Arul.2009/FB/#6820 எங்கும் தமிழ் ! எதிலும் தமிழ் ! தமிழ் வளர்ச்சித்துறை சென்னை மாவட்டம் ஆட்சிமொழிச் சட்ட வாரம் 2025-2026 அழைப்பிதழ் திருவள்ளுவராண்டு 2056 / மார்கழி 02 முதல் 12 வரை 17.12.2025 45 27.12.2025 இடம் : தமிழ் வளர்ச்சி இயக்ககக் கூட்டரங்கம் நிகழ்ச்சி நிரல் நாள் 17 புதன் கிழமை தலைமையுரை முற்பகல் 10.00 முனைவர் ந.அருள் ' தமிழ் வளர்ச்சி இயக்குநர் மொழிபெயர்ப்பு முற்பகல் 10.15-12.30 | திருமதி இளவேனில் முல்லை மொழிபெயர்ப்புத் துறை
POST: 2025-12-19T09:24:57+05:30
Arul.2009/FB/#6819 C. KANDASWAMI NAIDU COLLEGE கொ. கந்தசாமி நாயுடு கல்லூரி ACCREDITED WITH "B" GRADE BY NAAC (A UNIT OF PACHAIYAPPA'S TRUST) AFFLIATED TO UNIVERSITY OF MADRAS Anna Nagar East, Chennai, Tamil Nadu - 600 102 தமிழ்த்துறை மற்றும் ஆங்கிலத்துறை இணைந்து நடத்தும் பன்னாட்டுக் கருத்தரங்கம் “தனிநாயக அடிகளாரின் ஆய்வுக்கொடை" அழைப்பில் மகிழும் சென்னை பச்சையப்பன் அறக்கட்டளை நிர்வாகி, செயலர், கல்லூரி முதல்வர், துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள், ஆசிரியல்லாப் பணியாளர்கள் & மாணவர்கள் 18 D ...
POST: 2025-12-18T08:02:53+05:30
Arul.2009/FB/#6818 உலகத் தமிழ்ச் சங்கம், மதுரை நாடகத்துறை, தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகம், சென்னை இணைந்து நடத்தும் இந்தியத் தமிழ்ச் சங்கங்களின் பணிகளும் பங்களிப்புகளும் தேசியக் கருத்தரங்கம் அழைப்பிதழ் 18 12 2025 (வியாழக்கிழமை) அழைப்பின் மகிழ்வில் முனைவர் இ.சா. பர்வீன் சுல்தானா துணைத்தலைவர் / இயக்குநர், உலகத் தமிழ்ச் சங்கம், மதுரை நிகழ்விடம் தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகம். சென்னை இந்தியத் தமிழ்ச் சங்கங்களின் பணிகளும் பங்களிப்புகளும் தேசியக் கருத்தரங்கம் தொடக்க விழா 18 ...
POST: 2025-12-17T09:29:33+05:30
Arul.2009/FB/#6817 அறிவினான் ஆகுவ துண்டோ பிறிதின் நோய் தந் நோய் போல் போற்றாக் கடை" எனத் திருவள்ளுவர் குறிக்கும் திருக்குறள் எண் முந்நூற்றுப் பதினைந்து; "அறிவினான் ஆகுவதுண்டாம்! செந்தமிழைச் செழுந்தமிழாய் ஆக்குதல் தலை" என அறிவன் தோறும் ஆக்கத் தமிழ் பரப்பும் உலகத்தமிழிதழ் எண் முந்நூற்றுப் பதினைந்து!
POST: 2025-12-16T05:50:53+05:30
Arul.2009/FB/#6816 எத்திசையும் புகழ் மணக்கும் எழில் மிகுந்த தமிழ்நாடு வடக்கே ஒலிக்கும் தெற்கின் குரல் இந்தியாவின் தலைநகரான புதுதில்லியில் அமைந்துள்ள அறிவுச் சுரங்கமான ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில், தமிழின் பெருமையை நிலைநிறுத்தும் வகையிலும், வான்புகழ் கொண்ட அய்யன் திருவள்ளுவரின் புகழைப் பறைசாற்றும் வகையிலும் தமிழ்நாடு அரசு வரலாற்றுச் சிறப்புமிக்க முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருகிறது. சிறப்பு நிலைத் தமிழ்த்துறை: ஒரு வரலாற்றுப் பயணம் புதுதில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் தமிழ் வளர ...
POST: 2025-12-15T10:29:25+05:30
Arul.2009/FB/#6815 மலரும் நினைவுகள்! வளரும் கனவுகள்! காலச்சக்கரம் பின்னோக்கிச் சுழல, 1976ஆம் ஆண்டு அக்டோபர்த் திங்கள் 16ஆம் நாள், சனிக்கிழமை மாலைப் பொழுது கண்முன்னே வந்து நிழலாடுகிறது. அண்ணா நகர் வள்ளியம்மாள் பள்ளியில் நான்காம் வகுப்புப் பயின்ற அந்தப் பாலப் பருவத்தில், 'தாரகை இல்லத்தில்' நடந்தேறிய என்னுடைய ஒன்பதாம் அகவைப் பிறந்தநாள் விழா, இன்றும் நெஞ்சில் பசுமையாக மலர்கிறது. பெற்றோரின் அன்பு வாழ்த்துகள் மழையெனப் பொழிய, என் வலது தோளாக அண்ணன் கண்ணனும், இடது தோளாகத் தம்பி பரதனும் அரணாக நிற் ...
POST: 2025-12-14T11:17:24+05:30
Arul.2009/FB/#6814 You are cordially invited for the book release of Sasha's You Make Yourself Grow Up! Glow Up! Glam Up! By Disciple of Vallal Variyar Swamigal Kalaimamani Smt. Desa Mangayarkarasi Guest of Honor - Dr. Arul Natarajan, Director Dept. of Tamil Development, Government of Tamilnadu . Keynote Speaker Industrialist Sri ANS Govindaswamy December 14, 2025, 5:00 PM S & S UNI5 - Multipurpose Hall , Station Road, Korattur, Chennai .
POST: 2025-12-13T11:40:49+05:30
Arul.2009/FB/#6813 அன்பே சுடராக! அமெரிக்காவில் நாசாவில் கடந்த முப்பதாண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வரும் விஞ்ஞானி, வலைப்பூக்களில் வரலாறு, தொல்லியல், தமிழ் இலக்கியம், தமிழ் மரபு, திராவிடவியல், தமிழ்க்கணினி முதலான பல தலைப்புகளில் சரளமான நடையில் எழுதும் எழுத்தாளர் தமிழ்நாட்டில் இருந்து வருகிற மாபெரும் இலக்கிய ஆளுமைகள் அவரின் இல்லத்திற்கு வருகை புரிவதோடு மோசி கீரனாரைப் போன்று துயில் கொள்வதற்கு இடமளிக்கும் பொள்ளாச்சியைச் சேர்ந்தவரும் எந்தையாரின் இனிய நண்பரான அண்ணல் கணேசன் அவர்களை நாசாவின் வ ...
POST: 2025-12-12T10:15:19+05:30
Arul.2009/FB/#6812 நீடுதுயில் நீக்கப் பாடி வந்த நிலா! தமிழ்நாடு அரசின் சார்பில் 11.12.25 வியாழக்கிழமை காலை 8.30 மணிக்கு மகாகவி பாரதியாரின் 144 வது பிறந்த நாளினை முன்னிட்டு சென்னைக் கடற்கரையிலுள்ள திருவுருவச் சிலைக்கு மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள் தலைமையில் மலர் வணக்கம் செலுத்தப்பட்ட நிகழ்ச்சியில் கலந்து கொண்டேன்
POST: 2025-12-11T09:02:54+05:30
Arul.2009/FB/#6811 சொல்வயல் திங்கள் மின்னிதழ் திசம்பர் -2025 பக்கம் எண். 6 முதல் 9 வழக்குச் சொற்கள் முடிவதில்லை முனைவர் ஔவை ந. அருள் இயக்குநர் தமிழ் வளர்ச்சி இயக்ககம் பிறமொழிச் சொற்களைக் கண்டறிந்து நீக்க வேண்டுமென்ற துடிப்பு ஒருபுறத்திலும், இவற்றை நீக்க வேண்டியதில்லை என்ற கருத்து மறுபுறத்திலுமாகத் தமிழின் மொழிக்கொள்கை இருவேறு இயல்பாக உருப்பெற்றுள்ளதைப் பல்வேறு முனைகளில் தமிழ் உலகம் அறிந்து வருகிறது. இந்நிலையில் ஒருசாரார் புதிய அறிவுத்துறைப் பொருண்மைகளைக் குறிப்பதற்குப் பிறமொழிச் சொற்களை ...
