Capture

கலைச்சொல் கோயில் கட்டுவோம்!

ஒளவை அருள் தமிழ் சொல்வளம் மிக்க மொழி. வழக்கில் உள்ள சொற்கள் சில ஆயிரமே என்றாலும், அகராதியில் உள்ள சொற்கள் இலட்சத்தைக் கடந்தவை. அகராதியில் இல்லாத பலநூறு சொற்கள் மக்கள் வழக்கில் உள்ளன. புதிய சொற்களைப் படைக்க முயலும்போது, முதலில் பழைய சொற்களைத் தேடிப் பாா்க்க வேண்டும். ஒரே சொல்லாகக் கிடைக்காவிட்டால், இணைப்புச் சொற்களை வைத்துக் கொள்ளலாம். அப்படியும் முடியாவிட்டால்தான், புதிய சொல்லைப் படைக்க வேண்டும். எந்த முயற்சியுமே செய்யாமல், ‘இதற்கு என்ன தமிழ்’ என்று சிலா் அறைகூவல் விடுக்கிறாா்கள். ...

Capture

தேமதுரத் தமிழோசைத் திருவிழா!

ஒளவை அருள் ஆங்கில (அலோபதி ) மருத்துவ முறை மிகவும் வளர்ந்தது என்பதாகப் பலரும் கருதுகின்றனர். உண்மையில், 300 ஆண்டுகளுக்கு முன்னர் ஆங்கில மருத்துவ முறை இல்லை; மிக வயதான சிலர் கூறும் பொருள்களை மருந்து என அந்தக் காலத்தில் உண்டு வந்தனர். இதை மேலை நாடுகளில் பழைய முறை என்று கூறினர். 1806 - இல் ஹனிமன் என்பவர் ஹோமியோபதி மருத்துவ முறையைக் கண்டுபிடித்தார். பின்னர்தான் பழைய மருத்துவமுறைக்கு அலோபதி எனப் பெயர் வந்தது. ஆனால், தமிழக சித்த மருத்துவம் ஈராயிரம் ஆண்டுகள் முன்னரே சிறந்து விளங்கியது. சங் ...

Capture

மனித சக்தியைப் பாடிய பாவேந்தர்!

ஒளவை அருள் உலகில் சிலா் கவிஞா்களாகவே பிறக்கிறாா்கள்; சிலா் கவிஞா்களாக ஆக்கப்படுகிறாா்கள்; சிலா் கவிஞா்களாக விளம்பரப்படுத்தப்படுகிறாா்கள். புரட்சிக் கவிஞா் பாரதிதாசன் முதல் வகையைச் சோ்ந்தவா். பாரதியாா் என்னும் வேரிலிருந்து புறப்பட்ட ஆலமரமாக விளங்கியவா் பாரதிதாசன். ஆனால், பாரதிதாசன் தமது தனிப்பட்ட ஆளுமை காரணமாக வித்தியாசமாக கிளை விரித்ததோடு தாமே தமது எண்ணற்ற விழுதுகளையும் தமிழ் மண்ணில் விளைத்து மாபெரும் கருத்துப் புரட்சிக்குக் கால்கோள் இட்டவா். அவரது புகழ் வட்டம் தேசிய இயக்கத்தில் தொடங் ...

Capture

நாட்டுடைமை என்னும் அறிவுத் திருப்பணி!

ஒளவை அருள் அறிவு உலகப் பொது என்பார்கள். ஆனால், அறிஞன் உலகப் பொதுவல்ல என்பது உலக நடைமுறை. ஓர் அறிஞரின் அறிவின் பேருழைப்பால் விளைகின்ற நற்கனிகளாம் நூற்செல்வங்கள், அவருக்குப் பின்னர் சிலர் கைகளில் மட்டும் சென்று தங்கிவிடாமல், நாட்டின் கடைக்கோடித் தமிழனுக்கும் சென்று சேர்க்கின்ற அரும்பணிக்குப் பெயரே நாட்டுடைமை என்பது. மறைந்த படைப்பாளிகளின் பதிப்புரிமை அவர்களுடைய குடும்பத்தினர், மரபு வழியினர், பதிப்பகத்தார் ஆகியோரின் நிலையான சொத்தாகவே நிலவி வருகிறது. அறிவென்பது பொதுவாயினும், மரபுரிமை ஒன ...

1735439228796

நூறாண்டாகப் புகழ் மணக்கும் நற்றமிழறிஞர்!

ஔவை அருள் செந்தமிழுக்கு வாய்த்த இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற தமிழ்ப் பெரும்புலமைச் சான்றோர்களின் வரிசையில், செந்தமிழ்ப் பெரும் புலவர் ந.ரா. முருகவேளுக்குப் பேரிடம் உண்டு. 'தொண்டை நன்னாடு சான்றோர் உடைத்து' என்னும் ஒளவை பிராட்டியின் வாக்கை மெய்ப்பிக்கும் வகையில் தொண்டை நாட்டுச் செல்வமெனப் புலவரேறு ந.ரா. முருகவேள் நந்திபுரம் கிராமத்தில், திரு. இராமசாமி முதலியாருக்கும், திருமதி. சிவகாமி அம்மையாருக்கும் இளைய மகனாக 17-11-1924-இல் பிறந்தார். பெற்றோர் இவருக்கு இட்ட பெயர், சௌந்தரராசன். தனித்த ...

Capture

உ.வே.சா.வையும் தமிழையும் பிரிக்க இயலாது!

ஔவை அருள் தமிழுக்கு இன்று உலகளாவிய போற்றுதலைப் பெற்றுத்தருவது சங்க இலக்கியமாகும். காலப்பழைமையும் கருத்துச்செழுமையும் சங்க இலக்கியத்தில் காணலாகும். "சங்கம் தழைக்கும் மதுரை' என்றும் தமிழையே "சங்கத்தமிழ்' என்றும் புலவர்கள் மொழிந்துள்ளனர். அத்தகைய சங்க இலக்கியங்கள் காலங்காலமாக, குறிப்பாக ஐரோப்பியர் வருகைக்கு முன்பு வரை பனை ஓலைகளால் செய்யப்பட்ட சுவடிகளில் எழுதப்பட்டுத் தேய்ந்தும், சிதைந்தும், ஒருபுறம் ஒடிந்தும் கட்டுக்கட்டாகக் கிடந்தன. அந்த எழுத்துகளை இன்று படிப்பது எளிதல்ல. ஒரு ...

dinamani_2024-06_fcfe4864-4918-4c8f-b173-86956d72a947_20231126073L

படுகுழியில் பல்கலைக்கழகங்கள்

ஔவை அருள் ஆங்கில (அலோபதி ) மருத்துவ முறை மிகவும் வளர்ந்தது என்பதாகப் பலரும் கருதுகின்றனர். உண்மையில், 300 ஆண்டுகளுக்கு முன்னர் ஆங்கில மருத்துவ முறை இல்லை; மிக வயதான சிலர் கூறும் பொருள்களை மருந்து என அந்தக் காலத்தில் உண்டு வந்தனர். இதை மேலை நாடுகளில் பழைய முறை என்று கூறினர். 1806 - இல் ஹனிமன் என்பவர் ஹோமியோபதி மருத்துவ முறையைக் கண்டுபிடித்தார். பின்னர்தான் பழைய மருத்துவமுறைக்கு அலோபதி எனப் பெயர் வந்தது. ஆனால், தமிழக சித்த மருத்துவம் ஈராயிரம் ஆண்டுகள் முன்னரே சிறந்து விளங்கியது. சங்க ...

ஒளவையின் தமிழமுது

தினமணி பக்கம் எண் : 15 10.02.2025 ஒளவையின் தமிழமுது- ஒளவை அருள்; பக். 390; ஸ்ரீராம் பாரதி கலை இலக்கியக் கழகம்; சென்னை-18; 044-43418700. தமிழக அரசின் தமிழ் வளர்ச்சி மற்றும் கலாசாரத் துறை முன்னாள் செயலர் ஒளவை நடராசன் பல்வேறு நூல்களுக்கு எழுதிய அணிந்துரைகளின் தொகுப்பே இந்நூல். தமிழ் இலக்கண இலக்கிய மரபில் நூலின் புறத்துறுப்பாகக் கருதப்படும் பாயிரம். முன்னுரை, அணிந்துரைகளுக்கு இன்றியமையாத இடம் உண்டு எனக் கூறும் நூலின் தொகுப்பாசிரியர், தன் தந்தை ஆயிரத்துக்கும் மேற்பட்ட நூல்களுக்கு முன்ன ...

மேலாண்மையின் போக்கும் நோக்கும்!

தினமணி பக்கம் 6 26.2.2025 புதன்கிழமை மேலாண்மையின் போக்கும் நோக்கும்! அரசாளும் முறையை ஆங்கிலேயர் வகுத்தபோது ஆளப்படும் மக்களுக்கு இடர் அமையாத வண்ணம், கால தாமதம் ஏற்பட்டாலும் முடிந்த வரை எல்லா நிலைகளிலும் அலுவலரமைப்பைக் கொண்டு உதவும் வழிமுறையை வகுக்க வேண்டுமென்று கருதி ஆட்சிநெறிக்கு விதிமுறைகளை அமைத்தனர். மக்கள்தொகை பெருகப் பெருக துறைகளும், பிரிவுகளும், விதிமுறைகளும் அளவின்றிப் பெருகின. காலப்போக்கில் விதிமுறைகள் என்ற பெரிய வலைக்குள் அகப்பட்டு ஆட்சியாளர்களும் மக்களும் சிக்கித் தவித்து உழல்வத ...