எழுத்து விடாமல் எந்த துண்டுப்பதிவுகளையும்,ஏடுகளையும்,காகித முடங்களையும் பதிவு செய்து காத்து வருவது இங்கிலாந்து நாட்டின் பிரிட்டிஷ் நூலகத்தின் இன்றியமையாப்பணியாகும். திருக்குறள் எங்கே என்று கேட்டதும் எந்த திருக்குறள் கையடக்கமா?கால் பக்க அளவா ? என்று இங்கே கேட்கிறார்கள்! எந்த காந்தி என்று கேட்பதைப்போல?
POST: 2013-05-02T19:44:58+05:30
பல்கலைக்கழகங்களை பாழாக்குவது எப்படி? ---------------------------------------------------------------------------------------------- இந்து நாளிதழில் இத்தலைப்பில் ஒரு நல்ல கட்டுரை வெளி வந்துள்ளது.உயர் கல்வித்துறையைச்சார்ந்த அலுவலர்கள் அனைவரும் இந்த ஆய்வறிக்கையை பின்பற்றினால் இந்தியாவிலுள்ள நானூறு பல்கலைக்கழகங்களையும் இடித்து விட முடியும். தாமிர ஆலை,கூடங்குளம்,நிலக்கரிச்சுரங்கம் போல பல்கலைக்கழகங்களும் பொது மக்கள் சென்று மறியல் செய்ய வேண்டிய நிறுவனமாக மாறி விடும். சென்னையில் திருவல்லிக்கேணியில் ...
POST: 2013-05-01T12:22:16+05:30
Rtn Olivannan organized an excellent evening meeting on literary pursuits and was happy to see as many energetic,bublling enthusiasts in the heart of city sharing their thoughts on a laudable pursuit.Kudos
POST: 2013-04-28T14:18:01+05:30
பணத்துக்கண் மாசிலன் ஆதல் அணைத்து அரசியல் ஆகுல நீர பிற இதுதானே இன்றைய திருக்குறள்!
POST: 2013-04-27T20:50:32+05:30
பொய்கள்,புலவர்களின் பொய்கள்,புள்ளிவிவர பொய்கள் என்று சொல்லலாம்.இதையே ஆங்கிலத்தில் Lies,Damned Lies,Statistics என்பார்கள். அறிவியல் அறிஞர்கள், தொழில் நுணுக்கப்பொறிஞர்கள் இவைகளையெல்லாம் கேட்டுக்கொண்டிருக்கிறார்கள்? ஓலைச்சுவடிகளின் எண்ணிக்கை முப்பதுமுக்கோடி என்று புராணங்கள் சொல்வதாக மெய்யறியா முனிவர் (மெய்யறியா என்றால் யோகத்தில் அமர்திருந்த போது தன் உடல் மேல் பாம்பு ஊர்ந்தாலும் உணர மாட்டாதவர் என்று பொருள்)கயவாமுனிவர்க்கு காதில் உபதேசித்தாராம்.
POST: 2013-04-26T11:29:50+05:30
கிழிந்த ஓலைகள்,முறிந்த ஓலைகள்,ஒட்டிய ஓலைகள்,ஒரு பக்கத்திற்கும் மறு பக்கத்திற்கு தொடர்பில்லாத ஓலைகள் என்று அத்தனையும் மின்னாக்கம் செய்யப்பட்டன.எழுதியவன் ஏட்டைக்கெடுத்தான், எடுத்துப்படித்தவன் பாட்டைக்கெடுத்தான்.பதுங்கியிருந்ததாக சொல்லி பாதிக்கெடுத்தார்.மிஞ்சுவதற்கு ஒன்றுமில்லாமல் மீளவும் கெடுத்தான் எழுத்துக்கூட எங்களால் படிக்க முடியவில்லை. இரைக்காக நெல் கிடைப்பது என்பதற்காக நீட்டிப்ச்சிறையில்லுள்ள கிளி வெளிய வந்து இந்த சீட்டை எடுத்துக்கொடுத்து விட்டது.இது தெரிந்த பிறகும் அறிஞர் மா வே பசுபதி ஊ வ ...
POST: 2013-04-25T14:26:04+05:30
நான் சென்னையில் பிறந்தவன்,இராயப்பேட்டையில் வளர்ந்தவன்.பதினாறு ஆண்டுகள் நான் தொடர் வண்டியிலேயே சென்றதில்லை. காளை மாடுகள்,கன்றுகள்,எருவட்டி,பின்ணாக்கு,சோழி,பல்லாங்குழி, ஏர் உழுதல்,கூழ் இவைகளை பார்த்ததில்லை. என் தந்தையாரோடு ஒரு முறை வடலூர் சென்ற பொழுது இரட்டை மாட்டு வண்டியில் சென்றேன்.இதனால் நான் செல்வக்குடும்பத்தை சேர்ந்தவன் இல்லை என்பது பொருள்.ஏறத்தாழ சென்னை,மும்பை,பெங்களுரு ஒரு பகுதி திருச்சி என்று கணக்கிட்டால் மூன்று கோடி தமிழர்களுக்கு வயல் வெளிகளின் வாழ்வே தெரிவதில்லை.நாட்டுப்புற வாழ்வு என ...
POST: 2013-04-24T09:26:55+05:30
கனல் தெறிக்கும் வசனங்களை பேசிய கண்ணாம்பா பற்றி கதை கதையாக சொல்வார்கள்.உயரமான கண்ணகி உருட்டும் விழிகளோடு வசனம் பேசினார்.நீண்ட வசனங்களை தொடர்ந்து பேசி வெற்றிப்பெற்றார்.அதனால் தான் பொறுத்தது போதும் மகனே பொங்கியெழு என்ற வசனத்தை பசுபலேட்டி கண்ணாம்பாவை நடிக்க வைத்தார்கள் 1940 ல் கண்ணாம்பாவிற்கு அறிமுகப்படமான கிருஷ்ணன் தூதுவில் இந்த அம்மையாரின் தமிழ் ஒலிப்பு ஆந்திர ஒலிப்பாக இருந்தது என்பதால் படமே தோற்றது.எண்ணி இரண்டு ஆண்டுகள் கழித்து கண்ணாம்பா நடித்த கண்ணகி படம் கண்ணாம்பாவின் வசன உச்சரிப்பால் வெற்றிச் ...
POST: 2013-04-23T17:51:30+05:30
இன்று நாடக வேந்தர் ஷேக்ஸ்பியரின் 450வது பிறந்த நன்னாள். நானிலத்திலுள்ள 1222க்கும் மேற்பட்ட நாடக மாந்தர்களின் காதல்,களிப்பு,வேதனை,வெற்றி,துயரம்,துடுக்கு,மிடுக்கு ஆகிய அத்தனை இயல்புகளையும் சித்தரித்த பேரறிஞர் ஆவார். பொதுவாக ஆங்கிலம் நன்றாக தெரிந்தவர்களே 20,000 சொற்களுக்கு மேல் பயன்படுத்த இடறுவார்கள். 66,534 சொற்களை பூக்களைப்போல அள்ளிச்சொறிந்த அறிவின் வியப்பு ஷேக்ஸ்பியரின் மதிப்பாகும்.
POST: 2013-04-22T16:42:47+05:30
பாரதியாரும் பகவத்கீதையும் 2007 ஆம் ஆண்டில் முனைவர் சீதரன் எழுதிய நூல் நூலகத்துறையின் தெரிவுக்குழுவால் தள்ளப்பட்டுவிட்டது.அச்சடித்த ஆயிரம் படிகள் அப்படியே இருக்கின்றன. பாரதியாரை பிடிக்கவில்லையா?ஸ்ரீதரனை பிடிக்கவில்லையா?என்று அறிஞர் எஸ் முத்தையா 18.4.2013 இந்து நாளிதழ் மூலம் கேட்டுள்ளார் இந்த அழகில் புத்தக விற்பனையாளர்கள் இரு குழுவாக போட்டியிட்டு கண்கூடாக நிற்கிறார்கள்
