8b448c33-93c9-4799-b56c-4120e67f7ae0

மேகங்களையெல்லாம்தொட்டு விட ஆசை

கோவையைத் தாண்டி மலையும் மலை சார்ந்த குறிஞ்சிப் பகுதியில் மகத்தான முல்லை நிலப்பரப்பில் மயக்கும் பொன்மாலைப் பொழுதில்
சென்னை கிறித்துவ மேனிலைப் பள்ளியில் ஆறாம் வகுப்பு முதல் இணைந்து பயின்று பிறகு சென்னை மாநிலக் கல்லூரி மற்றும் சென்னைப் பல்கலைக்கழகத்தில் வெவ்வேறு பாடப்பிரிவுகளில் பயின்றாலும் ஆழ்ந்த நட்பு பாராட்டியதோடு அரிமாக்குருளைகளாகத் தொண்டு நிறுவனத்தில் இணைந்து
பணியாற்றிய இனிய நண்பர் டெமிட்ரியஸ் ஐசக் அவர்களை 48 ஆண்டுக் காலமாக அறிந்திருந்தாலும் வாழ்வில் சிறந்த நான்கு மணி நேரத்தினை ஒதுக்கிக்கொண்டு நாங்கள் இருவரும் அவரின் நீண்டு நெடிய பண்ணை இல்லத்தில் 21.2.25 வெள்ளிக்கிழமையன்று சந்தித்து மகிழ்ந்து அளவளாவினோம்.

தன்னந்தனியாக தன்னுடைய நுட்பமான அறிவு நலத்தால் யாரும் எளிதில் செய்ய முடியாத பணியினை தன்னுடைய செம்மாந்த பணியாக அமைத்துக் கொண்டு உலகம் சுற்றும் வாலிபராக வலம் வருவதைக் கேட்டு மகிழ்ந்தேன்.

அவரைச் சுற்றி மனிதர்களை விட பண்ணையைக் காக்கும் நான்கு கால் உயர் குடி விலங்குகள் நாள்தோறும் அவர் முன் நடனமாடும் வண்ண கோல மயில்கள்
துள்ளி ஓடும் முயல்கள் அங்கிங்கெனாதபடி பல நாட்டைச் சார்ந்த பலவண்ணக் கோழிகள், பறவைகள்
தொட்டுவிடும் தூரத்தில் யானைகள் என நிமிர்ந்து நிற்கும் நண்பரைப்பாராட்டி மகிழ்ந்தேன்.

பல ஆண்டுகள் சந்திக்காமல் இருந்தாலும் புணர்ச்சி பழகுதல் வேண்டா உணர்ச்சிதான் நட்பாங் கிழமை தரும் என்ற அருங்குறள் தொடர்களுக்கு ஏற்ப நட்பு பாராட்டிய
நண்பரைக் கண்டு திரும்பி வரும் பொழுது தான் தலைப்பில் சொன்ன வரிகள் நினைவில் வந்து மோதியது.

WhatsApp Image 2025-03-02 at 9.57.52 AM

ஒளிப்பட உலா

ஒய் எம் சி ஏ பட்டிமன்ற நிகழ்ச்சியில் 25.2.25 செவ்வாய்க்கிழமை மாலை 6:30 மணி அளவில் கலந்து கொண்டு தலைமை தாங்கிய நிகழ்வின் போது

bad21da9-31da-4358-8f30-9124e84ced1d

எப்படி மறப்பேன்!

தமிழ் வளர்ச்சித் துறையில் இயக்குநராகப்பணியில் சேர்ந்தவுடன் பல கோப்புகளை நுணுகிப் படிக்கும் வாய்ப்பு கிடைக்கப்பெற்றது.

அப்பொழுது ஒரு கோப்புக்கு முடிவு சொல்லும் பொழுது எந்நிலையிலும் ஓய்வு பெற இருக்கும் அலுவலர்களுக்கு நிலுவை ஏதுமின்றி குறைகள் நேராதபடி ஓய்வினை மகிழ்ச்சியாக துய்ப்பதற்கு ஏதுவாக கோப்புகளை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தினேன். அவ்வகையில் நாளது வரை அதில் தொய்வில்லை.

ஆனால் விதிவிலக்காக ஒரு கோப்பு மட்டும் சில ஆண்டுகளாக முடிவு எட்டாமல் இருந்ததை உடனுக்குடன் அதற்குத் தீர்வுதந்து அந்த அலுவலருக்கு கடந்த மூன்று திங்களுக்கு மேல் ஓய்வூதியம் பெறுவதற்கு அனைத்து உதவிகளையும் செய்ததோடு அவர் எல்லையில்லாத மகிழ்ச்சியில் துள்ளி என்னை ஆரத்தழுவி நீண்ட நேரம் தான் கலந்து கொண்ட பல கூட்டங்களையும் அலுவலால் தான் செய்த சாதனைகளையும் சுட்டிக்காட்டினார்.

அப்பெருந்தகை 25.2.25 செவ்வாய்க்கிழமையன்று மதியம் மறைந்தார் என்ற செய்தி வந்ததும் துயரில் ஆழ்ந்தேன்.

அவரை நான் எப்பொழுதும் அண்ணா என்று சொல்லி தான் பேசுவேன்.

அவருக்கு ஓய்வூதியம் கிடைத்த பிறகு சிரித்துக் கொண்டே சொன்னேன் ஊருக்கே தெரிந்த வசனத்தை சொல்லுகிறேன் என்று வருத்தப்படாதீர்கள் குமார் என்றேன்.

இன்று எங்களை எல்லோரையும் வருத்தத்தில் ஆழ்த்திவிட்டு தமிழ் வளர்ச்சித் துறையின் ஓய்வு பெற்ற உதவி இயக்குநர் திரு. குமார் வானில் கலந்தார்.

அவர் குடும்பத்தாருக்கு ஆறுதல் எப்படி சொல்வேன்?

துயரத்துடன்

அருள்

835ecf33-bf07-4b0a-b4af-e6c7e1802284

ஊக்கத்தொகை…

சென்னையை அடுத்த மடிப்பாக்கம் – புழுதிவாக்கம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மேல்நிலைப் பள்ளியின் 35-ஆவது ஆண்டு விழாவில் பள்ளியின் 10 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெற்று கல்வி ஊக்கத்தொகை பெற்ற மாணவ, மாணவிகளுடன் தமிழ் வளர்ச்சித் துறை துறை இயக்குநர் ஔவை ந.அருள், ஆன்மிக சொற்பொழிவாளர் நாகை முகுந்தன், பிரின்ஸ் கல்விக் குழுமங்களின் தலைவர் கே.வாசுதேவன், துணைத் தலைவர்கள் வா.விஷ்ணு கார்த்திக், வா.பிரசன்ன வெங்கடேஷ், செயலர் வ.ரஞ்சனி வாசுதேவன், ஸ்ரீ வெங்கடேஸ்வரா மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியை கி.சொர்ணலதா உள்ளிட்டோர்.

Capture

உலகத்தமிழ் இதழ் – 273

எண்ணக் குறைபடாச் செல்வமும்
இற்பிறப்பும்
எனத் தொடங்கும் முன்றுறை அரையனாரின் பழமொழி நானூற்றுப் பாடல் எண்
இருநூற்(று) எழுபத்து மூன்று

வண்ணம் மாறாமல் பண்ணார் பனுவலாய்ப் புதனில் மலரும் உலகத்தமிழிதழ் இருநூற்(று) எழுபத்து மூன்று