செய்திப்பரல் தமிழ்ப்பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பொறுப்புக் குழுவில் உறுப்பினர்களாக ஐவர் நியமிக்கப்பட்டுள்ளனர். 1 தமிழ் வளர்ச்சித் துறைச் செயலர் திரு வே. ராஜாராமன் (ஒருங்கிணைப்பவர்), ஆட்சிக் குழு உறுப்பினர்களான 2 முனைவர் சி. அமுதா (மன்னர் சரபோஜி அரசு கல்லூரி தமிழ்த் துறை இணைப் பேராசிரியர்), 3 முனைவர் வீ. அரசு (சென்னைப் பல்கலை. தமிழ் இலக் கியத்துறை முன்னாள் தலைவர்), 4 மருத்துவர் பெ.பாரதஜோதி (தமிழ்ப்பல்கலைக்கழக அறிவியல் புலத் தலைவர்), 5 தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் ஔவை ந. அருள ...
POST: 2025-02-15T08:01:24+05:30
நல்விருந்து ஓம்பிய நட்புத்திலகம் மேனாள் கூடுதல் செயலாளர் அருமை நண்பர் விஜயகுமார் அவர்களின் கொளத்தூர் இல்லத்தில் பொங்கல் பெருவிழாவை முன்னிட்டு 14.1 25 செவ்வாய்க்கிழமையன்று நண்பர் கஜேந்திர பாபு மற்றும் ஓட்டுநர் பரந்தாமன் ஆகியோருடன் நல்விருந்து உண்டு மகிழ்ந்தோம். தைப்பிறந்தால் வழிப் பிறக்கும் என்பது போல விருந்துப் படைத்த விஜயகுமார் இணையர் வாழ்வாங்கு வாழ்க என்று வாழ்த்தி விடை பெற்றோம்
POST: 2025-02-14T08:51:40+05:30
டாக்டர் அம்பேத்கார் அரசினர் கலைக் கல்லூரி (த) வியாசர்பாடி,சென்னை-39 முத்தமிழ் விழா மற்றும் முத்தமிழறிஞர் கலைஞர் மாணவர் தமிழ் மன்ற பரிசளிப்பு விழா நிகழும் திருவள்ளுவராண்டு 2056 மாசித்திங்கள் 2 ஆம் நாள் (14.02.2025) வெள்ளிக்கிழமை காலை 10.00 மணி அளவில், இக்கல்லூரியின் முத்தமிழ் விழாவும், முத்தமிழறிஞர் கலைஞர் மாணவர் தமிழ் மன்ற பரிசளிப்பு விழாவும் ஒருங்கே நடைபெறவிருக்கின்றன. இவ்விருபெரும் விழாவில் தமிழ் நலம் நாடும் தகைசால் பெரியோரும், மாணவர்களும் திரளாகக் கலந்து கொண்டு தமிழ்த்தேன் பருக அழ ...
POST: 2025-02-13T10:17:13+05:30
ஆய்வும் -செயலாக்கமும் தமிழ்நாடு நகர்புர வாழ்விட மேம்பாட்டு வாரியத்தில் ஆட்சி மொழித் திட்ட செயலாக்க ஆய்வு மேற்கொண்டு தயாரிக்கப்பட்ட ஆய்வறிக்கையினை 7.2.2025 வெள்ளிக்கிழமை பிற்பகல் 4.00 மணியளவில் நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரிய மேலாண்மை இயக்குநர் மருத்துவர் சு. பிரபாகர் இ.ஆ.ப. அவர்களிடம் வழங்கியதோடு அவரது முன்னிலையில் வாரியத்தின் அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு ஆட்சி மொழித் திட்டச் செயலாக்கம் குறித்து உரையாற்றினேன்.
POST: 2025-02-12T10:42:19+05:30
நீரறவு அறியா நிலமுதற் கலந்த எனத் தொடங்கும் காமக்காணியாரின் புறநானூற்றுப் பாடல் இரு நூற்று எழுபத்து ஒன்று ; பேரறிவு ஆற்றல் வாய்ந்த அறிஞர்களின் நுண்மாண் கட்டுரைகளை நுவலும் உலகத்தமிழிதழ் இருநூற்று எழுபத்து ஒன்று
POST: 2025-02-11T09:20:26+05:30
அருப்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி அருப்பெருஞ்ஜோதி 154ஆம் ஆண்டு தைப்பூசப் பெருவிழா நாள்: 10.02.2025 திங்கள்கிழமை கொடியேற்ற நாள் முதல் 13.02.2025 வியாழக்கிழமை வள்ளல்பெருமான் திருஉரு மறைந்த திருஅறை தரிசனநாள் வரை இடம்: அருட்செல்வர் டாக்டர் நா. மகாலிங்கம் கலையரங்கம், வள்ளலார் குருகுலம் மேல்நிலைப்பள்ளி வளாகம், வடலூர், வருவார் அழைத்துவாடி வடலூர் வடதிசைக்கே வந்தால் பெறலாம் நல்ல வரமே - திருஅருட்பா எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! புரவலர் ம.பாலசுப்பிரமணியம் தலைவர் சங்கர் வா ...
POST: 2025-02-10T09:59:19+05:30
இழந்து விட்டோமே! ஆற்றல் திலகம் பண்பின் பெட்டகம் தமிழ், தமிழர்கள் தமிழ்ப்பண்பாடு, மொழிபெயர்ப்பு தொடர்பான பொருண்மைகளை அலைபேசியில் உடனே அழைத்துக் கேட்பதும் அதற்கேற்ற முடிவுகளை அவர் வழியிலேயே நிறைவேற்றிக் காட்டுவதும் தான் திரு ரமேஷ் அவர்களின் கூடுதல் சிறப்பு. பல நேரங்களில் துணை இயக்குநர் என்றால் ஆங்கில மொழிபெயர்ப்பான Deputy என்று தான் அரசு அலுவலகங்களில் எண்ணுவார்கள். ஆனால் திரு ரமேஷ் இதற்கு ஒரு விதிவிலக்கு தமிழில் எப்படி கடவுள் துணை என்று எழுதுவார்களோ அதுபோல அவர் பணியாற்றிய தமிழ்நா ...
POST: 2025-02-09T09:58:44+05:30
சென்னைச் செந்தமிழ் மன்றம் பொது அறக்கட்டளை (28/2024) அனைத்திந்திய சாதனைப் புத்தகத்துடன் இணைந்து நடத்திய நாடோறும் நன்னூல் பன்னாட்டுக் கருத்தரங்கம் உலக சாதனை படைத்து நிறைவு விழா நாள் : 09.02.2025 - ஞாயிற்றுக்கிழமை நேரம் : காலை 10.00 மணி முதல் பிற்பகல் 01.00 மணி வரை இடம் : அறிஞர் அண்ணா நூற்றாண்டு நூலகம் நூல் வெளியீட்டு அரங்கம் (இரண்டாவது தளம்) கோட்டூர்புரம், சென்னை. சென்னைச் செந்தமிழ் மன்றம் - பொது அறக்கட்டளை இணையவழியில் 01.01.2024 முதல் 17.04.2024 வரை 108 நாட்கள் 108 பேராசிரியர்களைக் ...
POST: 2025-02-08T09:37:22+05:30
செய்தி வெளியீடு எண் : 296 நாள் : 07.02.2025 சிறந்த நூல் பரிசுத் திட்டத்தின்கீழ் 2023 ஆம் ஆண்டிற்கு தெரிவு செய்யப்பட்ட சிறந்த நுல்களைப் படைத்த நூலாசிரியர்கள் மற்றும் பதிப்பகத்தாருக்குப் பரிசுத் தொகை மற்றும் பாராட்டுச் சான்றிதழ் ஆகியவற்றை மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் திரு. மு.பெ. சாமிநாதன் அவர்கள் 07.02.2025 அன்று தமிழ்நாடு இசை மற்றும் கவின் பல்கலைக்கழக அரங்கில் வழங்கினார். தமிழ்மொழியில் சிறந்த நூல்கள் வெளிவருவதை ஊக்கப்படுத்தும் வகையில் தமிழ் வளர்ச்சித் துறை வாயிலா ...
POST: 2025-02-07T10:02:33+05:30
எங்கும் தமிழ் எதிலும் தமிழ் மாநில அளவிலான பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கான கட்டுரை மற்றும் கவிதை பேச்சுப் போட்டிகளில் பெருந்திரளாக கலந்து கொண்டு வெற்றிப் பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா 28 1 2025 செவ்வாய்க்கிழமையன்று மாலை நடைபெற்ற விழாவில் பரிசளித்து மகிழ்ந்தேன்.
