொள்ளையடித்தார்கள் என்ற நூலை கோவை கிழார் C M இராமச்சந்திரன் செட்டியார் ஒரு நூலே எழுதினார். அந்த உத்தமர் வடித்த ரத்தக் கண்ணீர் எழுத்தை ஈரமாக்குவது.