தினமணி 26.1.2025 ஞாயிற்றுக்கிழமை பக்கம் 6 திருக்குறள் முற்றோதலில் பங்கேற்க குழந்தைகளை ஊக்குவிக்க வேண்டும் தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் ஔவை ந.அருள் தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் ஆண்டுதோறும் நடத்தப்படும் திருக்குறள் முற்றோதல் நிகழ்ச்சியில் மாணவர்களை பங்கேற்கச் செய்யும் வகையில் பெற்றோர்கள் ஊக்குவிக்க வேண்டும் என தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் ஒளவை ந.அருள் வலியுறுத்தினார். சென்னை பல்கலைக்கழக திருக்குறள் ஆய்வு மையம், உலகத் திருக்குறள் மையம் ஆகியவை சார்பில் திருக்குறள் உலக நூல் என்ற தலைப்ப ...
POST: 2025-01-29T08:32:46+05:30
குயில் வாய் அன்ன கூர்முகை அதிரல் ... எனத் தொடங்கும் ஔவையாரின் புறப்பாடல் எண் இருநூற்(று) அறுபத்(து) ஒன்பது; பயில் வாய் மணம் பரப்பும் உலகத்தமிழிதழ் இருநூற்(று) அறுபத்(து) ஒன்பது
POST: 2025-01-28T06:49:49+05:30
களப்போராளியை இரக்கமில்லாத காலன் கவர்ந்து விட்டானே! பாண்டிய மன்னரை போன்ற தோற்றமும் செம்மாந்த நடையும் பெருமித குரலும் கண்டாரைக் கவரும் காசிக்கோ என்கிற கண்ணு சிவகுமாரன்(23.12.1964-25.1.2025) சனிக்கிழமை 25.1.25 அன்று காலை மலேசிய மருத்துவமனையில் மறைந்தார் என்ற திடுக்கிடும் செய்தியை வழக்கறிஞர் சிவகுமார் தொலைபேசி வாயிலாக சொன்ன போது அந்தோ! மணி நிகர் இனிய நண்பரை இழந்தோமே! என்று துயரத்தில் வெம்பினேன். சென்ற மாதம் தான்(24.12.24) தனக்கு மணிவிழா மலேசியா வர வேண்டும் என்று அழைப்பிதழ் நீட்டிய கரத்தை எ ...
POST: 2025-01-27T08:42:17+05:30
தொண்டு துலங்குக! பட்டு வணிகத் திலகமாகவும், கலைகளைக் காக்கும் கரமாக மிளிரும் பத்மஸ்ரீ நல்லி செட்டியார் அவர்களின் மகுடத்திற்கு மற்றொரு சிறகாக பத்மபூஷன் விருது பெறவிருக்கும் 86 அகவை நிறைந்த நல்லிதய செம்மலை குடியரசு திருநாளன்று (26.1.25) காலை நேரில் அவரின் கடையில் சந்தித்துப் பட்டாடை சூட்டி வாழ்த்து தெரிவித்துவிட்டு உடனே அடுத்த நிகழ்வாக நாட்டு மக்கள் நலமுற்று வாழவும் நானிலத்தவர் மேனிலை எய்தவும்-வேண்டிப் பாடல்கள் புனைந்த பாரதியின் அனைத்து ஆக்கங்களையும் எழுத்தெண்ணி ஆண்டாண்டுக் காலமாக ஒரே ...
POST: 2025-01-26T06:41:29+05:30
செய்தி வெளியீடு எண்: 178 நாள் : 25.01.2025 செய்தி வெளியீடு மொழிப்போர் தியாகிகள் திருவாளர்கள் தாளமுத்து நடராசன் ஆகியோரது புதுப்பிக்கப்பட்ட நினைவிடம் திறந்து வைப்பு- "சென்னை, எழும்பூரில் உள்ள தாளமுத்து-நடராசன் மாளிகை வளாகத்தில் திருவுருவச் சிலை நிறுவப்படும்" மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவிப்பு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று (25.1.2025) தமிழ்மொழி தியாகிகள் நினைவு நாளையொட்டி, சென்னை, மூலக்கொத்தளத்தில் அமைந்துள்ள மொழிப்ப ...
POST: 2025-01-26T06:41:29+05:30
செய்தி வெளியீடு எண்: 178 நாள் : 25.01.2025 செய்தி வெளியீடு மொழிப்போர் தியாகிகள் திருவாளர்கள் தாளமுத்து நடராசன் ஆகியோரது புதுப்பிக்கப்பட்ட நினைவிடம் திறந்து வைப்பு- "சென்னை, எழும்பூரில் உள்ள தாளமுத்து-நடராசன் மாளிகை வளாகத்தில் திருவுருவச் சிலை நிறுவப்படும்" மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவிப்பு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று (25.1.2025) தமிழ்மொழி தியாகிகள் நினைவு நாளையொட்டி, சென்னை, மூலக்கொத்தளத்தில் அமைந்துள்ள மொழிப்ப ...
POST: 2025-01-25T06:19:24+05:30
தமிழ் என் உயிர் மூச்சு நேற்று மாலை 24.1.25 வெள்ளிக்கிழமை சுழற்கழக உறுப்பினர்கள் மத்தியில் தமிழ் என் மூச்சு என்ற அருமையான தலைப்பில் சென்னையில் புகழ்பெற்ற தாஜ் கோரமண்டல் ஐ மீன் உணவகத்தில் உரையாற்றினேன். தலைப்பை வழங்கி பேச அழைத்து பெருமைபடுத்திய சென்னை மெட்ரோ சுழற்கழகத் தலைவர் இனிய நண்பர் தொழிலதிபர் சார்ல்ஸ் அவர்களுக்கு நன்றி... இவர் மாநிலக் கல்லூரியில் முதுகலை தமிழ் இலக்கியம் பயின்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
POST: 2025-01-24T06:26:05+05:30
புரையுநர் இல்லாப் புலமையாளர்! கரந்தைப் புலவர் கல்லூரியிற் பயின்று, தமிழ் முழுதறிந்த தன்மையராகத் முழுமையாகப்பெற்ற தமிழாகரர் சாமி. தியாகராசன் மறைந்தார் என்ற செய்தி அறிந்து துயருற்றேன். சிவந்த மேனியும், சிரித்த முகமும், சிந்தனை மிளிரும் வகையில் சிவசொற்களை அணிந்து பேசும் தன்மையர் கண்டாரைக் கவர்ந்து ஈர்க்கும் பான்மையுடையன. தேசிய உணர்விலும் பாரதியார் பாடல்களிலும் தம்மை ஆட்படுத்திக்கொண்டு அவர் ஆற்றிய பணிகள் பல. நினைவில் வாழும் மூதறிஞர் தி.ந.இராமச்சந்திரன் அவர்களோடு சூழ இருந்த அவைக்களத்தில் சாம ...
POST: 2025-01-23T06:51:09+05:30
கற்க நிற்க அதற்குத் தக கன்னியாகுமரியில் 30.12.24 அன்று அய்யன் திருவள்ளுவர் சிலையிலிருந்து விவேகானந்தர் பாறை வரை கண்ணாடி இழைப் பாலம் தொடக்க விழாவிற்கு பிறகு நடந்து நின்ற அற்புத தருணம்
POST: 2025-01-22T08:57:07+05:30
தன்னுயிர் தான் அறப்பெற்றானை எனத் தொடங்கும் அருங்குறள் இருநூற்(று) அறுபத்(து) எட்டு; மன்னுயிர்க்கெல்லாம் தமிழ்மணம் பரப்பும் உலகத்தமிழிதழ் இருநூற்(று) அறுபத்(து) எட்டு;
