தமிழ் வளர்ச்சித் துறை சென்னை மாவட்டம் திருக்குறள் திருப்பணித் திட்டம் தொடக்க விழா பயிலரங்கம் -1 நாள் : 11.09.2025 (வியாழக் கிழமை) திருவள்ளுவராண்டு 2056 / ஆவணி-26 நேரம் : முற்பகல் 10.00 மணி இடம் : சென்னை மகளிர் மேல்நிலைப்பள்ளி, பெரம்பூர் நிகழ்ச்சி நிரல் தமிழ்த்தாய் வாழ்த்து வரவேற்புரை முனைவர் ந.அருள் இயக்குநர்.தமிழ் வளர்ச்சித் துறை தலைமையுரை திரு.எம்.பிருத்திவிராஜ், இ.ஆப, துணை ஆணையர் (கல்வி) (மு.கூ.பொ.). பெருநகர சென்னை மாநகராட்சி கருத்துரை திருமதி ஜே. வசந்தி, கல்வி அலுவலர் I. ...
POST: 2025-09-11T06:35:31+05:30
நூல் வெளியீட்டு விழா பேரா. பொன் சுப்பையா அவர்களின் செவ்வியல் மற்றும் தற்காலத் தமிழ்த் தனிவினை அகராதி விரிவானதும் நேர்த்தியானதும் (தமிழ் - தமிழ் - ஆங்கிலம் ) அழைப்பிதழ் நாள்: 09.09.2025 பிற்பகல் 4 மணி நிகழிடம் : மாநாட்டுக் கூடம், அண்ணா நூற்றாண்டு நூலக வளாகம், கோட்டூர்புரம், சென்னை 600 085. வரவேற்புரை முனைவர் பெ. செல்வக்குமார் இணைப் பேராசிரியர், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம். தலைமை திரு. ஆர். பாலகிருஷ்ணன் இ.ஆ.ப.(ப.நி.) தலைவர், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம். வெளியீடு பேராசிரியர் இ.சுந்தரமூர ...
POST: 2025-09-10T09:06:37+05:30
செல்லிடத்துக் காப்பான் சினங்காப்பான் எனத் தொடங்கும் அருங்குறள் எண் முந்நூற்று ஒன்று; சொல்லெடுத்துக் கருத்துப்பிழிந்து வெல்லச் சொற்களை அள்ளி வழங்கும் உலகத்தமிழிதழ் முந்நூற்று ஒன்று
POST: 2025-09-09T10:09:03+05:30
செய்திக்குறிப்பு தமிழ் வளர்ச்சித் துறையின் 2022–2023ஆம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கையின்போது, மாண்புமிகு அமைச்சர் (தொழில் துறை) அவர்களால் சட்டமன்றப் பேரவையில் 19.04.2022ஆம் நாளன்று பின்வரும் அறிவிப்பு வெளியிடப்பட்டது. “ஊடகங்களில் தமிழ்ச் செய்திகளைத் தவறில்லாமலும், அழகாகவும், சரியாகவும் உச்சரிக்கும் செய்தி வாசிப்பாளர்கள், நேர்காணல் செய்பவர்கள் மற்றும் நிகழ்ச்சித் தொகுப்பாளர்களை ஊக்குவிக்கும் வகையில் ஆண்டுக்கு நான்கு பேரைத் தெரிவு செய்து அவர்களை பாராட்டி ஒவ்வொருவருக்கும் ரூ.25,000/- பரிசுத் தொக ...
POST: 2025-09-08T10:27:45+05:30
ஆட்சி மொழி பயிலரங்கம் மற்றும் கருத்தரங்கம் இராணிப்பேட்டை மாவட்டத்தில் 4.9.25 வியாழக்கிழமை நண்பகல் 12 மணி அளவில் தமிழ் வளர்ச்சித்துறை சார்பாக துணை இயக்குநர் திருமதி ஜெயஜோதியின் ஒருங்கிணைப்பில் நடைபெற்ற பயிலரங்கத்தில் கலந்துகொண்டு விழாச் சிறப்புரையாற்றி பங்கு கொண்ட அலுவல் பணியாளர்களுக்கு சான்றுகளை வழங்கி மகிழ்ந்தேன்.
POST: 2025-09-07T10:37:39+05:30
தமிழ் வளர்ச்சித் துறையின் கிருஷ்ணகிரி மற்றும் தருமபுரி அலுவலகங்கள் ஆய்வு 3.9.25 புதன்கிழமை அன்று மதியம் 2 மணியளவில் கிருஷ்ணகிரி ஆட்சியர் அலுவலத்தில் 2007 ஆம் ஆண்டு முதல் இயங்கி வரும் தமிழ் வளர்ச்சித் துறையின் உதவி இயக்குநர் அலுவலகத்தினையும் அவ்வண்ணமே மாலை 5 மணி அளவில் தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 1983 ஆம் ஆண்டு முதல் இயங்கி வரும் தமிழ் வளர்ச்சித் துறையின் உதவி இயக்குநர் அலுவலகத்தின் செயலாக்கப் பணிகளோடு பல்வேறு அலுவல் காப்புப் பதிவேடுகளையும் ஆய்வு செய்தேன். கிருஷ்ணகிரி மற்றும் தர ...
POST: 2025-09-06T11:08:17+05:30
பண்ணைத் தமிழ்ச் சங்கம் ஐம்பெரும் விழா 42 ஆம் ஆண்டுத் தொடக்க விழா தமிழ்ச் சான்றோர்க்கு விருது விழா கவிதைத் திருவிழா நூல் வெளியீட்டு விழா சிறந்த கவிதை நூல் பரிசளிப்பு விழா நாள் : 6 9 2025 - சனிக்கிழமை மாலை 2.30 இடம் : அண்ணா நூற்றாண்டு நூலகம் இரண்டாம் மாடி சிறப்பு விருந்தினர்கள் : மாண்பமை நீதியரசர் இராஜேஸ்வரன் வள்ளல்நேசன் மருத்துவர் ஜெயராஜமூர்த்தி முனைவர் ஒளவை ந அருள் இயக்குநர் - தமிழ் வளர்ச்சித்துறை பேராசிரியர் முனைவர் ச சுப்பிரமணியன் திருச்சி பேராசிரியர் ...
POST: 2025-09-05T09:23:16+05:30
இன்று உரைவேந்தர் சித்தாந்த கலாநிதி ஔவை துரைசாமி அவர்களின் 123 ஆம் பிறந்த நாளாகும்.(5.9.25) உரைவேந்தரைக் குறித்து நாவேந்தர் ஔவை நடராசன் அவர்கள் எழுதிய குறிப்பினை மறவாமல் பதிவு செய்கிறேன் ஆசிரியர் தினம் =============== நூலறி புலவ! ஆசிரியர் பெரும! ============================= இன்று என் தந்தையைப் பற்றிய நினைவு பற்றி படருகிறது. 123 ஆண்டுகளுக்கு முன்னர், ஔவையார் குப்பம் என்ற சிற்றூரில் பிறந்த திரு.துரைசாமி, திரு.மயிலாசனம், திரு.முத்துகுமாரசாமி திரு.சுப்பிரமணியன் ஆகிய மூவருக்குப் பின் பிறந் ...
POST: 2025-09-04T08:42:16+05:30
ஆய்வும் -செயலாக்கமும் 2.9.2025 செவ்வாய்க்கிழமை மாலை 5 மணியளவில் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் இயக்கக அலுவலகத்தில் தமிழ் வளர்ச்சித் துறையால் ஆட்சி மொழித்திட்ட செயலாக்கம் தொடர்பான ஆய்வின் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட ஆய்வறிக்கை காவல்துறை தலைமை இயக்குநர் திருமதி சீமா அகர்வால் இ கா ப அவர்களிடம் வழங்கப்பட்டதோடு அவர்களின் முன்னிலையில் அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு ஆட்சி மொழித் திட்டச் செயலாக்கம் குறித்து உரையாற்றினேன்.
POST: 2025-09-03T09:06:31+05:30
சுடர்த்தொடித் கோமகள்... எனத் தொடங்கும் பரணரின் நற்றிணைப் பாடல் எண் முந்நூறு சுடர்தமிழ்க் கருத்துகளைப் பக்கந்தோறும் பரப்பி வரும் உலகத்தமிழிதழ் வரிசை முந்நூறு
