Arul.2009/FB/#6830 அகத்திலும் குளிர்வித்த அற்புத அருவி வட்டமாக வளைந்த சுவர் வரிசைச் செங்கல் வளமையுடன் கலைபேசப் பார்த்து நின்றோம்! திட்டத்துடன் நண்பர்திரு பெருமாள் எம்மைத் தேடிவந்து கூட்டிச்செல்லப் பெருமை கொண்டோம்! கட்டழகு சிகரமெனக் கருதும் வண்ணம் காட்சிதரும் அற்புதத்தைக் கண்டே நின்றோம்! மட்டில்லா மகிழ்ச்சியினைத் தந்தே நின்ற மாநகர நீர்வீழ்ச்சி வாழ்க வென்றோம்! ஈராயி ரத்திருபத் தேநான் காண்டின் இனிமையுறும் கடைமாதப் பதினா றன்றே சீரினிலே திகழ்கின்ற ஹூஸ்டன் சென்று சிலிர்ப்புடனே இவ்வனப்பைக் கண் ...
POST: 2025-12-29T09:46:35+05:30
Arul.2009/FB/#6829 என்றும் இளையாய் ! சிவனடியே சிந்திக்கும் சீர்த்தி வாய்ந்த தமிழவேள் சிவாலயலம் மோகன் அவர்களின் இல்லத்தில் நடைபெற்ற 64 ஆம் பிறந்த நாள் இனிய நிகழ்வில் 25.12.2025- வியாழக்கிழமை அன்று பங்கு கொண்டு நிறைவாழ்வும் - நீடிய வளமும் - தருகை நீண்ட தகைமையும் ஓங்கிச் சிறப்படைய கனிந்து வாழ்த்தி மகிழ்ந்தேன்
POST: 2025-12-28T06:17:33+05:30
Arul.2009/FB/#6828 எங்கும் தமிழ் எதிலும் தமிழ் தமிழ் வளர்ச்சித் துறை திருக்குறள் இசை, நாடக வடிவிலான நிகழ்ச்சி அழைப்பிதழ் நாள் : திருவள்ளுவர் ஆண்டு 2056 / மார்கழி 12 27.12.2025 நேரம் : காலை 9.00 மணி முதல் 1.00 மணி வரை இடம் : மங்கையர்க்கரசி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, பரவை, மதுரை திருக்குறள் இசை, நாடக வடிவிலான நிகழ்ச்சி நிகழ்ச்சி நிரல் : 27.12.2025 நேரம் : காலை 9.00 மணி முதல் 1.00 மணி வரை இடம் : மங்கையர்க்கரசி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, பரவை, மதுரை தமிழ்த்தாய் வாழ ...
POST: 2025-12-27T08:30:14+05:30
Arul.2009/FB/#6827 விஜிபி குடும்பத்தின் திருமண வரவேற்பு நிகழ்வு தங்கக் கடற்கரையில் 21.12.25 ஞாயிற்றுக்கிழமை மாலையில் நடைபெற்றது. மணமக்கள் சுரோஜித் பாபுதாஸ் ஐஸ்வர்யா ரவிச்சந்திரன் இணையரை அண்ணாச்சி விஜி சந்தோஷம் முன்னிலையில் வாழ்த்தி மகிழ்ந்தேன். நிகழ்வில் வரவேற்பு முகமாக ஒய்யார அழகிகள் கம்பத்தின் மேல் சுழல் நடன மாதிரியை அணி செய்து கொண்டிருந்ததைக் கண்டு வியப்புற்றேன்.
POST: 2025-12-26T10:44:18+05:30
Arul.2009/FB/#6826 அறவாணர் நினைவேந்தல் இணையவழி அரங்கம் https://meet.google.com/giv-yphd-shd 24.12.2025 புதன்கிழமை மாலை 5.00 மணி அறவாணர் தமிழ்க்கோட்டத்தில் மலர் வணக்கம் வரவேற்புரை இரா.அறவேந்தன் அறக்கட்டளைச் செயலர் பேராசிரியர் - தலைவர். சிறப்புநிலைத் தமிழ்த்துறை ஜவகர்லால்நேரு பல்கலைக்கழகம், புதுதில்லி தலைமையுரையும் நூல் வெளியீடும் சிலம்பு நா. செல்வராசு அறக்கட்டளைத் தலைவர் பேராசிரியர்(ப.நி) புதுவை மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனம், புதுச்சேரி நூல் க.ப. அறவாணரின் திறனாய்வுகள் ந ...
POST: 2025-12-25T11:15:30+05:30
Arul.2009/FB/#6825 இயேசு கிறித்து... 200 மைல்களுக்கு மேல் பயணம் செய்யாதவர் – பாலசுதீன எல்லைகளுக்குள்ளேயே தன்னுடைய பாதச்சுவடுகளைப் பதியச் செய்தவர். விதைக்குள்ளே விருட்சத்தைச் சுருக்கி வைத்தவர். நதிக்குச் சலங்கை கட்டி நளினமாக நடக்க விட்டவர். நிலவுக்கு வெள்ளையடித்து வெளிச்சம் தந்தவர். இனிய நத்தார் வாழ்த்துகள். 25.12.2025
POST: 2025-12-24T06:45:01+05:30
Arul.2009/FB/#6824 துறைமீன் வழங்கும் பெருநீர்ப் பொய்கை அரிமலர் ஆம்பல் மேய்ந்த நெறிமருப்பு" என ஓரம்போகியார் குறிக்கும் அகநானூற்றுப் பாடலெண் முந்நூற்றுப் பதினாறு! "துறைதோறும் தமிழின் தனிமணம் வீசச் சுவைமிகு கலைகள் சுடர் விட்டு ஒளிர உலா வரும் உலகத் தமிழிதழ் முந்நூற்றுப் பதினாறு!"
POST: 2025-12-23T09:33:34+05:30
Arul.2009/FB/#6823 ஆட்சிமொழி விழிப்புணர்வுப் பேரணி 22.12.25 திங்கட்கிழமை காலை 9 மணி |இடம்: தமிழ் வளர்ச்சி இயக்ககம் தொடங்கி வைப்பவர் முனைவர் ந.அருள் தமிழ் வளர்ச்சி இயக்குநர் ஆட்சிமொழிப் பட்டிமன்றம் முற்பகல் 10.30-12.30 சென்னை சமூகப் பணிக்கல்லூரி மாணவ / மாணவிகள்
POST: 2025-12-22T08:41:02+05:30
Arul.2009/FB/#6822 ஆக்கம் அதர்வினாய்ச் செல்லும்! தமிழ் வளர்ச்சித் துறை வாயிலாக திருக்குறள் திருப்பணிகள் திட்டத்தின் கண்காணிப்புக்குழுவால் தெரிவு செய்யப்பெற்ற திருக்குறள் அமைப்பான திரு.வி.க. பேச்சுப் பயிலரங்கத்தால் செனாய் நகரில் உள்ள திரு வி க மேல்நிலைப் பள்ளியில் பொது மக்களுக்கு நடத்தப்பட்ட ஒன்பதாவது பயிற்சி வகுப்பில் 21.12.25 ஞாயிற்றுக்கிழமை காலை 11.00 மணியளவில் கலந்து கொண்டு சில குறட்பாக்களைக் குறித்து உரையாற்றினேன். இப்பயிற்சி வகுப்பில் திரு.வி.க பேச்சுப் பயிலரங்க நிறுவனர் திருக்குற ...
POST: 2025-12-21T08:18:42+05:30
Arul.2009/FB/#6821 நிருவாகக் குழுக்கூட்டம் சைதாப்பேட்டை, தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக் கழகத்தில், மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் திரு.மு. பெ.சாமிநாதன் அவர்கள் தலைமையில் 18.12.2025 வியாழக்கிழமையன்று மதுரை உலகத் தமிழ்ச் சங்கம் 16-வது நிருவாகக் குழுக்கூட்டம் காலை 11.00 மணியளவில் நடைபெற்றது. இந்நிகழ்வில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறையின் அரசு செயலாளர் திரு.வே.ராஜாராமன், இ.ஆ.ப., தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் - முனைவர் ந.அருள், மதுரை உலகத் தமிழ்ச் சங்க ...
