POST: 2023-06-13T09:50:33+05:30

நெகிழ்வின் மகிழ்வில். சில ஆண்டுகளுக்கு முன் என் பெற்றோர் இணைந்து சென்று எந்தையார் சொற்பொழிவு ஆற்றிய நெல்லையிலுள்ள,முக்கூடல் அருகிலுள்ள மனுஜோதி ஆசிரமத்திற்கு அருட்பா நெறியில் நடக்கும் உறவுச்செம்மல் வழக்கறிஞர் கருணாநிதி சென்று வர வேண்டும் என்று சொன்னதின் பேரில் மற்றும் நிருவாகத் தலைவர் அவர்களது அழைப்பின் நேர்விலும் 7-6-2023, புதன்கிழமையன்று. தேனி மு. சுப்பிரமணி, தேனி ராஜதாசன் ஆகியோருடன் மனுஜோதி ஆசிரமம் சென்றோம். பெற்றோர் ஒளிப்படங்களை தொகுப்பாக திரட்டிய பெட்டகத்தை கண்டு ...

POST: 2023-06-12T09:02:27+05:30

அன்புப் பாலம் - மே மாத இதழ் - 2023 பக்கம் எண்கள் : 5,6,7... தமிழறிஞர் ஒளவை நடராசன் சிறப்பிதழ் எனது ஆசான் ஒளவை பாலம் கலியாணசுந்தரம் 1957ஆம் ஆண்டு உயர்நிலைப் பள்ளி படிப்பை முடித்தேன். பாளையங்கோட்டை தூய சவேரியார் கல்லூரியில் புதுமுக வகுப்பில் சேர்ந்தேன், இப்போதுள்ள பிளஸ் டூ, அப்போது கல்லூரியில் புதுமுக வகுப்பாக இருந்தது. தமிழ் மீது கொண்ட ஆர்வம் காரணமாக சிறப்புத் தமிழைப் பாடமாக எடுத்து படித்தேன். மறு ஆண்டு,பி.ஏ., தமிழ் வகுப்பில் சேர விரும்பினேன். அதற்கேற்றார் போல், அந்த ஆண்டு பி.ஏ ...

POST: 2023-06-11T18:46:27+05:30

தினசெய்தி - 11 6 2023 பக்கம் எண் - 4 : அருந்தமிழும் அன்றாட வழக்கும் – 165 மொழியாக்கம் - சறுக்குப் பாறை ! முனைவர் ஔவை அருள் தில்லிப் பல்கலைக்கழகத்தில் யான் 28 ஆண்டுகளுக்கு முன்பு வழங்கிய முனைவர் பட்ட ஆய்வின் பதினைந்தாம் பகுதி வருமாறு: Although each language has its own peculiarities that distinguishes it from every other language, all languages have certain qualities in common that make translation or transfer of meaning from one language to another language possible. Also, linguists ...

POST: 2023-06-10T09:49:21+05:30

தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் ( கலைப் பண்பாட்டு இயக்ககம் ) முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு கலைஞர் நூறு வரலாற்று நாடக விழா அழைப்பிதழ் நாள் : 10.06.2023 நேரம் : மாலை 5 30 மணி இடம்: ராஜா அண்ணாமலை, மன்றம், பாரிமுனை, சென்னை அன்புடையீர், தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் ( கலைப் பண்பாட்டு இயக்ககம் ) வரலாற்று நாடக விழா அழைப்பிதழ் வணக்கம். நிகழும் திருவள்ளுவர் ஆண்டு 2054 வைகாசித் திங்கள் 27ஆம் நாள் (10.06.2023) சனிக்கிழமை - சென்னை, பாரிமுனையில் உள்ள ராஜா அண்ண ...

POST: 2023-06-09T16:12:22+05:30

ஆதிபகவன் துணை நூற்றாண்டை நோக்கி .... திருவள்ளுவர் கழகம் - தென்காசி .. தெய்வப்புலவர் திருவள்ளுவர் பெருமானின் திருநாள் இக்கழகத்தின் 96 - ஆவது ஆண்டு நிறைவுத் திருக்குறள் விழா உரையரங்கம் 2054 வைகாசி 24,புதன் 7.6. 2023 - மாலை 5 00 மணி முதல் இரவு 9 00 மணி வரை உரைவேந்தர் பார்வையில் திருக்குறள் : டாக்டர் திரு ஒளவை மெய்கண்டான் முத்தமிழ் அறிஞர் பார்வையில் திருக்குறள் : பேரா .முனைவர் .திரு .ஒளவை அருள்

POST: 2023-06-08T07:20:42+05:30

பொதிகைத் தமிழ்ச் சங்கம் பொதிகைத் தமிழ் அறக்கட்டளை நடத்தும் மாபெரும் இலக்கியத் திருவிழா ‘கலைஞர் தமிழ் – 100’ பன்னாட்டுக் கருத்தரங்கம் – கவியரங்கம் அழைப்பிதழ் நாள்: 07.06.2023, புதன்கிழமை, இடம்: ஐயம்பெருமாள் ஹால் வ.உ.சி. மைதானம் பின்புறம், பாளையங்கோட்டை. மாலை3 மணி – தொடக்க நிகழ்வு தலைமையேற்று ஆய்வுக்கோவை வெளியிட்டு விருதுகள் வழங்குபவர் முனைவர் ந. அருள் அவர்கள் இயக்குநர், தமிழ் வளர்ச்சித் துறை, சென்னை.

POST: 2023-06-08T07:20:42+05:30

பொதிகைத் தமிழ்ச் சங்கம் பொதிகைத் தமிழ் அறக்கட்டளை நடத்தும் மாபெரும் இலக்கியத் திருவிழா ‘கலைஞர் தமிழ் – 100’ பன்னாட்டுக் கருத்தரங்கம் – கவியரங்கம் அழைப்பிதழ் நாள்: 07.06.2023, புதன்கிழமை, இடம்: ஐயம்பெருமாள் ஹால் வ.உ.சி. மைதானம் பின்புறம், பாளையங்கோட்டை. மாலை3 மணி – தொடக்க நிகழ்வு தலைமையேற்று ஆய்வுக்கோவை வெளியிட்டு விருதுகள் வழங்குபவர் முனைவர் ந. அருள் அவர்கள் இயக்குநர், தமிழ் வளர்ச்சித் துறை, சென்னை.

POST: 2023-06-07T07:55:20+05:30

இன மீன் ஆர்ந்த வெண் குருகு மிதித்தவறு நீர் நெய்தல் போல வாழாள் என்று தலைவனைத் தெருட்டும் நற்றிணைப் பாடல் எண் நூற்று எண்பத்து மூன்று இனமானம் காக்க எண்ணித் துணிந்த எண்ணற்ற படைப்புகளை ஏந்திவரும் உலகத்தமிழிதழ் அணி எண். நூற்று எண்பத்து மூன்று

POST: 2023-06-06T10:23:57+05:30

ஒளிப்பட உலா. முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு பிறந்த நாள் முன்னிட்டு நேற்று காலை (5.6.23) தமிழ் வளர்ச்சி இயக்ககத்தில் மலர் வணக்கம் நிகழ்வு நடைபெற்றது.

POST: 2023-06-05T08:42:55+05:30

அன்புப் பாலம் - மே மாத இதழ் தமிழறிஞர் ஒளவை நடராசன் சிறப்பிதழ் இமயமாய் உயர்ந்தோங்கிய எங்கள் அப்பா ! எங்களோடு எந்தக் கவலையும் இல்லாமல் சிந்தையார் எப்போதும் பரிவின் வடிவமாய் வாழ்ந்தவர் ! தன்னை நினையாமல், பிறர் நலம்; பிறர் வளத்தையே நினைத்தவர் என் அப்பா. ஒருவர் இருவர் இல்லை ஒரு நாளைக்குப் பலர் எனப் புலவர் கூட்டம் ! விருந்துண்ண எங்கள் தாரகை வீடு, அருந்தமிழ் உணவின் அகமாகவே அமைந்தது ! அப்பா எங்கள் மூவரையும் (கண்ணன், அருள், பரதன்) தாம் பெற்ற வரங்கள் என்பார்; மூவேந்தர் என்பார், முடிவுரை மூவேந்தர ...