தலைமைச் செயலகத்தில் மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர்திரு. மு. பெ. சாமிநாதன் அவர்கள் தலைமையில் தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக் கழகம் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் 24.12.24 செவ்வாய்க்கிழமையன்று காலை 11 மணியளவில் தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை செயலாளர் திரு. வே. ராஜாராமன், இ.ஆ.ப.,தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் முனைவர் ந.அருள்,தமிழ்ப் பல்கலைக் கழகத்தின் துணை வேந்தர் (பொறுப்பு), பதிவாளர் மற்றும் பேராசிரியர்கள் மற்ற ...
மொழியாக்க விண்மீன்
மொழியாக்க வானின் விண்மீன் மறைந்ததே! திரு. பொன் சின்னதம்பி முருகேசன்(2.7.1949 - 02.10.2024) அரிய ஆங்கில நூல்களை அருந்தமிழுக்கு ஆக்கி உரிய தமிழ்த் தொண்டால் உயர்ந்த பெருந்தகை முருகேசனை இழந்து விட்டோமே! உறங்கா விழிகள்ஒழியா உழைப்பு மிகுதுயர் எந்தன்உள்ளம் மேவிடச்செய்தாய் நண்பஆழ்கடல் அமிழ்ந்ததே! தமிழ்நாடு அரசுப் பணியில் பணியாற்றி 2006 ஆம் ஆண்டு ஓய்வு பெற்ற பிறகு தான் கற்ற ஆங்கிலத்தையும் தான் பெற்ற அருந்தமிழையும் இணைத்து அறிவியல், மெய்யியல் பொருளியல் துறைகளிலுள்ள ஆங்கில நூல்களை தமிழா ...
தமிழ்ப்போராளி பேரா.சி.இலக்குவனார் நினைவேந்தல்
வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான்உறையும் தெய்வத்துள் வைக்கப் படும்.(திருவள்ளுவர், திருக்குறள் ௫௰ – 50) தமிழ்க்காப்புக் கழகம் இலக்குவனார் இலக்கிய இணையம் தமிழ்ப்போராளி பேரா.சி.இலக்குவனார் நினைவேந்தல் இணைய உரையரங்கம் ஆவணி 16, 2055 / 01.09.2024 ஞாயிறு காலை 10.00 கூட்ட எண்: 864 136 8094 ; புகு எண்: 12345 அணுக்கிக்கூட்ட இணைப்பு https://us02web.zoom.us/j/8641368094?pwd=dENwVFBIOTNncGsrcENUSWJxbVZHZz09 தலைமை: இலக்குவனார் திருவள்ளுவன் வரவேற்புரை: கவிஞர் தமிழ்க்காதல ...
தெய்வத் திருமதி. சகுந்தலாம்மாள் நினைவு14-ஆம் ஆண்டு தமிழ் வளர்ச்சிப் போட்டிகள்பரிசளிப்பு விழா!
14 ஆம் ஆண்டு விழா SHREE NIKETAN Indian Roots. Global Outlook CBSE & Matric Schools நாள்: 03.08.2024 சனிக்கிழமை காலை 9.00 இடம் : ஸ்ரீ நிகேதன் பதின்ம மேல்நிலைப் பள்ளி, திருவள்ளூர். சிறப்பு விருந்தினர்கள் : முனைவர் ந. அருள் அவர்கள்,தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர், தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநரகம்,தமிழ்நாடு அரசு . முனைவர் ம.எஸ்தர் ஜெகதீசுவரி அவர்கள்பேராசிரியர், கவிஞர், எழுத்தாளர். சிறப்பு விருந்தினர்களையும், நடுவர்களையும், மாணவச் செல்வங்களையும், ஆசிரியப் பெருமக்களையும், தமிழ் ...
அன்றாடம் அப்பாவுடன்
கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்பு தமிழ் வளர்ச்சி மற்றும் கலைப் பண்பாட்டுத் துறையின்அரசு செயலாளராக(1984 -1992)அப்பா பணியாற்றியக் காலத்தில் இலக்கிய நிகழ்வுகளுக்குமதுரை வந்தால் தங்குமிடம் ஆரத்தி உணவு விடுதியாகும். அந்நாட்களில்சென்னையிலிருந்துஇரவு சரியாக எட்டு மணிக்குகே பி போக்குவரத்துப் பேருந்தில் புறப்பட்டுச் சரியாக காலை 5 மணிக்கு மதுரை வந்து சேரும் இடமாகும்.. அவ்விடுதியை மீண்டும் காண வேண்டும் என்று நினைந்து 6.7.24 சனிக்கிழமையன்று சென்று பார்த்தேன் …பல மாற்றங்களைக் கண்டு வியந்தேன்.. நாள் ...
காணக்கிடைக்காத கலை வண்ணக் கற்கோயில்
இந்தியத் தலைநகரிலுள்ள தில்லியில் மாபெரும் வளாகமாக கண்ணையும் எண்ணங்களையும் கவரும் வகையில் அக்ஷர்தம் என்ற வனப்பான பெரு மாளிகையினை 08.05.2024 புதன்கிழமை கண்டு மகிழ்ந்து வியந்த கவினார்ந்த கருவூலத்தை பெருநிதிச் செல்வத்தால் எழுப்பப்பட்டதை என் உள்ளத்து உணர்வின் நளினங்களையெல்லாம் வெண்தாழை மடலில் செம்பஞ்சுக் குழம்பால் குழைத்து எழுதுவதைப் போல முகநூலில் வரைவதை எண்ணி மகிழ்கிறேன். இந்திய நாட்டின் நீண்ட இதிகாச மரபினுடைய எண்ணற்ற அழகுகளைக் கொண்ட பெருந்திட்டத் திருக்கோயிலினை காணும் போது மயில் ஒன்று தன் வண்ணம ...







