POST: 2023-02-05T09:45:54+05:30

தைப்பூசம் தவறாதீர் =================== தைப்பூசம் தவறாதீர்கள் என்பது வள்ளலார் வாய்மொழி என்பார்கள். தமிழ்த் திங்களாகிய தை மாதத்தில் முழுநிலவு தோன்றும் நாளில் விடியல் வேளையில் நிலாவின் நிழல் மேற்கிலும், கதிரொளியின் தோற்றம் கிழக்கிலும் நடுவில் சபையில் காட்டப்பெறும் சோதிப்பிழம்பும் தைப்பூச மாட்சியை ஒருவாறு சுட்டிக்காட்டும் . இந்த மூன்று ஒளிகளின் நுணுக்கத்தைத்தான் தைப்பூசம் என்பார்கள். தமிழகத்தில் தைப்பூசம் நெடுங்காலமாக நடைபெற்று வருகின்ற திருவிழாவாகும். "மைப்பூசும் ஒண்கண் மடநல்லார் ...

POST: 2023-02-05T09:34:56+05:30

அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி 152 ஆம் ஆண்டு தைப்பூசப் பெருவிழா அழைப்பிதழ் நாள் : 05-02-2023 ஞாயிற்றுக்கிழமை இடம் : அருட்செல்வர் டாக்டர். நா. மகாலிங்கம் கலையரங்கம், வள்ளலார் குருகுலம் மேல்நிலைப்பள்ளி வளாகம், வடலூர். சுத்த சன்மார்க்க நிலையம் வடலூர்- 607303, கடலூர் மாவட்டம். புரவலர் ம.பாலசுப்பிரமணியம் தலைவர் சங்கர் வாணவராயர் செயலாளர் இரா.செல்வராஜ் அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி இறைவணக்கம்: தலைமை : தவத்திரு. கோவ ...

POST: 2023-02-04T10:41:32+05:30

அப்பாவுக்கு தமிழ். வணக்கம் கள்ளக்குறிச்சி மாவட்டத் தமிழ் அமைப்புகள் இணைந்து நடத்தும் படத்திறப்பு நாள் : 04.02.2023 சனி (காரி)க்கிழமை மாலை 3.00 மணி இடம் : டேனிஷ் மிஷன் தொடக்கப்பள்ளி, அரசு மருத்துவமனை அருகில், கச்சிராபாளையம் சாலை, கள்ளக்குறிச்சி. தமிழ் வளர்ச்சி மற்றும் பண்பாட்டுத்துறை மேனாள் செயலாளர், தமிழ்ப்பல்கலைக்கழக மேனாள் துணைவேந்தர் பத்மஸ்ரீ - முனைவர் ஒளவை நடராசனார் அவர்களுக்கு புகழ் வணக்கம். 1 புலவர்.கு.சீத்தா 2 புலவர்.அய்யா மோகன் 3 கவிமாமணி.முத்தமிழ் முத்தன் 4 கவிஞர்.கலிய ...

POST: 2023-02-03T11:18:39+05:30

நம்பிக்கை தொலைக்காட்சியுரை (25.12.2022) நம்பிக்கை தொலைக்காட்சிக்காக நத்தார் தின நல்வாழ்த்துகளை தெரிவிப்பதில் பெருமிதம் அடைகின்றேன். நண்பர்களே! கிறிஸ்மஸ் நன்னாள் என்பது மிகப்பெரிய ஈகை பிறந்தநாள், இரக்கத்தின் திருநாள் என்று தான் நாம் சொல்ல வேண்டும். சோதிமணி பெட்டகமே! அருந்தவப் புதல்வரே! என்றெல்லாம் அழைக்கப் பெற்ற இயேசு பெருமானுடைய பிறந்த தினமாக உலகெங்கும் உள்ளவர்கள் அனைவரும் இந்நாளை கோலாகலமாக கொண்டாடி மகிழ்வதை நான் கண்டு மகிழ்ந்துள்ளேன். பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு இலண்டன் மாநகரத்த ...

POST: 2023-02-03T11:18:39+05:30

நம்பிக்கை தொலைக்காட்சியுரை (25.12.2022) நம்பிக்கை தொலைக்காட்சிக்காக நத்தார் தின நல்வாழ்த்துகளை தெரிவிப்பதில் பெருமிதம் அடைகின்றேன். நண்பர்களே! கிறிஸ்மஸ் நன்னாள் என்பது மிகப்பெரிய ஈகை பிறந்தநாள், இரக்கத்தின் திருநாள் என்று தான் நாம் சொல்ல வேண்டும். சோதிமணி பெட்டகமே! அருந்தவப் புதல்வரே! என்றெல்லாம் அழைக்கப் பெற்ற இயேசு பெருமானுடைய பிறந்த தினமாக உலகெங்கும் உள்ளவர்கள் அனைவரும் இந்நாளை கோலாகலமாக கொண்டாடி மகிழ்வதை நான் கண்டு மகிழ்ந்துள்ளேன். பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு இலண்டன் மாநகரத்த ...

POST: 2023-02-02T10:45:23+05:30

இனிய இருபதாண்டுகள் முதுகலைத் தமிழிலக்கியம் முடித்து யான் முதுநிலை ஆய்வு (எம்.பில்) சென்னைப் பல்கலைக்கழகத்தில் தொடங்கினேன். பேராசிரியர் வ.ஜெயதேவன் ‘அருந்தமிழில் அயற்சொற்கள்’ என்ற தலைப்பிட்டு ஆய்வேட்டை எழுத ஆர்வமூட்டினார். அவ்வாய்வு முடிந்து, அழகிய நூலாக இருபது ஆண்டுகளுக்கு முன்பு, இதே தேதியில் (01.02.2003) வெளியிட்டேன். பேராசிரியர் வ. ஜெயதேவன் முன்னுரையையும், மேனாள் தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர், கு.வ. எழிலரசு எழுதிய அணிந்துரையையும், என் தோளோடு தோளாத் தோழமை கொண்டு வாழும் புகழ் வாய ...

POST: 2023-02-01T08:32:50+05:30

தலை ஈய வாள் தந்த குமணன் பெருமையைப் பெருந்தலைச் சாத்தனார் பாடும் புறப்பாடல் எண் நூற்று அறுபத்து ஐந்து நிலையில்லா உலகத்தில் தமிழின் நிலைத்த புகழ் பாடும் உலகத்தமிழிதழ் வரிசை நூற்று அறுபத்து ஐந்து

POST: 2023-01-30T10:08:12+05:30

தினசெய்தி - 30 1 2023 பக்கம் எண் : 4 செங்கோல் ஏந்திய செம்மொழிச் சிகரம் – 89 19 ஆம் நூற்றாண்டு இலண்டன் - பூம்புகார் - முனைவர் ஔவை நடராசன் மேனாள் துணைவேந்தர், தமிழ்ப் பல்கலைக்கழகம். பூம்புகார் நகரம் பத்தொன்பதாம் நூற்றாண்டின் இலண்டன் மாநகரத்தைக் காட்டிலும், நகர்ப்பரப்பினாலும் பிற பெருமைகளாலும் சிறப்பாக இருந்துள்ளது. . மாட மாளிகைகள், செந்தமிழ் மன்றங்கள், கோவில்கள், கோட்டங்கள், ஆற்றங்கரைகள், கடற்கரைகள், பெருந்தோட்டங்கள், பூங்பொழில்கள். நினைப்பில் அளவிட்ட ...

POST: 2023-01-29T09:55:57+05:30

தினசெய்தி - 29 1 2023 பக்கம் எண் : 4 அருந்தமிழும் அன்றாட வழக்கும் - 146 பீடும் சிறப்பும் முனைவர் ஔவை அருள் தில்லி பல்கலைக்கழகத்தில் ஷேக்ஸ்பியர் ஆய்வு தொடர்பாக தொடர்ந்து யாம் வெளியிட்டுவரும் ஆய்வுச் சுருக்க உரை பின் வருமாறு : The language of stress weakened in the absence of subject Tamils and at the same time the printed text nearly killed the pulpit, the performing Pammalite streamed across the Tamil firmament with surety and ease. Though this was so, both the schola ...