POST: 2025-09-02T10:06:47+05:30

பறவைகள் பலவிதம் 23.8.25 சனிக்கிழமையன்று உதகமண்டலத்தின் மலையோரத்தில் எழிலார்ந்த சோலையில் பல வண்ணக்கிளிகள் புடை சூழ என்னருகில் விரிந்து பறந்து வந்த போது வியப்பால் விழிகள் விரிந்தன... எவ்வண்ணமாய்ப் பறக்கும் எப்பறவையாயினும் உன் ஐவண்ணத்துள்ளே அடங்கும் மெய் வண்ணம் என்ற அழகர் கிள்ளை விடு தூது வரிகளைப் பாடி மகிழ்ந்தேன்.

POST: 2025-09-01T10:57:33+05:30

முத்தமிழ் திருவிழா உதகையிலுள்ள எஸ் ஆர் வி எஸ் பள்ளி வளாகத்தில் 23.5.25 சனிக்கிழமை நண்பகல் 12 மணி அளவில் தமிழியக்கம் சார்பாக நடைபெற்ற முத்தமிழ் விழாவில் தமிழ் ஆர்வலர்களுக்கும் போட்டிகளில் பரிசு பெற்ற மாணவச் செல்வங்களுக்கும் விருதுகளும் பரிசுகளும் வழங்கி உரையாற்றி மகிழ்ந்தேன்.

POST: 2025-08-31T11:51:48+05:30

தமிழ் வளர்ச்சித் துறை உதகமண்டல அலுவலக ஆய்வு கடந்த சனிக்கிழமை (23.8.25) உதகமண்டல ஆட்சியர் அலுவலகத்தில் தரைத்தளத்தில் இயங்கி வரும் தமிழ் வளர்ச்சித் துறை அலுவலகத்தை முதன்முறையாக ஆய்வு செய்தேன் கண்காணிப்பாளர் திருமதி வசந்தகுமாரி தட்டச்சர் முத்துச்செல்வி நாமக்கல் மாவட்ட உதவியாளர் திரு லியாக்கத் மற்றும் ஓட்டுநர் செந்தில் ஒருங்கே அலுவலக வாயிலில் ஒளிப்படம் எடுத்துக்கொண்டோம் .

POST: 2025-08-30T08:40:55+05:30

நல்லது செய்தல் ஆற்றீர்! உலகத்தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தின் சார்பாக நடைபெறும் அறிஞர்கள் அவையத்தின் நான்காம் தொடர் நிகழ்வில் 29.8.25 வெள்ளிக்கிழமையன்று பங்கு கொண்டு பல்வேறு அறிஞர்கள் பயன்பாட்டுத் தமிழியல் குறித்து நேற்று இன்று நாளை நடந்த,நடந்து கொண்டிருக்கிற, நடக்கப்போகிற நிகழ்வுகளை மிகச் சிறப்பாக உரையாற்றினார்கள். ஒரு நாள் முழுவதும் உற்றுக் கேட்பதற்கு மிகப்பெரும் வாய்ப்பு கிடைக்கப்பெற்றது. நிகழ்வின்போது வெவ்வேறு தருணங்களில் எடுத்த ஒளிப்படம் இணைக்கப்பட்டுள்ளது.

POST: 2025-08-29T07:32:42+05:30

மங்கலம் என்ப மனமாட்சி உண்ணும் சோறும், பருகும் நீரும், தின்னும் வெற்றிலையும் பாரதி என்னும் படிக்கே ஆட்பட்டு அப்பாவால் பாராட்டப்பட்ட நினைவில் வாழ்ந்த சொல்லின் செல்வர் பாரதி சுராஜ்(1928-2018) அவர்களின் திருமகன் இராமசாமி சுராஜ் திருமதி பூமா இணையரின் செல்வ மகள் மருத்துவர் அம்ருதா / மருத்துவர் கேசவ் திருமணம் 28.08.2025, வியாழக்கிழமை, காலை 9.00 மணியளவில் கலந்து கொண்டு வாழ்த்தினேன். மங்கல நிகழ்வில் பாரதி சுராஜ் அவர்களின் அருமை தங்கையும், ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியரும், இனிய நண்பர் வழக்கறிஞர் சதிஷ ...

POST: 2025-08-28T08:59:45+05:30

சென்னைப் பல்கலைக்கழகம் தமிழ் இலக்கியத்துறை மற்றும் தமிழ் வளர்ச்சித் துறையின் நிதிநல்கையுடன் நடத்தும் தமிழ் வார விழா ஒருநாள் ஆய்வரங்கம் தமிழ்நாடு அரசு தமிழ் இலக்கியம் போற்றுவோம் - பாவேந்தர் பாரதிதாசன் சிந்தனைகள் தொடக்க விழா வரவேற்பு : முனைவர் கோ. பழனி பேராசிரியர் - தலைவர், தமிழ் இலக்கியத்துறை தலைமை : முனைவர் எஸ். ஆம்ஸ்ட்ராங் பேராசிரியர் - தலைவர், ஆங்கிலத் துறை உறுப்பினர் ஆட்சி மன்றக் குழு, துணைவேந்தர் பொறுப்புக் குழு சென்னைப் பல்கலைக்கழகம் சிறப்புரை : வழக்குரைஞர் அ. அருள்மொழ ...

POST: 2025-08-27T07:32:02+05:30

உருகெழு யானை உடைகோ(டு) அன்ன... எனத் தொடங்கும் வடம வண்ணக்கன் பேரிசாத்தனாரின் நற்றிணைப் பாடல் இருநூற்றுத் தொண்ணூற்(று) ஒன்பது திருஎழில் கட்டுரைகளைத் தாங்கி வரும் உலகத்தமிழிதழ் இருநூற்றுத் தொண்ணூற்(று) ஒன்பது

POST: 2025-08-26T07:49:15+05:30

செய்தி வெளியீடு எண்: 1987 நாள் : 25.08.2025 செய்தி வெளியீடு திரு.வி. கலியாணசுந்தரனார் அவர்களின் 142ஆவது பிறந்த நாள் திருவுருவச்சிலைக்கு மாலை அணிவித்து மலர் வணக்கம் செய்தல் தமிழ் உரைநடையைப் பாமரரும் படிக்கும் வண்ணம் எளிமைப்படுத்தி, எழிலூட்டி வழங்கியவரும் சொற்களின் பொருளில் புதுமை கண்டவரும் தமிழ்த்தென்றல் என அனைவராலும் போற்றப்படுபவருமான திரு.வி.கலியாணசுந்தரனார் அவர்களின் 142ஆம் பிறந்தநாள் 26.8.2025 செவ்வாய்க்கிழமையன்று அமைகிறது. திரு.வி.க (திருவாரூர் விருத்தாசலம் கலியாணசுந்தரனார்) அவர்கள ...

POST: 2025-08-25T11:21:08+05:30

தமிழ் வளர்ச்சித் துறை மற்றும் குமரகுரு பன்முகக் கலை அறிவியல் கல்லூரி இணைந்து நடத்தும் தமிழாசிரியர் - மாணவர் இலக்கிய, இலக்கணப் பயிற்சிப் பட்டறை 22.08.2025 | ~ 10.00 மணி சாராபாய் கலாம் திரையரங்கம் குமரகுரு வளாகம் அழைப்பிதழ் தொடக்கவிழா வரவேற்புரை : முனைவர் இரா. அன்பரசி துணை இயக்குநர் தமிழ் வளர்ச்சித்துறை. கோயம்புத்தூர் முன்னிலையுரை: தீபேஷ் சந்திரசேகரன் முதல்வர் குமரகுரு பன்முகக் கலை அறிவியல் கல்லூரி கோயம்புத்தூர் தலைமையுரை திரு. பி.கே.கிருஷ்ணராஜ : வாணவராயர் தலைவர், கும ...

POST: 2025-08-24T11:01:11+05:30

ஆய்வும் -செயலாக்கமும் ஆட்சி மொழித் திட்ட செயலாக்க ஆய்வு மேற்கொண்டு தயாரிக்கப்பட்ட ஆய்வறிக்கைகளை 19.8.2025 செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் மதுரை மாநகராட்சி அலுவலகம் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மதுரை காவல் ஆணையர் அலுவலகம். ஆகிய மூன்று அலுவலகங்களிலும் தொடர்ந்து தமிழ் வளர்ச்சித் துறையால் ஆட்சி மொழித்திட்ட செயலாக்க ஆய்வின் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட ஆய்வறிக்கையினை தத்தம் உயர் அலுவலர்களிடம் வழங்கியதோடு அவர்களின் முன்னிலையில் அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு ஆட்சி மொழித் திட் ...