POST: 2013-03-27T19:35:07+05:30

ஒய்வு பெற்ற மேற்கு வங்க கூடுதல் தலைமைச்செயலாளர் திரு கா பாலச்சந்திரன் தலைமையில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அரசு செயலரின் முன்னிலையில் கொல்கத்தா தமிழ் மன்றத்தில் சனிக்கிழமை (23.3.2013) வாழ்த்துரை வழங்கினேன்

POST: 2013-03-17T20:53:05+05:30

இன்று மாலை அரசு அருங்காட்சியக அரங்கத்தில் திருக்குறள் தேசிய நூல் கோரிக்கை மாநாட்டின் நிறைவு விழாவில் உரையாற்றினேன்

POST: 2013-03-15T00:08:24+05:30

ஒரு நூலை அப்படியே பிரதி செய்யக்கூடியவர்கள் இந்நாளில்லை.சுவடியைக்கண்டால் இக்காலத்தில் ஓட்டம் எடுக்கிறார்கள்.அன்புடையவர்களுக்கே அந்த வேலையைச் செய்வது சாத்தியம்.ஒப்பு நோக்கும் போது சரியாக இருக்கிறதா என்று கேட்டால் அன்பில்லாதவர்கள் சரியென்று சொல்லி விடுவார்கள்.1927ல் தமிழ்க்கடல் உ வே சா கூறியது. இப்போது முதுகலை தான் தகுதியேத்தவிர அன்பு இருக்கிறதா என்று எப்படிக்கேட்பது? இந்த அழகில் சுவடியியல் என்றேத்துறைகள் சில நிறுவனங்களில் பல்லாண்டுகளாக இருக்கின்றன. இருந்தமிழே உன்னால் இடர்ப்படுகின்றேன் பொருந்தும ...

POST: 2013-03-14T23:51:51+05:30

சங்க இலக்கியப்பதிப்பினை எட்டு நிறுவனங்கள் வெளியிட்டுள்ளன.வேலையில்லாததால் ஓய்வுப்பெற்றவர்கள் பதிப்புப்பணியில் மீண்டும் இறங்கியிருக்கிறார்கள்.இலட்சியம் இலட்சத்தில் இருக்கிறது என்று சங்க இலக்கிய ஆர்வலர் அழுது தீர்த்தார்

POST: 2013-03-14T23:44:18+05:30

யோகம் என்பது வெறும் உடற்பயிற்சி.இதனைத் துறவிகள் தொட்டதால் கெட்டது,கடவுள் நிறத்தை கலந்ததால் கறைக்கப்பட்டது.யோகி என்ற பெயரை வைத்துக்கொள்வது ஒரு வழக்கமாகி விட்டது. முன்னரே சோவியத்து நாடு இதை தடை செய்தது.அமெரிக்காவுக்கு இப்போது தான் விழிப்பு ஏற்பட்டிருக்கிறது. கால் மடக்கி அமர்வதென்பதை எதையோ பெரிய கலையென்று சொல்லி பத்மாசனம் என்று பெயரிட்டார்கள். பொய்ப்புரட்டுக்கு ராமானந்த யோகியென்று பெயரிட்டார்கள்.சூது மதி படைத்த சுந்தர கோஷ் என்று வேலைக்காரியில் அந்தப்பெயர் எப்படி தோன்றியது என்பது தெரியமாலே திர ...

POST: 2013-03-14T23:23:58+05:30

மராட்டிய மாநிலத்தில் கூடுதல் தலைமைச்செயலாளர் பள்ளிக்கல்வித்துறைக்கும் செயலாளராக இருக்கிறார்.நாமிருக்கும் நாடு என்பதையோ,அதன் அரசமைவுப்பற்றியோ அறிந்தவர்களாக இல்லை.மாணவ மணிகளுக்கு தமிழ்த்தாய் வாழ்த்துப்போல இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின் முகப்புரையை மாணவர் கூட்டத்தில் அன்றாடம் காலைக்கூட்டத்தில் அறிவுறுத்த வேண்டும் என்ற அரசாணை வெளியிடப் பெற்றுள்ளது

POST: 2013-03-14T23:09:24+05:30

என்றும் மாறாத தமிழ் என்ற தொடரால் கடந்த ஆண்டு பொதுத் தமிழ்ப்பாடத்தேர்வில் கேட்கப்பட்ட வினாக்களே இவ்வாண்டும் நூற்றுக்கு எழுபது விழுக்காடு அதே கேள்விகள் எண் தவறாமல் இடம் பெற்றுள்ளனவாம். எவர் கண்ணுக்குத்தெரியப்போகிறது என்றும் மாறாத தமிழ் என்பதை வலியுறுத்தி எட்டாண்டுகளாக மாற்றாமல் உள்ளது. இந்த ஏமாற்று வேலை எவரால் எப்படி நடக்கிறது என்று தமிழ்ப்பெரியசாமி தினமணி 9.3.2013யில் வெளியிட்டுள்ளார்

POST: 2013-03-10T19:45:51+05:30

யானை கட்டி போரடித்து அறுவடை செய்தாலும் தஞ்சைக்கழனியில் விளைந்த நெல்லை விட பீகார் மாநிலத்தில் இருபது மடங்கு அதிகமாக விளைகிறதாம்....

POST: 2013-03-10T19:33:48+05:30

பாரத நாட்டில் எந்த மாநிலத்தில் கணினிப்பயற்சி மேலோங்கிருக்கிறது என்பதற்கு புள்ளி விவரம் உண்டா? எழுத்தாளர் சுஜாதா தான் மென்பொருள்,வன்பொருள் என்ற சொற்களை முதலில் குறித்தார் என்கிறார்கள்.இப்போது தான் செயலி/நிரலி என்று சொன்னாலும் எடுபடவில்லை.இன்றும் மென்பொருள் தான் மேலோங்கிருக்கிறது.வன்பொருள் என்ற வன்முறை தான் வலிமை பெற்றிருக்கிறது...

POST: 2013-03-10T12:20:53+05:30

ஷேக்ஸ்பியருக்கு அமெரிக்கப் பதிப்பும் ஆஸ்திரேலியப் பதிப்பும் அங்கங்கே வாழ்கிறவர்களால் பதிப்பிக்கப்பட்டுள்ளன. தமிழில் திருக்குறளுக்கு இலங்கைப் பதிப்போ, மலேசியப் பதிப்போ, சிங்கப்பூர் பதிப்போ இன்றுவரை வெளிவரவில்லை. சிங்கப்பூர் பதிப்பு வந்திருந்தால் அவர்களுக்குத் தெரிந்த அச்சு நேர்த்தியில் தீப்பெட்டி அளவுக்கு மெல்லிய பதிப்புக்களை வெளியிட்டிருக்கலாம். சிங்கப்பூர் தமிழர்களோடு சீனர்களும் மலாய்க்காரர்களும் தோளோடு தோள் இணைகிறவர்கள். இவர்கள் அந்தந்த மொழிகளில் தங்கள் இலக்கியங்களை பகிர்ந்து கொண்டிருக ...